
நடிகை குஷ்பு பாரதிய ஜனதாவுக்கான தனது தேர்தல் பிரச்சார மேடை ஒன்றில் திமுகவின் ஸ்டாலினை சமீபத்தில் கடுமையாக தாக்கிப் பேசி விட்டார். அதாவது தான் திமுகவை விட்டு விலகிய சமயத்தில் தன் வீட்டின் மீது திமுக தொண்டர்களை விட்டு கல்லடிக்கச் செய்ததே ஸ்டாலின் தான் எனும் வகையில் பேசி விட்டார்.
சரி. இந்த அரசியல் செய்தி எதற்கு இப்போது சேனல் டாக்கில் எனகிறீர்களா? சம்பந்தம் இருக்கிறதே! அதன் பெயர்தான் பிரதிபலிப்பு!

குஷ்புவின் நந்தினி 2 தொடருக்கு சன் டிவியால் முன்பணம் கொடுக்கப்பட்டு பைலட் எபிசோடுகள் தயாரிக்கப்பட்டன. பிறகு அவற்றை என்ன காரணத்தாலோ சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் 8 வெபிசோடுகளாக ஓட்டி முடித்து விடலாம் என சேனல் தரப்பு முடிவெடுத்தது. ஆனால் தற்போதைக்கு அதற்கும் வந்து விட்டது வேட்டு! இந்த ஸ்டாலின் தாக்குதல் பேச்சுக்குப் பிறகு குஷ்பு நிறுவனத்துக்கு சன் டிவி எந்த ஒரு நிகழ்ச்சியும் தருவது நியாயமில்லை என கட்சி மேலிடம் தரப்பில் சேனல் மேலிடத்துக்கு செய்தி போய் விட்டது. எனவே தற்போதைக்காவது நந்தினி 2 ஒளிபரப்பில் சிக்கல் தான்!
குஷ்புவுக்கு கவலையில்லை. அவர் ஜீ தமிழ் சேனலுக்கு தன் ஜாகையை மாற்றிக் கொண்டு போகிறாராம்!

விகடன் டெலிவிஸ்டாஸ் சன் டிவியிலிருந்து வெளியேறிய பிறகு ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு விஜய் டிவியில் தங்களது புதிய சீரியலை விரைவில் துவக்கப் போகிறது. இயக்குநர் குமரன், திரைக்கதை அமிர்தராஜ் என வழக்கம் போல அவர்களது குழுதான். அதில் மாற்றம் எதுவுமில்லை. இதே போல அடுத்தடுத்து ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் டிவிக்கும் நெடுந்தொடர்கள் தயாரிக்கப் போகிறது விகடன் டெலிவிஸ்டாஸ்!


Leave a comment
Upload