தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்


20210021174650131.jpeg


சுகம் நல்கும் சுக்கான் கீரையைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்!! - மீனாசேகர்.

Summa thanaave valarra payanulla sukkan keeraiyi vittutu kaasu koduthu veraya. no chance. Hereafter sukkan keerai will be used regularly.

எஸ்.சாய்லக்‌ஷ்மி


கரும்பு போல் வாழ்க்கை இனிக்க கரும்பாயிரம் பிள்ளையாரை தரிசிப்போம்!! - ஆரூர் சுந்தரசேகர்.

Karumbayiram pillaiyar is tasting very sweet. The history of the temple is further honeyed by the writer very elegantly. Thanks to Aroor Sundarasekar.

எஸ்.சாய்லக்‌ஷ்மி


உலகம் சுற்றும் விகடகவி அமெரிக்காவின் புதிய அரசு !! ராம்.

News from our neck of the woods. Still, Raja and Rani are there in chess.

விஎல், ஐஎல்


சாதனை நாயகன் ராஜேஷ்குமார்.. "க்ரைம் கதையின் ஹீரோ" - வேங்கடகிருஷ்ணன்

எழுத்தாளர் ராஜேஷ்குமார் பற்றிய வெங்கடகிருஷ்ணனின் நறுக், சுருக் கேள்வி-பதில் மிக அற்புதம்.

சுகுணா வேலன், கருணாகரச்சேரி


"கங்காருவை ஓட ஓட விரட்டிய இந்தியா.." - வேங்கடகிருஷ்ணன்

கிரிக்கெட்டில் கங்காருவை ஓட ஓட விரட்டிய இந்திய இளம் வீரர்கள் அணி பாராட்டுக்கு உரியது.

ஜமுனா பிரபாகரன், ஊத்துக்கோட்டை


மாண்புமிகு மனிதர்கள்..! - ஜாசன்

அந்தக் கால டூரிங் டாக்கீஸ் பற்றியும், சிவாஜி-எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்களின் தன்னலமற்ற சமூகசேவை குறித்தும் மாண்புமிகு மனிதர்கள் தொடரில் மிக அழகாக விளக்கியது, என் பருவகால நினைவுகளை தூண்டியது. ஃபர்ஸ்ட் கிளாஸ்!

ராதா வெங்கட், ஆலப்பாக்கம்


ஆலமரம் மீண்டும் சரிந்தது ! மருத்துவர் சாந்தாவிற்கு விகடகவியின் அஞ்சலி ! ராம்

மறைந்த டாக்டர் சாந்தாவின் அர்ப்பணிப்பு, கான்சர் நோயாளிகளுக்கு அவரது மருத்துவ சேவை, பிறர் மீதான அபிமானம் போன்றவற்றை படித்து, எனது கண்களில் நீர் தானாக கசிந்தது. அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் கட்டுரை மிக அருமையாக இருந்தது.

குருமூர்த்தி, வேளச்சேரி


சாதனை நாயகன் ராஜேஷ்குமார்.. "க்ரைம் கதையின் ஹீரோ" - வேங்கடகிருஷ்ணன்

எழுத்தாளர் ராஜேஷ்குமார் குறித்த தகவல்கள் மிக சிறப்பு. அவரது ஒவ்வொரு வார்த்தைகளும் அழகிய முத்துமாலையாக ஜொலித்தது. கேட்ட கேள்விகளும், அவரது பதில்களும் ரத்தினச் சுருக்கமாக அமைந்தன. மிக நன்று.

ராமச்சந்திரன் வி.கே, மும்பை


மிஸ்டர் ரீல்...! - ஜாசன்

விடாக்கண்டன், கொடாக்கண்டன் ஆகியோரின் மேனரிசங்கள், செயல்பாடுகளை புட்டுப்புட்டு வைக்கிறீங்களே மிஸ்டர் ரீல்... அப்ப, நீங்க ஏன் நான்காவதா 'காசு வாங்காமல் ஓட்டு போடும் கூட்டம்'னு ஒரு அணி அமைக்கக்கூடாது?

பார்த்திபன், ராஜா, விழுப்புரம்


வாட்சப்பா ஆள விடுப்பா..!! - ராம்.

வாட்ஸ் அப் செயலியின் நடவடிக்கை பற்றி கம்ப்யூட்டர் நிபுணர்களை கருத்து கூறவைத்து, எங்கள் தலையை சுற்ற வைத்துவிட்டீர். தேர்தல் பிரசாரத்தில் கேன்வாசிங், பணப் பட்டுவாடா பற்றி வாட்ஸ் அப்பில் தகவல் தர்றதா சொன்னாங்க. இப்போ... அதுக்கும் ஆப்பா?

செந்தில் குமார், கரூர்


கரும்பு போல் வாழ்க்கை இனிக்க கரும்பாயிரம் பிள்ளையாரை தரிசிப்போம்!! - ஆரூர் சுந்தரசேகர்.

கும்பகோணம் கரும்பாயிரம் பிள்ளையாரை பற்றி படித்ததும் அவரை நேரில் பார்க்கும் ஆவலை தூண்டிவிட்டன. இம்மாதத்துக்குள் நிச்சயம் ஒரு நாள் கரும்புடன் சென்று தரிசிப்பேன். மிக்க நன்றி.

வசிகரவாணி, திருமுல்லைவாயல்


கோழிமுட்டையில் பாம்புக் குட்டி..! - கோகிலவாணி

கோழி முட்டையின் மஞ்சள் கருவில் பாம்பு குட்டியா? இனிமே கோழி முட்டையைக்கூட ஸ்கேன் செஞ்சு பார்த்துதான் வாங்கணும் போல!

செல்வராஜ், கானாத்தூர்


கேரக்டர் - அறியப்படாத மனிதர்கள்.. - 3 - வேங்கடகிருஷ்ணன்

அறியப்படாத மனிதர்கள் 3-ல் கண் டாக்டர் கணேஷின் கேரக்டர் பற்றி நீங்கள் கூறியது நிஜமே... எனது தாய்க்கு இதேபோல் 2 கண்களிலும் பார்வை குறைபாடுக்காக அழைத்து சென்றிருந்தேன். அவரது 2 கண்களும் சரியான பிறகே கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து குறைந்த தொகையே வாங்கியதை மறக்க முடியாது.

ஜெயஶ்ரீ ராமன், பெரம்பூர்


ஆன்மீக ஆசான் - 23 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

ஆன்மீக ஆசான் 23-ல் வெளியான கருத்துக்கள் ஆத்மார்த்தமாக இருந்தது. அதில் இருந்த ஒவ்வொரு வார்த்தைகளை அனைவரும் கடைப்பிடித்தாலே வாழ்க்கை சுபிட்சம் அடையும். மிக சிறப்பு.

பாக்யலட்சுமி, மடிப்பாக்கம்


வாவ் வாட்ஸப்!

வாட்ஸ் அப் படங்கள் செம அசத்தல். அதிலும் ஊசி பயந்தாங்கொள்ளி, இணை டைவிங், ஏழை ஜிம்னாஸ்டிக் ரசிக்கும்படியாக இருந்தது. டோட்டலி... வீ லவ் விகடகவி!

சூர்யா, ராகுல், கௌஷிக், சென்னை


விகடகவியார்

விகடகவியாரின் அரசியல் தகவல்கள் நெய்யில் சூடான சர்க்கரை பொங்கலாய் இனித்தது. இப்பவே இவ்ளோ தகவல்னா, தேர்தல் கூட்டணி... பாமக உள்ளிட்ட பல்வேறு துணை கட்சிகளின் தாவல்... பேரம் உள்ளிட்ட நொறுக்கு தீனிகளையும் எதிர்பார்க்கிறோம். தேர்தல் வருதுல்ல... கொண்டாட வேண்டாமா?

ரேணுகா ஹரி, மயிலாடுதுறை


கடவுளின் புதிய அவதாரம்? அடார் பூனாவாலா!! - ராம்

கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த சீரம் நிறுவன தலைவர் அடார் பூனவாலாவின் வாழ்க்கை முறை சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அதேபோல் அவரது கண்டுபிடிப்புகளும் சிறப்பாக அமையட்டும். மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கட்டும்.

கண்ணபிரான், சேத்துப்பட்டு


சேனல் டாக்! - 10 - மெகா மாலினி

ஆரியின் உண்மைத்தன்மை, விடாமுயற்சி, தன்னடக்கம் போன்றவைதான் அவரை மக்களின் அபிமானத்தை பெறமுடிந்தது. அதுவே அவரது வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது. அதே வேகத்தில் விகடகவி சேனல் டாக்கில் செய்தி வெளியிட்டு வாசகர்களின் மனதை கவர்ந்துவிட்டீர்!

சியாமளா விஸ்வம், ராயப்பேட்டை


வந்தார்கள்... வென்றார்கள்... - 22 - மதன்

மதனின் வந்தார்கள், வென்றார்கள் தொடரில் ஷெர்ஷாவின் பாய்ச்சல், ஹுமாயூனின் பரிதாப நிலையை படித்தபோது, இயக்குநர் விசுவின் குடும்ப படக் காட்சிகளை பார்ப்பது போலிருந்தது.

ரவிசங்கர், சேலம்


சுகம் நல்கும் சுக்கான் கீரையைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்!! - மீனாசேகர்.

எங்க வீட்டை சுற்றிலும் நிறைய வளர்ந்திருந்தாலும், சுக்கான் கீரையின் அருமையை தெரியாமல் இருந்தோம். நீங்கள் சொல்லியதும் தினந்தோறும் சுக்கான் கீரை வாசம்தான் எங்களுக்கு.

புருஷோத்தமன், வெள்ளவேடு


ராக தேவதைகள்... - 22 - மாயவரத்தான் சந்திரசேகரன்

ராகதேவதை தொடரில் ப்ரியா சகோதரிகள், மகாராஜபுரம் சந்தானம், எஸ்பிபி போன்ற பிரபல பாடகர்களின் பாடல்களை பற்றி கூறினீர்கள். ஆனால், அது ராகம் என்பதுதான் புரியவில்லை. குழம்பிய குட்டையில் மீனை தேடுவது போல் என்ன ராகம் என பார்க்க வேண்டியிருந்தது.

சிந்தாமணி ராஜசேகர், திருத்தணி


மாஸ்டர் அரசியல்! - நமது நிருபர்

மாஸ்டர் படத்தைவிட, அதன் வெளியீடு தொடர்பான பின்னணி விவரங்கள் செம 'கிக்'கா இருந்தது. ஓராண்டு கொரோனா தடைக்கு பிறகு முதல் படமாக மாஸ்டர் படம் வெளியானதால் எல்லா வகையிலும் 'ஓஹோ'தான்!

மாலினி சந்திரசேகர், பெரவள்ளூர்


வலையங்கம்

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சுமார் 50 நாட்களுக்கு மேலாக விவசாயிகளின் போராட்டம் நடைபெறுகிறது. ஆனால், முதலாளித்துவ மனப்பான்மையில் விவசாயிகளை சந்தித்து பேச பிரதமர் விரும்பவில்லை என்றே கருத தோன்றுகிறது. ஏனெனில், முதன்முதலில் பிரதமராக இருந்தபோது, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி கணைகளுக்கு பயந்து வெளிநாடுகளில் சுற்றி திரிந்ததை உதாரணமாக விவசாயிகள் கூறுகின்றனர்.

வைஷ்ணவி வாசுதேவன், தஞ்சாவூர்


சாதனை நாயகன் ராஜேஷ்குமார்.. "க்ரைம் கதையின் ஹீரோ" - வேங்கடகிருஷ்ணன்

அவர் கோவையை சேர்ந்தவர் என்பதால் கோவையை சேர்ந்த நான் பெருமை கொள்கிறேன்

எஸ். பார்கவன், அமெரிக்கா


சாதனை நாயகன் ராஜேஷ்குமார்.. "க்ரைம் கதையின் ஹீரோ" - வேங்கடகிருஷ்ணன்

அருமையான கட்டுரை. ரொம்ப நாட்களாக நானும் கூட ராஜேஷ்குமார் ஏதோ பாக்கெட் நாவல் எழுத்தாளர் என்று சீரியசாக எடுத்துக் கொண்டதில்லை. அடேங்கப்பா. அவர் ஒரு சாதனையாளர் தான். விரைவில் ரூபால கிடைக்க வாழ்த்துக்கள்.

ரமணா, சென்னை


மாஸ்டர் அரசியல்! - நமது நிருபர்

1.சமூக சிந்தனை என்பது எள்ளளவும் இல்லாமல், காசு சம்பாதிக்க எந்த எல்லைக்கும் செல்லும் இவர்கள் எல்லோரும் சமூக துரோகிகள் தான். 2.திரும்ப தொற்று பெருகாமல் இருக்க....கடவுளின் அருள் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வது தான் ! 3.லஞ்சம், மற்றும் கருப்பு பணம், வரி. ஏய்ப்பு...இன்னொரு வியாதி...

எஸ். பார்கவன், அமெரிக்கா


வலையங்கம்

அதற்கென ஒரு மந்திரி இருக்கும் போது அவர்தான் அந்த விஷயமாக விவாதங்களை கையாள வேண்டும். அவர் சரியாக செய்து கொண்டு இருக்கிறார் என்று பிரதமர் கருதி வேறு வேலைகளை கவனிக்கலாம். எல்லா விஷயங்களிலும் பிரதமர் நேரடியாக வர வேண்டிய தேவை இல்லை.

எஸ். பார்கவன், அமெரிக்கா


கடவுளின் புதிய அவதாரம்? அடார் பூனாவாலா!! - ராம்

Nice continuation of the previous article on the COVID vaccine. How is India going to manage the vaccine rollouts considering the huge population? It Will be interesting to read that too.

வாரா, அமெரிக்கா


“பிரேக்கிங் நியூஸ்” - வெ.சுப்பிரமணியன்

Sir, Sema...athuvum ahtha style vathiyar.... great!

சக்தி சரவணன் சின்னசாமி, மும்பை