தொடர்கள்
பொது
ச்சும்மா அதிருதுல்ல.. - தில்லைக்கரசி சம்பத்

20210126080757903.jpeg
எஸ்தர்: இந்த சண்டே வீட்டுக்கு வாடின்னு ரம்யா நம்மளை கூப்பிட்டு இட்லியும் சட்னியும் வச்சு சாப்பிடுன்னு கொடுக்குறாளே.. இதுவே எங்க வீடா இருந்தா பிரியாணி கிடைச்சிருக்கும்.. ஹூம்..

ரம்யா: ஹாஹா. அலுத்துக்காத எஸ்தர்.. மத்தியானம் ஜமாய்ச்சிடலாம்.. அதுக்கு முன்னாடி இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க..! சமைச்சு சாப்பிடுறதுங்கிற வழக்கத்தை மனித இனம் எப்ப ஆரம்பிச்சாங்க தெரியுமா?

ஹாசினி: ஏன் தெரியாது? சொல்றேன் கேட்டுக்க..! சுமார் 5 லட்சம் வருஷங்கள் முன்னாடி தான் வேகவைத்த உணவுகளை சாப்பிடற வழக்கம் ஆதி மனிதர்களிடையே உண்டாகி இருக்கு.
கொஞ்சம் flashback கூட இருக்கு..

மனித இனம் நெருப்பை கண்டுப்பிடிச்ச பிறகு, குளிருக்காகவும் கொடும் காட்டு விலங்குகள் இரவுல தாக்காம இருப்பதற்காகவும் நெருப்பை உண்டாக்கி அவங்க இருப்பிடத்துல campfire போல வச்சுக்க ஆரம்பிச்சாங்க...

எஸ்தர்: அப்ப தான் நெருப்பை கண்டுப்பிடிச்சாங்களா..?

20210126081715130.jpg

ஹாசினி: இல்லப்பா.. நெருப்பை சுமார் 4 லட்சம் வருஷத்துக்கு முன்னாடியே கண்டு பிடிச்சிட்டாங்க.. ஆனா நெருப்பை கண்டுப்பிடிச்சாலும் அதை திறமையா கையாண்டு கட்டுப்பாட்டுக்குள்ள வைக்க தெரியாததால, அவங்க வாழுற இருப்பிடத்தை பயிர்பச்சைகளை, வளர்த்த சிறு விலங்குகள்ன்னு எல்லாத்தையும் தெரியாம பத்த விட்டு எரிச்ச விபரீதங்களும் நடந்திருக்கு.. சமயத்துல அவங்களும் சேர்ந்தே குழந்தை குட்டின்னு கூட்டமா எரிஞ்சு செத்து போயிருக்காங்க..

எஸ்தர்: அச்சச்சோ..

ஹாசினி: ம்ம்.. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா நெருப்பை சரியா கையாள தெரிஞ்சு, கட்டுக்குள்ள வைக்க கத்துக்கிட்டாங்க. அப்புறம் தான் நெருப்பை வச்சு சமைக்க ஆரம்பிச்சாங்க.. அதாவது எடுத்தோன அடுப்பு கட்டி, உணவு பொருட்களை தண்ணியில வேக வைக்க எல்லாம் செய்யல. முத சமையலே barbecue method தான்.. பாதுகாப்புக்காக campfire வச்சிருந்தாங்கல.. அந்த நெருப்புல ஒரு குச்சியில கட்டி மாமிசத்தை நெருப்புல வாட்டி சாப்பிட ஆரம்பிச்சிருக்காங்க.

20210126081801568.jpeg

வெந்ததை சாப்பிட்ட போது E-coli, salmonella போன்ற பாக்டீரியாக்கள் உண்டாக்கும் வியாதிகள் அவர்களுக்கு வராததை உணர்ந்தாங்க. அதோட உணவின் சத்து பச்சையா சாப்பிடுவதை விட நெருப்புல வாட்டி சாப்பிட்டப்ப அதிகமா உடல்ல சேர்ந்ததையும் அனுபவபூர்வமாக உணர்ந்தாங்க.

20210126081954406.jpeg

ரம்யா: ரைட்டு மச்சி.. அதோட நவீன மனித இனத்தின் முன்னோடின்னு சொல்லப்படுற நிமிர்நிலை மாந்தன் (Homo erectus) இனத்திற்கு சமைச்சு சாப்பிடும் வழக்கம் வந்தப்பிறகே, அவங்களோட மூளை அளவு 2 மடங்காக வளர்ச்சி ஆனதுன்னு நவீன ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. அதாவது சமைத்த உணவுகளை சாப்பிட தொடங்கிய காலத்திற்கு பின் தான் நவீன மனிதன் உருவாக ஆரம்பித்தான் என்றே சொல்லலாம்.

ஓ... சரி...

பழங்கால இந்தியாவில் எதை எதை எப்படி சமைச்சு சாப்பிட்டிருப்பாங்க?

20210126081917783.jpeg

ரம்யா: கோதுமை அரிசி, காய்கறி, பழங்கள், மாடு, ஆடு, கோழி, மாமிசம் சாப்பிட்டிருக்காங்க. மண்பாண்டங்கள், கொப்பரைகள் நேரிடையான நெருப்பு இத வச்சு உபயோகப்படுத்தி சமைச்சு சாப்பிட்டு இருந்திருக்காங்க.

ஸ்ருதி: சுவாரசியமான சங்ககால தமிழகத்துல 3-வது நூற்றாண்டு முதல் 6 ஆம் நூற்றாண்டு வரை டிஃபன் ஐட்டம்ன்னு ஒரு உணவை சமைச்சு கடற்கரை துறைமுகங்களில் வியாபாரிகள் வித்திருக்காங்க.. அது என்ன ஐட்டம்னு சொல்லு பார்க்கலாம்..

எஸ்தர்: என்ன... ஏதாவது பஜ்ஜி போண்டா வா இருக்கும்?

ஸ்ருதி : Wrong.. அடை சுட்டு வித்துருக்காங்க ..

ஹாசினி: சூப்பர்..

ஸ்ருதி: தமிழ் மொழியில் சாப்பிடுவதை எவ்வளவு விதவிதமா அழகான வார்த்தைகளில் சொல்றாங்க தெரியுமா?

மிகச் சிறிய அளவே உட்கொள்வது – அருந்துதல்..
பசி தீர சாப்பிடுவது – உண்ணல்..
நீர் சேர்ந்த பண்டத்தை ஈர்த்து உண்பது – உறிஞ்சுதல்..
நீரில் உணவை உறிஞ்சி பசி நீங்க உட்கொள்வது – குடித்தல்..
பண்டங்களைக் கடித்து உட்கொள்வது – தின்றல்..
ரசித்து மகிழ்வது – துய்த்தல்..
நாக்கினால் துழாவி உட்கொள்ளுதல் – நக்கல்..
முழுவதையும் ஒரே வாயில் உறிஞ்சினால் – உறிதல்..
நீர்ப்பண்டத்தைச் சிறுகக் குடிப்பது – பருகல்..
பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொண்டால் – மாந்தல்..
கடியப்பண்டத்தைக் கடித்து உண்பது – கடித்தல்..
வாயில் வைத்து அதிகம் அரைக்காமல் உண்பது – விழுங்கல்...

ஹாசினி: ஆஹா அருமை..!! எங்கம்மா சொல்வாங்க.. அவங்க பாட்டிக்காலத்திலும் விறகு அடுப்புல தான் சமைப்பாங்களாம். மழைக்காலத்துல ஈர விறகுகள் வச்சு, ஊதுக்குழல்ல ஊதி ஊதி நெஞ்சே வலிக்கும்ன்னு சொல்வாங்கலாம். இதுல புகை வேற கண்ணெல்லாம் எரியுமாம்.. பாவம்ல..

ரம்யா: உண்மை தான்.. ஆனா விறகு அடுப்புல சமைக்கும்போது தான் ருசியும், கைமணமும் அதிகமா இருக்கும்ன்னு இப்ப popular ஹோட்டல்களில் கூட விறகடுப்பில் சமைச்சதுன்னு விளம்பரம் பண்றாங்க..

அந்தக் காலத்து மாயவரம் காளியாக்குடி ஹோட்டல், சைவ உணவுகளுக்கு பெயர் போனது. அது போல கொள்ளிடம் பக்கத்துல புத்தூர் ஜெயராமன் கடை அசைவ வகை உணவுகளுக்கு செம ஃபேமஸ்... சாதாரண குடிசை மாதிரி தான் கடை. ஆனா ருசியும், கைப்பக்குவமும் அள்ளும்... அங்கேயும் விறகு அடுப்புல தான் சமைக்கிறாங்க.

ஸ்ருதி: ஹோட்டல்ல ஓகே.. ஆனா, வீடுகள்னா காஸ் அடுப்பு தான் சிறந்தது. சமைக்கும் பெண்களுக்கு அது தான் வசதி.

ரம்யா: இப்ப அது மட்டுமா வசதி..? கேஸ் அடுப்புல சமைச்சாலும் அதுல வர புகையை வெளியேத்த chimney, அப்புறம் மாடுலர் கிச்சன்ன்னு இப்பெல்லாம் சமையலறையையே அழகா மாத்திட்டாங்களே..!

ஸ்ருதி: ஆமாப்பா... அவங்கவங்க வசதிக்கும் சமையலறை சைசுக்கும் ஏத்தது போல புகைப்போக்கியிலிருந்து ஆரம்பித்து, சும்மா அசந்து போறாப்புல மாடல்கள் கட்டிக்கலாம்..

12 கோடி மதிப்புள்ள மாடுலர் கிச்சன்கள் கூட இருக்கு...

அதுப்போல மிகவும் விலையுயர்ந்த 10 மாடுலர் கிச்சன் வகைகள் சொல்லவா..?

எஸ்தர்: அடிப்பாவி... கிச்சனுக்கே 12 கோடியா..??

ரம்யா: Yes.. வரிசையா சொல்றேன் கேளுங்க..

1) The Fiore di Cristallo...
முழு அலங்காரமும் இத்தாலியன் பளிங்கு கற்கள் வச்சு பண்ணி இருப்பாங்க.. கதவு, குமிழ்கள் கூட அதே பளிங்கு தான். பளிங்கு கல்லால் ஆன kitchen island. அதுக்கு மேல ஸ்வரோவ்ஸ்கி சரவிளக்கு இருக்கும்.

20210126082433217.jpeg

எஸ்தர்: ஏய், நிறுத்து.. நிறுத்து.. அது என்ன kitchen island?

ரம்யா: அதுவா..!!? சமையலறையின் நடுவில் அந்த சமையலறையின் அலங்காரத்துக்கு ஏத்தது போல மரத்தாலோ அல்லது மார்பிள் / பளிங்கு கற்கள் வச்சு கட்ட படுற ஒரு டேபிள் போன்ற அமைப்பு.. அந்த மேஜைக்கு கீழே கூட சமையலறை உபகரணங்கள், உணவு பொருட்கள் வச்சிக்க இழுப்பறைகள் இருக்கும்.. அந்த மேசைக்கு மேல நாம மாவு பிசையலாம், காய் வெட்டலாம். இரண்டு ஸ்டூல்.. அங்க வச்சு காஃபி, morning breakfast சாப்பிடலாம். சமையலறை தீவுன்னு ஏன் சொல்றாங்கன்னா... சமையலறையின் நட்டநடுவுல எதிலுமே இணையாம தனியா இருக்குதுல.. அதான் அதுக்கு kitchen islandன்னு பேரு.

எஸ்தர்: Ohh.. ok.. அடுத்ததை சொல்லு...

ரம்யா: இரண்டாவது...

2) The Colosseo Oro...
தங்கத்தில் டிசைன் செய்யப்பட்ட கண்ணாடி டம்ளர்கள்.. முதலை தோலால் ஆன அலங்காரங்கள்.. ச்சும்மா சிகப்பும் தங்க நிறமும் கலந்து தகதகதகன்னு ஜொலிக்குமாம்...

20210126082613245.jpeg

எஸ்தர்: எல்லாம் சரிதான்.. அந்த முதலை தோல்தான் கொஞ்சம் இடிக்குது.. எனக்கு வேணாம்ப்பா இந்த முதலை... ச்சீ.. சாரி. இந்த மாடுலர் கிச்சன் டிசைன்.

ரம்யா: சரி மூனாவது சொல்றேன்..

3 ) Electrolux Grand Cuisine Professional Kitchen...
இந்த டிசைனில் தலைசுத்தி போற அளவுக்கு எக்கச்சக்க கிச்சன் உபகரணங்கள். இதுல ரொம்ப முக்கியமான வசதியே computerised appliances தான்.. நாம கம்ப்யூட்டரில் இந்த சாதனங்களை இயக்கலாம்.

20210126082650722.jpeg

அடுத்து நாலாவது...

4) Asian Minimalist kitchen...
இதுல stainless steel meat cutter இருக்கு. சுண்ணாம்பு கல் தரை, உலோக உட்கூரை, நடுவுல Onyx countertop.. Onyxனா பாக்க மார்பிள் மாதிரி தான் இருக்கும். ஆனா, மெருகேற்றி LED ஒளியேற்றினா பல மாறுபட்ட நிறங்களின் கலவையோட சேர்ந்து ஒளி ஊடுருவும் தன்மையோட பார்க்க அட்டகாசமா இருக்கும்.

20210126082758186.jpeg

அடுத்து...

5) Futuristic Kitchen...
மறுசுழற்சி செய்யப்பட்ட விமான அலுமினியம் மற்றும் எஃகு இரும்பால் செய்யப்பட்டது. அப்படியே பார்த்தா.. நேர்த்தியா பளபளன்னு மின்னும்..

20210126083527243.jpeg

6) Rustic Kitchen...
இயற்கையான டிசைன் அமைப்பு.. ஆனா எல்லா சொகுசுகளோட வசதி.. பாரம்பரிய கல் சுவர்.. மரத்தரைன்னு அமர்க்களமா இருக்கும்.

20210126083458679.jpeg

7) Mediterranean Kitchen...
மரத்தூண்கள், மெட்ராஸ் டெரஸ்ன்னு சொல்வாங்களே,, அதுப்போல உட்கூரை அமைப்பு இருக்கும்...

2021012608342945.jpeg

8) Straight out of Manhattan’s Puck Penthouses...
கருப்பு கலந்த நிற அமைப்பு. அதுக்கு ஏத்தாப்புல கிரானைட் கல்...

20210126083404757.jpeg

9) New York’s Upper East Side...
கசாப்பு கடை கறி வெட்டும் அமைப்பில் kitchen island Viking (அதிநவீன) ovens, செங்கலால் அமைக்க பட்ட ovenன்னு ரெண்டு வகையான ஓவன்கள், 3 sinksன்னு பிரமாண்டமா இருக்கு.. இந்த வகையான மாடுலர் கிச்சன் நியூயார்க்ல பெரும் வசதி படைத்த ஒரு மாளிகைல அமைச்சிருக்காங்க.

20210126083258700.jpeg

10 )New York’s most expensive apartment...
வெண்மை நிறம், நடுவில் தொங்கும் சர விளக்குன்னு பார்க்க எளிமையா அதே சமயம் எல்லா வசதிகளும் நிரம்பியது. இப்ப சொல்லு ஹாசினி.. நீ கோடீஸ்வரியா இருந்தா இதுல என்னவகையான மாடுலர் கிச்சனை தேர்ந்தெடுப்ப..?

20210126083333239.jpeg

ஹாசினி: எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. இருந்தாலும் துடைச்சு சுத்தமா காத்தோட்டமா இருக்கும் நம்ம பாட்டி வீடுகள்ல இருக்கும் சமையலறை, அதை ஒட்டியது போல பூஜை அறை ஊதுபத்தி சாம்பிராணி மணத்தோட சமையல் செய்யும் விதமே அலாதியானது.. simple is always best...

“ஆஹா.. சரியா சொல்லிட்டாளே இந்த பட்டுக்குட்டி!!” என எஸ்தர் ஹாசினியின் தலையில் தட்ட... தலையை தேய்த்துக்கொண்டே.. “போடி” என ஹாசினி முறைக்க அனைவரும் சிரித்தனர்.