ஸ்ரீ மகா பெரியவா இந்த உலகில் சரீரத்தோடு உலா வந்த போது, அவரோடு பல்வேறு காலகட்டங்களில், பல மாநிலத்திலிருந்து, ஜாதி, மதம் பாகுபாடின்றி பல்வேறு மனிதர்கள் அவருடைய ஆசிகள் பெற்று அவரோடு பயணித்துள்ளனர். அவர்கள் அனைவரின் அனுபவங்களும் மிக சுவாரஸ்யமானவை. அப்படி அவரோடு பயணித்த பலரை பற்றியும் அவர்களின் அனுபவங்கள் பற்றியும் வரும் வாரங்களில் காணலாம்....
ஸ்ரீ சேலம் ரவி
ஸ்ரீ மகா பெரியவாளுக்கு எவ்வளவோ சிஷ்யர்கள், அபிமானிகள், சிப்பந்திகள் பல காலங்களில் பயணித்திருந்தாலும்... இப்போது நம் சக காலத்தில் இருக்கும், ஒரு மிக சிறந்த பக்தர் ஸ்ரீ சேலம் ரவி அவர்கள். தற்போது சேலத்தில் ஸ்ரீ மஹாபெரியவளுக்கு கைங்கரியம் செய்து வருகிறார்.
ஸ்ரீ மகா பெரியவாளின் பக்தர்கள் அனைவரும் போட்டிபோட்டுக் கொண்டு, யாருக்கு ஸ்ரீ பெரியாளை அதிகம் பிடிக்கும் என்றும்.. யாருக்கு பக்தி அதிகம் என்றும்.... மனதளவில் இருந்தாலும், இவர் பலரை பின்னுக்கு தள்ளி முன்னுக்கு நிற்கும் பரம பக்தர்.
ஸ்ரீ மகா பெரியவாளை பற்றியும் அவரது அனுபவங்களைப் பற்றியும் கதையாக விவரிக்கும் விதம் எழுத்தில் வடிக்க முடியாது. அவருடைய அனுபவத்தை, அவர் உபயோகிக்கும் வார்த்தைகளை கேட்கும்போதே ஸ்ரீ பெரியவாளின் மீது நமக்கும் பக்தி பற்றிக்கொள்ளும்.
மூன்று வயதில் முதன் முதலாக ஸ்ரீ பெரியவாளின் தரிசனம் பெற்றார். ஆம். இவர்களது குடும்பம், பரம்பரை பரம்பரையாக ஸ்ரீ மடத்திற்கு கைங்கரியம் செய்து வருபவர்கள். அதன் பின் பாலகனாக, அதன் பின் வளர்ந்தும், இன்றும் அவர் வயதான பின்பும் அவரது கைங்கரியமும் பக்தியும் தொடர்கிறது.
யூடியூபில் சென்று சேலம் ஸ்ரீ ரவி என்று தேடி பாருங்கள். சபதம் போட்டுகொண்டு, ஸ்ரீ மஹாபெரியவளை பற்றி அப்படி பொங்கி பேசுவார். இவருக்கு எப்படி ஸ்ரீ பெரியவளுடன் பக்தி அதிகமோ, அதே போன்றதொரு பக்தி இவருக்கு ஸ்ரீ பிரதோஷ மாமா மீதும் உண்டு. ஸ்ரீ பிரதோஷ மாமா பற்றியும் அவருக்கு ஸ்ரீ பெரியவா மீது உள்ள பக்தி பற்றியும் அவர் விவரிக்கும் விதம் எத்ததனை முறை வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
ஸ்ரீ மகாபெரியவாளோடு இத்தனை அனுபவங்களா? இத்தனை கதைகளா? என திரும்பத் திரும்ப கேட்கத்தோன்றும். இவருடைய பல விடியோக்கள் யூடியூபில் இருக்கிறது. அந்தக் கதைகளை இங்கே நாம் விவரிப்பதைவிட, நீங்கள் கேட்டு ரசிப்பதே முறையானது.
மீண்டும் அடுத்தவாரம் வேறு ஒரு பக்தரை பற்றி பார்ப்போம்...
Leave a comment
Upload