தொடர்கள்
கவிதை
காதல் பொது மறை - 20 - காவிரி மைந்தன்

20210001161116349.jpg

2020112522131725.jpg

காவிரி மைந்தன்

20210022063304143.jpg

சுதந்திரம் கொஞ்சம் தந்துவிட்டால்!


அன்பே!
எத்தனை மடல்கள் எழுதினால் என்ன? அடுத்த மடலும் வருகிறதல்லவா..

அந்த அலைகளைப் போலவே! அதையும் நீயும் வாசிக்கும் அழகை நேரடியாகப் பார்ப்பதில் கோடி சுகம்!

வண்ணமுகத்தில் வந்து வந்துபோகும் அந்த வெட்கம்.. உன்னை எனக்கே உரிமையாக்குகிறது!

என்னை உனக்கே அடிமையாக்குகிறது!

சின்னச் சின்ன விஷயங்கள்தான்.. மனம் ஓடிவந்து உன் மடியில் விழுகிறது!

கண் அசைவு.. காத்திருப்பு.. கதையளப்பு என காதலில் பல்வேறு நிலைகள்! கனிவது காதல் என்று காத்திருப்பது காய்ப் பருவம்!

கனிந்தபின் கரங்கள் பற்றுவது கலவியல் பருவம்!

நினைந்து அதனை ரசித்திருப்பது.. அது நித்தமும் வளரும் பருவம்! ஆசை மலரும் பருவம்!!

முன்னொரு நாள் உன் முந்தானையில் நீ தலை துவட்டி விட்டபோது.. கலகலவென்று சிரித்தாய்.. எதற்கடி என்றேன்!

சும்மா இருக்க மாட்டீர்களே.. சுதந்திரம் கொஞ்சம் தந்துவிட்டால் என்று எண்ணிப் பார்த்தேன் என்றாய்!

அடியே கள்ளி.. அவசியத் தேவைகள் எதுவாகிலும் அதை பூர்த்தி செய்வது என் கடமை என்று அங்கங்கே கை வைத்தேன்!

அம்மம்மா என்றாய்! ஆசையில் கனிந்த கனிகளா இவை என்று ரகசியமாய் கேட்டேன்! கேட்டுச் சொல்கிறேன் என்றாய்? யாரை என்றேன்!

படைத்தவனை என்றாய் பகிரங்கமாக!!

நள்ளிரவில் கொஞ்சம் கண்ணயர்ந்த நேரம்.. உன் காதருகே வந்து மயிலிறகால் வருடி.. இமைக்கதவை மீண்டும் திறந்து வை என்றேன்!

சுகமான தூக்கம் வருகிறவழியில் தடையேன் கண்ணா என்றாய்! மறுமொழி பேச மயக்கம் விடவில்லை! மயங்குகிறேன் என்றாய்!

கட்டிலதன் கால்கள் நடனமிட காதல் ராஜ்ஜியத்தை அரங்கேற்றினாய்! பட்டுப்பூவைப் போல் உன் கன்னம் முத்தங்களாலே மூழ்க வைத்தேன்!

திரும்பத் தருவதில் உன் பழக்கம் வழக்கம்போலவே குறைவானது! குறைவாய் இருப்பினும் நிறைவாய் கிடைக்கும்போது இன்னும் என்ன குறை என்றாய்!

விழியோரப் பாடங்கள் மொழி பேசும் நேரங்கள்.. இதுபோல இன்பங்கள் இன்னும் உண்டா சொல்லுங்கள் என்று கனிவாய் மொழி சொன்னாய்!

பூத்தவிழி பார்த்தபடி.. புன்னகையில் பூத்தகொடி.. என் தோளில் சாய்ந்தபடி.. கவிதையொன்று சொல் என்றேன்!

ஆர்த்தெழும் ஆசைகளை அப்படியே காட்டாமல்.. அடக்கிவைத்த ரகசியத்தை அன்பே உன்னிடம் ஒப்புவித்தேன்! தலைகால் புரியாமல் ஓட்டம்!

முதல் நாள் உன் கிளிமொழியைக் கேட்டேன்!

இதுநாள் வரை நான் காணா இன்பம்.. வழங்க வந்தாய் நீயும்!

வசந்தம் என்றே நானும் வளைத்துக்கொண்டேன் உன்னை!

அணைத்துக் கொண்டாய் என்னை! மொத்தமாய் பரிசு ஒன்று இப்படிக் கிடைக்குமென்று கனவிலும் நினைக்கவில்லை!

கள் மயக்கம் கொள்கிறேன்! காதலில் விழுந்த நாள் முதலாய்!

பெண் மயக்கம் அல்லவா பேரின்பம் என்கிறேன்!

சொல் மயக்கும் என்பதை சொல்லிச் சொல்லிக் காட்டுகிறீர் என்று உன்னிதழின் உச்சரிப்பில் உயிர்வரை இனித்திடச் செய்தாய்!

அன்புமன வீணையில் நீ ஆனந்த மோகனம் வாசித்தாய்!

இன்று பூத்த மலரைப்போலவே என்றும் திருமுகம் காட்டுகிறாய்! வண்ண அணிகளும் வசப்படும் உன் அழகில்தானவை சுகப்படும்!

சின்னச் சின்ன ஆசைகள்.. என்ன செய்யலாம் சொல்லடி.. என்றேன்!

என்ன என்னவோ? கண்ணைக் கொஞ்சம் மூடு! கவிதை நீயும் பாடு!

உச்சி முதல் பாதம் வரை நடக்கட்டும் ஒரு விளையாட்டு !

விழியைத் திறக்கச் சொல்லும்வரை வழியே இல்லாமல் நீ தவிக்க..

இன்பராத்திரி ஆனது! இருவர் கண்ணிலும் தூக்கம் போனது!

விடியும்நேரம் வரைக்கும் வளையல்கூட வலிக்கும்!

கழட்டு அதை என் கண்ணே என்று கண் ஜாடையில்தான் சொன்னேன்!

புரட்சியது வெடிக்கும்!

பூவிதழ்கள் திறக்கும்!

மறுஜென்மம் வரைக்கும் மறக்கவில்லை நமக்கும்!

பூங்குயில்கள் மெல்ல தன் குரலில் பாடும் பூபாளம் போலும்.. அதிகாலை வருவதனை அடையாளம் காட்ட..

பஞ்சணையில் மீண்டும் புதிதாக நுழைந்தோம்.. சரிபங்கு வேண்டும் என்று பிடிவாதம் ஏனோ என்று நீ முணுமுணுக்க..

எதிர்வாதம் செய்யாமல் சரண் அடைந்தேன் நானும்! சரி சரி.. என்றாய்..

அது என்னடி?