
தமிழக முதல்வர் எடப்பாடி அவர்களின் தாயார் இறந்ததற்கு திமுக தலைவர் ஸ்டாலின் விசாரித்து ஆறுதல் கூற சென்றிருக்கிறார். இது பற்றிய மக்கள் கருத்து என்ன? வாருங்கள் வாசகர்களை கேட்போம்.

சசிகுமார், ஆதம்பாக்கம் - சென்னை.
“மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு” என்ற அண்ணாவின் கொள்கை இதுதான்.
இனி இந்த பண்பாடு அரசியலுக்கு அப்பாற்பட்டு தொடரவேண்டும். எடப்பாடியும், கலைஞர் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

கிருஷ்ணகுமார், வேளச்சேரி - சென்னை.
“அது தான் நாகரீகம்.. எல்லாரும் கடைபிடிக்க வேண்டிய நல்லப் பண்பு. வைகோ, திருமாவளவன் போன்ற மற்ற தலைவர்களும் இபிஎஸ் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க சென்றது தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை உண்டு பண்ணுகிற, நாகரீக அரசியல் என்று கருதுகிறோம்.
இந்த நாகரிகம் எப்போதும் எல்லா கட்சிகளிடமும் இருக்க வேண்டும். தலைவர்கள் இது போல் இருந்தால்தான் தொண்டர்களும் இதேபோல் இருப்பர்.”

வெங்கடேஷ், அமெரிக்கா
“காலைல நலம் விசாரிச்சிட்டு, சாயந்தரம் சண்ட போட்டுப்பீங்க. இது தான் அரசியல்வாதிகளோட நாகரீகம். நல்லா பண்ணுரீங்கய்யா ஏமாத்துற அரசியல் ..”

சதீஷ்குமார் சாந்தாராம், அமெரிக்கா.
“இது தான் சிறந்த மனிதநேயம்...
அரசியல் தலைவர்கள் எல்லாம் ஒற்றுமையா ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து, ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள். தொண்டர்களும், தலைவர்களின் அடிவருடிகளும், காக்காய் கூட்டங்களும் தான் அடித்துக் கொண்டு சாகிறார்கள். இதை உணர்ந்து, இனி எங்கிலும் மனிதநேயம் கொண்டு வாழ்ந்தால் நலம்.”
சதீஷ் சுந்தரம், சென்னை
“ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தார்கள்னு சொல்ல, இப்ப எங்க சின்னம்மா சசிகலா இல்லையே என்கிற தைரியத்தில் நடந்த சந்திப்பு தாங்க இது..”
கார்த்திக், சென்னை.
“The way I look at it - What Stalin has done is very humane and basic courtesy. It is something that should not be celebrated as a great thing. He has just done something that everybody has to do. It is almost derogatory to the politicians community if we are appreciating Stalin for doing this. Politicians are not that bad humans to not expect this basic courtesy."
வித்யாகர், ஹாங்காங்.
“ஸ்டாலின் பாராட்டுக்குரியவர். தன்னுடைய தந்தையை புதைப்பதற்கு இடம் கொடுக்காவிட்டாலும் கூட எடப்பாடி தாயின் மறைவுக்கு துக்கம் கேட்க சென்ற மரியாதைக்கு நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்.”
சிவா பெரியாகுறிச்சி, அரியலூர் மாவட்டம்.
“ஆரோக்கிய அரசியல் வரவேற்கத்தக்கது. முதல் முறையாக நடக்கிறது என்று நினைக்கிறேன்.”
கிருஷ்ணசாமி, ஹாங்காங்
“காமராஜர் அண்ணாவை சந்தித்திருக்கிறார்..
பெரியார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை சந்தித்திருக்கிறார்..
கலைஞர் வி.என்.ஜானகியை சந்தித்திருக்கிறார்...
கடைசியாக ராஜாத்தி அம்மாள் சசிகலாவை சந்தித்திருக்கிறார்..
இது நடந்தது தமிழகத்தில் தான். ஆக இது புதிதுஅல்ல என்று நினைக்கிறேன். இருந்தாலும் நல்ல விஷயம் தான்.”
வினோத். போடிநாயக்கனூர்.
“அரசியல் காரணங்கள் பல பின்னால் இருந்தாலும் முதல்வரின் துக்கத்தை அனுசரிக்க ஸ்டாலின் அவர்கள் சென்றது பாராட்டுதலுக்குறியது. இருவரும் வசை பாடும் தன்மை குறைந்து ஒரு இணக்கமான சூழ்நிலை ஏற்படும். இறுதியில் எந்தகட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு நன்மை செய்தால் சிறப்பு.”
Lakshminarayanana, chennai
I think this is a good beginning in Tamil Nadu politics where the politicians lack common courtesy and humanitarian gesture Only recently vaiko found fault with a condolence letter from Amitsha to EPS on his mother's demise in Hindi stating that it is Hindi imposition.Even this basic courtesy late JL was lacking if my memory is correct.

தயாநிதி,_வேலூர்.
திரு. ஸ்டாலின் அவர்கள் சி.எம் வீட்டுக்குச் சென்று அவரது அன்னைக்கு அஞ்சலி செலுத்தியதை நான் ஒரு நல்ல விஷயமாக பார்க்கிறேன். இருவரும் .அரசியலில் எதிர் எதிர் நிலைப்பாடுகளைக் கொண்டவர்கள், கொள்கை சார்ந்து மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டவர்கள். ஆனால், ‘ஒரு இறப்பு, ஒரு இழப்பு’ தரும் வேதனையில் ஆறுதல் சொல்லும் மனிதப் பண்பை ஸ்டாலின் இந்த நிகழ்ச்சி வழியாக காட்டி இருக்கிறார். இது நெகிழ்ச்சியான விஷயம். தாய்மை என்பது மனிதரை ஒன்றிணைக்கும் ஒரு சக்தி. அந்த சக்திக்கு தலை வணங்கி இருக்கிறார் அவர். எனவே இதை அரசியலாக பார்க்காமல், ஸ்டாலின் என்னும் தனி மனிதரின் நல்ல பண்பாக மட்டுமே பார்க்கிறேன். பொது மேடைகளில் ஒருவரை ஒருவர் விமர்சித்தல், கட்சி சார்ந்த விஷயமாக இருந்தாலும், தனிப்பட்ட விதத்தில் நட்பு கொண்டு இருப்பது அரசியல் நாகரிகம். இது போன்ற நேர்மறையான நிகழ்ச்சிகள், மக்கள் மத்தியில் நல்ல எண்ணத்தை பரப்பும். இது இரண்டு கட்சிகளுக்குமே நன்மை தரும் என்று நான் நம்புகிறேன்.

Leave a comment
Upload