
செயலும், எண்ணமும்...
“கோழைகளை பெண்கள் விரும்பாததுபோல, பயன்தரும் செயல்களில் ஈடுபாடு இல்லாதவர்களையும், பயன் தராத செயல்களில் ஈடுபடுபவர்களையும் மக்கள் தலைவனாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்”
என்றார் விதுரர்.
ஹஸ்தினாபுர ராஜ்யத்தின் தலைமை நிர்வாகியாகிய திருதிராஷ்ட்ரன் எப்படி நடந்து கொண்டால், அவர் மக்கள் விரும்பும் ஒரு தலைவராக இருக்கமுடியும் என்பதை இங்கு விதுரர் கூறுகிறார்.
பொதுவாக இங்கு அரசனையும் சேர்த்து, தலைமை நிர்வாக பொறுப்பிலிருக்கும் அனைவரும் துணிச்சலுடன் இருப்பதையே மக்கள் விரும்புவார்கள். என்றுமே, எப்பொழுதுமே, எதிலுமே ஒரு கோழை வென்றதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். துணிவு ஒரு ஆகச் சிறந்த நிர்வாகவியல் பண்பு.
செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது என்பதை தெரிந்து கொண்டு அதன்படி செயல்படுபவனே சிறந்த நிர்வாகி. தன்னுடைய நேரத்தையும், புத்தியையும் தன் நிறுவனத்திற்கு பயன் தரும்வகையில் செயல்படுத்துபவனே சிறந்த நிர்வாகி. அதை அறியாமலும், தெரிந்தும் செய்யாமல் இருப்பவனும், தலைவன் மற்றும் நிர்வாகி என்னும் தகுதியை இழக்கின்றான்.
காரணம், ஒரு சிறந்த நிர்வாகி தன் நேரத்தையும், உழைப்பையும் மூலதனமாக்கி நிறுவனத்தையும், நிறுவனைத்தை நம்பி இருப்பவர்களையும் உயர்த்தவேண்டும். இந்த கோணத்தில் அவர் திருதுராஷ்டிரனை சிந்திக்க வைக்கின்றார். நாமும் சிந்திப்போம்.
விதுரர் மேலும் சொல்வார்...
எங்கு தர்மம் இருக்கின்றதோ அங்கு வெற்றியும் இருக்கும்.

Leave a comment
Upload