
எலும்பு புரை நோய்கள்:
சகோதரிகளே, மெனோபாஸ் பிரச்சனைகளுக்கு அடுத்தபடியாக பெண்களை அதிகம் பாதிக்கும் நோய் எலும்பு புரை நோய்கள். உலகிலுள்ள பெண்களில் அதிக விழுக்காடு பேர் பாதிக்கப்படுவது இந்த எலும்பு நோயினால். வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில், ஒவ்வொரு பெண்களும் அவதிப்படுகின்றனர். முதுகு தண்டுவடம் ஒன்றன் மீது ஒன்று அடுக்கிய முள் வரிசைகளை போல இருக்கும். இந்த எலும்புகளுக்கிடையே உள்ள நீரும், வழுவழுப்பான சதையும், எலும்புகள் ஒன்றோடு ஒன்று தேயாமல் தடுக்கின்றன. இவை, முதுகு தண்டு வடத்துடன் ஒட்டிய சதை மற்றும் ஜவ்வுகளின் ஆதரவுடன் செயல்படுகின்றன.
நம் உடலின் மேற்பகுதியின் மொத்த எடையையும் தண்டுவடத்தின் கீழ் பகுதி தாங்குகிறது. இந்த எலும்புகளில் ஏற்படும் தேய்மானம் மற்றும் ஒன்றன் மேல் ஒன்று சரியாக பொருந்தாதபோது, இவற்றின் இடையே செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு, முதுகு வலி ஏற்படுகிறது. பெரும்பாலும் சிறுவயது குழந்தைகளுக்கு இந்தப் பிரச்சனை வருவதில்லை. பள்ளிகளுக்கு அதிகஅளவில் புத்தகம் சுமக்கும் குழந்தைகள், இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த முதுகுவலி தொடர்ந்து இருந்தாலோ, கால்களில் வலுவிழந்த நிலை ஏற்பட்டாலோ, சிறுநீருடன் இரத்தம் வெளியேறினாலோ, தலைவலியுடன் வாந்தி மயக்கம் ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுகவும். துவக்க நிலையில் உள்ள பிரச்சனைகளை உடனே சரிசெய்துவிட முடியும்.
நீங்கள் உட்காரும் நிலை அல்லது நிற்கும் நிலை, உபயோகிக்கும் காலணி, நாற்காலி ஆகியவற்றில் மாற்றம் செய்ய வேண்டுமா என்பது குறித்தும் ஆராய வேண்டும். கவனித்து செயல்பட்டால், முதுகு வலியை தவிர்த்து விடலாம்.
முதுகு தண்டு பிரச்சனையில் பெரும் பங்கு வகிப்பது நமது உடல் எடையே ஆகும். அதிக உடல் எடை கொண்டவர்கள் நிச்சயம் இந்த நோய்க்கு ஆளாகின்றனர். உடல் எடையை பி .எம் .ஐ அளவுக்கு இணையாக வைத்துக்கொள்ளும்போது, இந்தப் பிரச்சனையை தவிர்க்கலாம்.
போதுமான அளவு ஓய்வில் இருத்தல், மென்மையான படுக்கையில் படுக்காமல் தரையில் படுத்தல், உடற்பயிற்சி மற்றும் யோகா ஆகியவை செய்தால், வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.
மேலும் பேணுவோம்...

Leave a comment
Upload