தொடர்கள்
தேர்தல் திருவிழா
1….2….3 … ஹலோ மைக் டெஸ்டிங்…!! - ஆர். ராஜேஷ் கன்னா

20210225091004981.jpg

தமிழக சட்டசபை தேர்தல் என்றதும் அரசியல் தலைவர்கள் பிரசாரத்தில் பேசும் அனல் பறக்கும் தேர்தல் பிரசார பேச்சுக்களை தொகுத்து வழங்கி இருக்கிறோம்..! உங்களுக்கு எவ்வளவு கவலைகள் இருந்தாலும் இதனை படிக்கும் போது கொஞ்சமாவது மனக்கவலைகள் அகலும் என்பது விகடகவியின் கணிப்பு …!

பழநியை திருப்பதி போல் மாற்றுவோம்..! – எடப்பாடி பழநிசாமி

20210225091205966.jpeg

விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், லேப்டாப் வழங்குவதாகக் கூறிய ஜெயலலிதாவின் வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்பட்டு விட்டது. தமிழகத்தில் ஏழைக் குழந்தைகளின் கல்வி சிறப்பாக உள்ளது. கல்விக்கு முக்கியத்துவம் தருகிறது அதிமுக அரசு. பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள், சீருடை, காலணி, புத்தகங்கள் போன்ற அனைத்தும் வழங்கியவர் ஜெயலலிதா. தைப்பூசத்திற்கு பொது விடுமுறை அறிவித்தது. அரிசி அட்டைதாரர்களுக்கு, ஆண்டிற்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். நிலமும், வீடில்லாத ஏழைகளுக்கு வீடும் கட்டித்தரப்படும். பழநியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும். பழநியை திருப்பதியைபோல் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்!

அமைச்சர் ஆவதற்கும் நீட் தேர்வு…! - சீமான்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை..! - உதயநிதி ஸ்டாலின்

பாம்பா பல்லியா ஊர்ந்து செல்ல.... - எடப்பாடி..!

20210225091906469.gif

“நான் ஊர்ந்து போய் முதல்வராக பல்லியா?... பாம்பா?... நான் நடந்து சென்றுதான் முதல்வரானேன்…! விவசாயிகள் கஷ்டத்தை நான் உணர்ந்தவன். வெயில், மழை, இரவு, பகல் என எதையும் பார்க்காமல் ரத்தம், வியர்வை சிந்தி உழைக்கும் ஒரே தொழில் விவசாயம். இதைப்பற்றி ஸ்டாலினுக்கு சிந்திக்க தெரியாது. சிந்தித்தாலும் பேசத் தெரியாது. என் தாத்தா காலத்தில் இருந்து விவசாயம் தான் செய்துகொண்டிருக்கிறோம்! - கடலூர் மாவட்டம் புவனகிரியில் முதலமைச்சர் பழநிசாமி.

பாம்பு விஷத்தை விட பெரிய துரோகத்தைச் செய்தவர் எடப்பாடி! - ஸ்டாலின்

20210225092102448.jpg

‘ஊர்ந்து செல்வதற்கு நான் பாம்பா, பல்லியா’ என்று கேட்கும் பழனிசாமி… அவற்றின் விஷத்தை விடப் பெரிய விஷமான துரோகத்தைச் செய்தவர்! - திருநெல்வேலி வேட்பாளர் பரப்புரை கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

எடப்பாடி பாம்பு இல்லை! பச்சோந்தி.. - டி.டி.வி தினகரன்

2021022509225343.jpg

எடப்பாடி பழனிசாமி சொல்கிறார், நான் யார் காலிலும் விழவில்லையே? ஊர்ந்து செல்ல நான் என்ன பல்லியா, பாம்பா? என்று. இல்லை அவர் பச்சோந்தி. சரியா, இல்லையா? - விழுப்புரத்தில் டி.டி.வி தினகரன்

ரு.300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது! - கமலஹாசன்

20210225092633894.jpg

தமிழகத்தில் 50 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்களால் மக்கள் ஏமாற்றப்பட்டுவிட்டார்கள். அடுத்த தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். முதல் அமைச்சர் எடப்பாடி பழநிசாமி ரு.10 லட்சம் கோடி ஊழல் செய்ததாக ஸ்டாலின் கூறுகிறார். ஸ்டாலின் 20 லட்சம் கோடி ஊழல் செய்ததாக பழநிசாமி கூறுகிறார். இருவரும் மாறி மாறி குறை சொல்லி கொண்டு மக்கள் வரிப்பணம் ரு. 30 லட்சம் கோடி காணமல் போய்விட்டது. கமலுக்கு இவ்வளவு கோடி சொத்துக்களா? என்று கேட்கிறார்கள். ஆம்… நீங்கள் கொடுத்தது தான். நடிகராக இருந்த போது மக்கள் அளித்த சம்பளம். ஆண்டு தோறும் எனக்கு சம்பள உயர்வு கிடைத்தது. நான் காந்தியை போல் எளிமையாக வாழ நினைக்ககூடியவன். மக்கள் சேவை செய்வதற்கு கோவணம் கட்டி கொண்டு வருவேன். நடிப்பு தொழிலை விட்டு அரசியலுக்கு வந்ததால் எனக்கு ரு.300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. -மயிலாடுதுறையில் கமலஹாசன்.

ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஒரு ஊழல் அமைச்சரவை! - மு.க.ஸ்டாலின்

20210225092721893.jpg

இதுவரையில் இருந்த அரசுகளிலேயே ஊழல் மிகுந்த அரசு 1991-96 ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக தான். ஆனால் இப்போது அதையெல்லாம் தாண்டி பழநிசாமி தலைமையில் நடந்து கொண்டிருக்கும் இந்த ஆட்சி தான் படுபயங்கரமான ஊழல் ஆட்சியாக இருக்கிறது. கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் இதனை தொழிலாக கொண்டு ஆட்சி நடத்தி கொண்டிருக்கும் ஒரு கொடிய சர்வாதிகார ஆட்சி. ஊழலுக்காக ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஒரு ஊழல் அமைச்சரவை தான் இப்போது இருக்கும் அதிமுக ஆட்சி! – கிருஷ்ணகிரி தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின்