தொடர்கள்
கல்வி
“மாணவர்களுக்கு இது நல்லதா?” - நமது நிருபர்

20210126211130952.jpeg

கடந்த வியாழகிழமை நம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 110 விதியின் கீழ் மாணவர்களின் எதிர் கால விதியை தலைகீழாக மாற்றிவிட்டார்.... 9..10...11.. மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் ஆல் பாஸ் என்ற அறிவிப்பு.

ஒரு பக்கம் மாணவர்களுக்கு படு குஷியாக இருக்கலாம்... அதே சமயம் ஆசிரியர்களுக்கு இது பெரிய தலைவலியை கொடுத்துள்ளது.

9 மற்றும் 11 ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் ஓகே... 10 ஆம் வகுப்புக்கு அது சரியானதாக இல்லை என்று தான் ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

ஒரு ஆசிரியர் நம்மிடம் கூறும் போது... கடந்த வருடம் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களை வைத்து தரம் பிரித்து, மாணவர்களுக்கு மதிப்பெண் கொடுத்து ஆல் பாஸ் செய்தது நல்லது. இப்பொழுது எதை வைத்து மாணவர்களை தரவரிசை படுத்துவது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கட்டாயமாக வைத்து, அதே பள்ளி ஆசிரியர்கள் திருத்தி, மதிப்பெண் வழங்கி... பின் ஆல் பாஸ் என்பதை மறைமுகமாக செய்திருக்கலாம். அதை விட்டு விட்டு... அவசரமாக ஆல் பாஸ் என்பதை ஜீரணிக்க முடியவில்லை” என்று புலம்பினார்.

கன்னியாஸ்திரிகள் மற்றும் கல்வி வியாபாரிகள் நடத்தும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கூறும் போது... எங்க தலை எழுத்து வேறு... கொரோனா பற்றிக்கூட கவலைப்படாத தலைமை... கட்டாய வகுப்பை மாணவிகளை கலர் ட்ரஸில் வர சொல்லி, வகுப்புகளை நடத்தினோம். ஒரு கன்னியாஸ்திரி தலைமை ஆசிரியை “ஓசியில் சம்பளம் வாங்குறீங்க இல்ல.. வகுப்பை எடுங்க” என்று மிரட்டி உள்ளார். இப்படி பல தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள், பல தரப்பட்ட அவமானங்களை அனுபவித்து, தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்துள்ள வேளையில்... அரசு இப்படி ஒரு அறிவிப்பை செய்தது சரியா?” என்று கேட்கிறார்.

20210126211154499.jpeg

ஏன்.. அவசரமாக ஜனவரி மாதம் 19 ஆம் தேதி பள்ளிகளை திறக்க வேண்டும். அதிலும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புக்கு பள்ளிகளை திறந்தே இருக்கக்கூடது.

தேர்தலுக்கும் மாணவர்களுக்கும் என்ன சம்பந்தம் சொல்லுங்க.... மாணவர்களா ஓட்டு போடப்போறாங்க.... தேர்வு என்பது இருந்தால் தான் மாணவர்கள் சற்று படிப்பார்கள். ஆசிரியர்களாகிய எங்களை பகடை காயாக நினைக்கிறது இந்த அரசும், தனியார் நிறுவனங்களும். எங்க தலைவிதி” என்று புலம்பி தள்ளினார் அந்த ஆசிரியை....


நாம் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் பக்தவச்சலத்திடம் பேசினோம்... “எங்களுக்கு மிகவும் வருத்தமான ஒன்று... 10 ஆம் வகுப்புக்கு தேர்வு இல்லை, ஆல் பாஸ் என்பதை முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்ததை கேட்டு கல்வி அமைச்சருக்கே ஷாக்காக இருந்திருக்கும். ஆசிரியர்களை இந்த அரசு என்ன நினைத்து கொண்டிருக்கிறது. பள்ளிகள் திறக்கப்பட்டு, பொது தேர்வு நடக்கும் என்ற அறிவிப்பு... எல்லா ஆசிரியர்களும் முனைப்புடன் மாணவர்களை தயாரிக்க.. முதல்வரின் இந்த திடீர் அறிவிப்பு... ஆசிரியர்களை விரக்தியில் தள்ளி விட்டது. தேர்வு நடத்தாமல் எப்படி தரவரிசை செய்வது... அதற்க்கு குழு அமைக்கிறோம் என்று கூறுகிறார்கள்... முதல்வரின் அறிவிப்புக்கு பின், மாணவர்கள் பள்ளிக்கு வருவதை நிறுத்தி விட்டனர்... இது ஒரு பக்கம் இருக்க.. அடுத்து ஒய்வு பெரும் வயது 60 என்பது ஒத்து கொள்ள முடியாது. வேலைக்காக காத்து கொண்டிருக்கும் அப்பாவி இளம் சமூகத்தினரை முதல்வர் மறந்து விட்டது வருத்தமான விஷயம். என்ன செய்ய... எல்லாம் விதியின் (110 விதியின்) விளையாட்டு...” என்று முடித்தார்.

இன்றைய கால கட்டத்தில் உயர்நிலைப் பள்ளி மாணவர்ளின் எதிர்காலத்தை நினைத்தால் கவலையாக இருக்கிறது.