ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் என்று பழைய பாண்டிய ராஜன் படம். அதில் மாப்பிள்ளை வீட்டுக்கும் பெண் வீட்டுக்கும் சம்பந்தமேயில்லாமல்
ஒரு ஓரமாக உட்கார்ந்து பாண்டியராஜன் மொய் வசூல் செய்வார். மாட்டிக் கொள்வார். எவர்கிரீன் காமெடி.
இனி இது போன்ற காமெடிகளுக்கு வாய்ப்பில்லை.
மொய் வசூலை டிஜிட்டல் இந்தியாவான பின் எல்லாமே டிஜிட்டல் மயமாக மாற்றி விட்டார்கள். மாப்பிள்ளை, பெண் அருகே அமர்ந்து மொய் வாங்கி அதை அக்கறையாய் ஒரு 40 பக்க நோட்புக்கில் எழுதிக் கொள்ளும் வேலையும் இல்லை.
மேலும் கவர்ல நான் ஐநூறு வெச்சிருந்தேனே... வரலையா..? என்பது போன்ற சவடால்களும் விட முடியாது.
Leave a comment
Upload