தொடர்கள்
கவிதை
நாம் உணர்வோம்....! - சி. கோவேந்த ராஜா

20210226224754934.jpeg

நம்மை அறிவோம்....!
நாம் உணர்வோம்....!

அன்பினால்....
ஆக்கப்படுகிறோம்...!
ஆசையினால்.....
வார்க்கப்படுகிறோம்..!

இயற்கையினால்...
இயக்கப்படுகிறோம்...!
ஈர்ப்பினால்...
கவரப்படுகிறோம்...!

உள்ளங்களால்...
உவகை பெறுகிறோம்...!
ஊழ்வினைகளால்....
உந்தப்படுகிறோம்...!

எண்ணங்களால்...
ஏற்றம் பெறுகிறோம்...
ஏகாந்தமாய்...
மெருகேறுகிறோம்...!

ஐம்புலன்களால்....
ஐக்கியப்படுகிறோம்...!

ஒற்றுமையால்...
ஒருமைப்படுகிறோம்...!
ஓய்வின்றியே...
அலைக்கப்படுகிறோம்...!

ஔடதங்களால்...
பயணப்படுகிறோம்...!

அஃதே... கால ஓட்டத்தில்...
காற்றினில் இயங்கி....
காற்றினால் இயக்கப்பட்டு...
காற்றோடு கலந்து....

காற்றைப் போலவே...
காணாமற் போய் விடுகிறோம்...!