சென்று விட்டாயோ....?! - சி. கோவேந்த ராஜா.
சிரிப்பிலும் கண்ணீர் வர வைத்தவர்...! சிரிப்பால் நம்மை சிந்திக்க வைத்தவர்..! கருத்து கந்தசாமியாய் மனதில் நிறைந்தவர்.. ஆள்தோட்ட பூபதியாய் ஆக்கிரமித்தவர்...! மரம் வளர்ப்போம் வாரும் என்றொரு அறம் வளர்த்து பெருமை சேர்ந்தவர்...! பாடமாய் நம்மில் முன்னே நின்றவர்..! படமாய் மாலை இட வைத்ததேனோ..? சின்ன கலைவாணர் நம்மிடை இல்லை... என்று எண்ணிப் பார்க்க இயலவில்லை...! ஆழ்ந்த அனுதாபங்கள்...
பாலகிருஷ்ணன், கோவை
“அனுபவ ஞானம்…” - வெ. சுப்பிரமணியன்
அனுபவ பாடம் சிறுகதை மிக அருமை. வயதானவர்கள் கூறும் நாட்டு வைத்திரத்தை, நவநாகரீக சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிக பணம் செலவழித்து தெரிந்து கொள்கின்றனர் என்பதே நிஜம்
ஜெகதீஷ், மாங்காடு
குழாயடி சண்டை... - தில்லைக்கரசி சம்பத்
குழாயடி சண்டையில இரு பெண்கள் காரசாரமா சண்டை போடறதுல ஆரம்பிச்சதும் விறுவிறுப்பாக இருந்தது. டக்குனு குழந்தை அடிபட்டதும் வாயாடி மாமியார், ஆபத்பாந்தவனா மாறியது செம டர்னிங் பாயிண்ட். கடைசியில் இந்த மாதிரி மாமியார் கிடைப்பாங்களானு வருங்கால மருமகள்களை ஏங்கவெச்சிட்டீங்க தில்லை!
சியாமளா விஸ்வம், ராயப்பேட்டை
அமுதத் தமிழ் வளர்த்த ஆழ்வார்கள் - 1 - பாலாஜி & வேங்கடகிருஷ்ணன்
அமுத தமிழ் வளர்த்த ஆழ்வார்கள் முதல் அத்தியாயத்தின் தகவல்களும் தெய்வீக ஓவியங்களும் செம கலக்கல். பாலாஜி பெயர் கொண்டவர்கள் பன்முகத் திறன் உள்ளவர்கள் என மெய்ப்பிக்கிறது.
ரகுநாதன், விஸ்வநாதன், மடிப்பாக்கம்
கொரோனா அச்சம்... - 2 - மரியா சிவானந்தம்
தமிழகம் உள்பட பிற மாநிலங்களில் இரண்டாவது கட்ட கொரோனா பரவல் மற்றும் பலியானோரின் எண்ணிக்கையை நாள்தோறும் படித்து, பார்த்து, அனுபவித்த பிறகுதான் தற்போது மக்களிடையே பெரும் அச்சம் நிலவுகிறது. அதை மிக அழகாக, கூடுதல் தகவல்களுடன் தந்திருக்கிறார் மரியா. மிக்க நன்றி.
மகேந்திரன், காஞ்சிபுரம்
மாண்புமிகு மனிதர்கள்...!.- ஜாசன்
மாண்புமிகு மனிதர்கள் தொடரில் தங்களது உயரதிகாரியுடன் நடந்த உரையாடலை வைத்து, மனம் ஒரு குரங்கு என்பதை மிக நாசூக்காகவும் உதாரணங்களோடு தெளிவாக புரிய வைத்துவிட்டீர்கள். அற்புதம்!
மாயா குப்புசாமி, ஊத்துக்கோட்டை
“அனுபவ ஞானம்…” - வெ. சுப்பிரமணியன்
மூத்தோர் சொல்லும் முழு நெல்லிக்காயும் ஆரம்பத்தில் கசக்கும். அனுபவித்தால் இனிக்கும். இந்தக்கால இளசுகள் வாழ்வியலே தனி. எல்லாம் பணமயம் பணபலம்.
“அனுபவ ஞானம்…” - வெ. சுப்பிரமணியன்
நல்ல அனுபவப்பாடம். நாட்டு வைத்தியமும், இங்கிலீஷ் வைத்தியமும் இருதுருவங்கள்.
மாலா ரமேஷ், சென்னை
அபராதம் வசூல்... - மாலாஸ்ரீ
காஞ்சிபுரம் நகராட்சி மட்டுமல்ல, அனைத்து பகுதிகளிலும் இதுபோன்ற முன்களப் பணியாளர்கள், மாஸ்க் அணியாத வாகன ஓட்டிகளை கீழே தள்ளி அபராதம் வசூலிக்கின்றனர். ஆனால், இவர்களில் சிலரே விதிகளை கடைப்பிடிப்பதில்லை.
செண்பகம், வாலாஜாபாத்
ஐபிஎல் 2021 துணுக்குகள்..... 'அலேக்' நிரஞ்சன்
ஐபிஎல் 2021 கிரிக்கெட் அணிகளின் ஆட்டம் பற்றிய துணுக்குகள், வாயில் போட்ட பஞ்சு மிட்டாய் போல் இனித்தது.
கௌஷிக், ரோஹித், சாய்கிருஷ்ணா, சைதாப்பேட்டை
வாவ் வாட்ஸப்!
வாட்ஸ் அப் படங்களை பார்த்து ஒரு நிமிடம் ஆடிப்போயிட்டோம். படங்கள் அனைத்தும் வாசகர்களின் செயல்பாடுகளாக வெளிப்படுத்தின.
தீட்சிதா, சூர்யா, ராகுல், சென்னை
ஆன்மீக ஆசான் - 36 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி
மஹா பெரியவாளை அடுத்து அகோபில மடம் ஜீயர் பற்றி கூறப்போகிறீர்களா? பலே... பலே... இதுபோன்ற மகான்களின் சிறப்புகளை தற்போதைய தலைமுறையினர் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்!
ராதா வெங்கட், ஆலப்பாக்கம்
கோழி முட்டை போடலே ஐயா… - மாலாஸ்ரீ
ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தின் ஆடு, மாடு, கோழி போன்ற உயிரினங்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தி உள்ளது. எங்கள் ஊரிலும் இதே நிலை இருந்தது. நாங்கள் மாறி, இயற்கையான தானியங்கள் அளிக்கிறோம். கிணத்தை காணோம் கேஸ் கொடுத்து புலம்புவதைப் போல்தான் இதுவும்!
தீனதயாளன், கோழிக்கோடு
கொரோனா அச்சம்... குற்றவாளி யார்? அரசாங்கமா? அரசியல் கட்சிகளா? மகா ஜனங்களா? - தில்லைக்கரசி சம்பத்
உங்கள் தலைப்பு பற்றி, இந்த நிலை வர காரணம் பொறுப்பு இல்லாமல் அரசியல் கூட்டங்களுக்கு மற்றும் கும்பமேளாவில் கூடிய பொதுமக்கள், இதை தடுக்க முயலாத அரசு இயந்திரம், வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த அரசியல் கட்சிகள்.
கொரோனா அச்சம்... குற்றவாளி யார்? அரசாங்கமா? அரசியல் கட்சிகளா? மகா ஜனங்களா? - தில்லைக்கரசி சம்பத்
சரியான, புள்ளி விவரங்களுடனான அலசல். வாழ்த்துக்கள். வருமுன், பாதுகாப்பு முறைகளைக் கையாண்டு, நமது ஒத்துழைப்பை இரவு பகல் பாராமல் பணிச்சுமையை பொருட்படுத்தாமல் செயல்படும் மருத்துவர்களுக்கும் மற்ற களப் பணியாளர்களுக்கும் தருவோம்.
Leave a comment
Upload