தொடர்கள்
பொது
சுகர் ப்ரீ பாதுகாப்பானதா..? - மாலாஸ்ரீ

20210124223117562.png

காற்று மாசு நிலவும் இன்றைய காலக்கட்டத்தில், சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரிடமும் சர்க்கரை நோய் என்பது பரவலாக காணப்படுகிறது. இதன் விளைவாக, சுகர் ப்ரீ உணவுப் பொருட்களை அநேக மக்கள் நாடிச் செல்லத் துவங்கியுள்ளனர்.

உண்மையில், ‘இந்த சுகர் ப்ரீ உணவுப் பொருட்கள் பாதுகாப்பானதா, இல்லையா?’ என்பது பலருக்கு தெரிவதில்லை. அத்தகைய உணவு மற்றும் இனிப்பு வகைகளுக்கு மக்கள் - குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதனால் சாப்பிடும் பிஸ்கட்டிலிருந்து, காபி டீ என அனைத்திலும் ‘சுகர் ப்ரீ’யைத்தான் பயன்படுத்துகின்றனர்.

பொதுவாக மாவு போன்ற கார்போஹைட்ரேட் உணவுப் பொருட்களில் சர்க்கரை சத்து காணப்படுகிறது. ஆனாலும் சர்க்கரையை முழுமையாக தவிர்க்க வேண்டும் என செயற்கை சர்க்கரைகளை நோக்கி மக்கள் நகர்கின்றனர்.

கடந்த 70-களில் நடந்த ஆய்வின்படி, எலிகளின் சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கு செயற்கை இனிப்புகள் காரணமாக அமைகிறது என கண்டறியப்பட்டுள்ளது.

சரி… சுகர் ப்ரீ என்றால் என்ன? சுகர் ப்ரீ என்பது, இனிப்பு சுவை அளிப்பதோடு, குறைந்த கலோரிகளைக் கொண்டது. தாங்கள் எடுத்துக் கொள்ளும் சர்க்கரையின் அளவில் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டியது டயாபடீஸ் நோயாளிகளுக்கு அவசியமாகிறது. நார்மலான 5 கிராம் சர்க்கரையில், 20-25 கலோரிகள் வரை இருக்கின்றன.

‘டயாபடீஸ் நோயாளிகளுக்கு சுகர் ப்ரீ பாதுகாப்பானதா?’ என்ற கேள்விக்கு..? நிபுணர்களின் கருத்து... “சுகர் ப்ரீயில் இயற்கையான பொருட்கள் இருந்தால் பாதுகாப்பானது. அதில் கெமிக்கல்கள் கலக்கும்போது பாதிப்பு ஏற்படுகிறது. கெமிக்கல்கள் நிறைந்த சுகர் ப்ரீ, எலும்புகளையும் பாதிக்க வல்லது. எனவே, சுகர் ப்ரீயை வாங்குவதற்கு முன், அதில் சேர்க்கப்பட்டுள்ள வேதிப்பொருட்களின் அளவு பட்டியலை படித்துக் கொள்ளுங்கள்.

சுகர் ப்ரீயுடன் ஒப்பிடும்போது, தாவரத்தில் இருந்து பெறப்படும் ஸ்டீவியா சிறந்ததாக கூறப்படுகிறது. ஹெல்த்லைன்படி, ஸ்டீவியா ஒன்றை வீட்டில் நடவு செய்து, அதன் இலைகளை சுகர் ப்ரீ தன்மைக்கு பயன்படுத்துவது சிறந்தது. இந்த மாத்திரைகள் கடைகளிலும் கிடைக்கின்றன!” என்கின்றனர்.

சரி… சுகர் ப்ரீ ஸ்வீட்களை சாப்பிடலாமா?

தற்போது இந்த வேதிப்பொருளுடன் கூடிய சுகர் ப்ரீயை லட்டு, கேக் அல்லது புட்டிங் போன்ற நிறைய இனிப்பு வகைகளில் பயன்படுத்தி வருகின்றனர். இது குறைந்த கலோரிகளைக் கொண்டது. இருப்பினும் இதில் சேர்க்கப்பட்டுள்ள நெய், க்ரீம் போன்றவை நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் பருமனை ஏற்படுத்துகிறது. அவர்களை ஆரோக்கியமற்றதாக மாற்றுகிறது. சுகர் ப்ரீ உணவாக இருப்பினும், கார்போஹைட்ரேட் அளவில் குறைவு இல்லை. சுகர் ப்ரீயைகூட குறைந்த அளவில் பயன்படுத்தும்படி டாக்டர்கள் வலியுறுத்துகின்றனர்.

டாக்டர்களின் கூற்றுப்படி, அதிக எடை கொண்ட சர்க்கரை நோயாளிக்கு 1,800 கலோரி டயட் இருக்க வேண்டும். இதே மெலிந்த உடல் வாகு கொண்டவர்கள் 2000-2200 கலோரிகள் வரை பெறலாம். அதிகப்படியான உடல் பருமன் உடைய சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு 1500 கலோரிகளுக்கு மேல் தாண்டக் கூடாது. குழந்தைகளை சுகர் ப்ரீயை சாப்பிட அனுமதிக்காதீர்கள்.

ஹெல்த்லைன்.காம் படி, சில செயற்கை இனிப்புகள் மற்றும் சுகர் ப்ரீ போன்றவை நீரிழிவு நோயை ஏற்படுத்துகின்றன. இது இன்னும் சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.