தென்னிந்தியாவில், காலை உணவின் ராஜாவாக 700 ஆண்டுகளாய் இட்லி இருந்து வருகிறது.
ஒரு வயது குழந்தை முதல் 100 வயது முதியவர் வரை, அனைவரும் சாப்பிடக்கூடிய உணவு. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவாகவும் இட்லி இருக்கிறது. தென்னிந்தியாவின் தட்பவெட்ப சூழ்நிலைக்கு ஏற்ற உணவு இட்லி.
ஒரு இட்லியில் 60 முதல் 70 கிலோ கலோரிகள் வரை அடங்கி இருக்கிறது. புரதம் - 2 கிராம், கார்போ ஹைட்ரேட் - 8 கிராம், நார்ச்சத்து - 2 கிராம், இரும்புச்சத்து - ஒரு மில்லி கிராம். இது தவிர கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ ஆகியவையும் உள்ளது.
தினமும் 4 இட்லிகள் எடுத்துக் கொண்டால் 300 முதல் 350 கலோரிகள் உடலுக்கு கிடைக்கும். இட்லியோடு சட்னி சாம்பார் சேரும்போது எல்லா ஊட்டச்சத்தும் சரிவிகிதத்தில் கிடைக்கும்.
இட்லி, நம் உடலில் ரத்தத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது. உடலுக்குத் தேவையான சக்தியை தருகிறது. தசைகளுக்கு பலம் கொடுக்கிறது. மூளையில் உள்ள செல்களுக்கு சுறுசுறுப்பையும் அளிக்கிறது.
எந்த வயதினருக்கும், இட்லி இரண்டு மணி நேரத்துக்குள் செரிக்க கூடிய உணவாகும். மற்றும் செரிமான உறுப்புகள் சீராக இயங்கவும் உதவுகிறது.
வாயுக்கோளாறு உள்ளவர்கள் தினமும் இட்லி சாப்பிடுவது மிகவும் நல்லது.
அல்சர் உள்ளவர்களுக்கு சிறந்த உணவாக உள்ளது.
பயண நேரங்களில் உண்பதற்கு ஏற்ற உணவாகவும் இருக்கிறது.
நீரிழிவு, சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்கள் இட்லியை மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.
இட்லி நீராவியில் வேக வைக்கும் உணவு என்பதால் கொழுப்புச்சத்து அதிகம் இருக்காது.
மொத்தத்தில் உடல் ஆரோக்கியத்துக்கும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கும் ஏற்றதாக இட்லி இருக்கிறது.
Leave a comment
Upload