தொடர்கள்
பேசிக்கறாங்க
பேசிக்கறாங்க...

20210330201240319.jpg

நமது வாசகர்கள் அங்குமிங்கும் (ஹி..ஹி ஒட்டு) கேட்ட உரையாடல்கள்....

ராயபுரம் மீன் மார்க்கெட்...

“என்னடா சனிக்கிழமை இவ்ளோ கூட்டம்... எல்லாரும் விரதத்தை விட்டுட்டு மீன் சாப்பிட ஆரம்பிச்சுட்டாங்களா?”

“நாளைக்கு லாக் டௌன்... அதன் இன்னைக்கே வாங்கி வச்சுக்கிறாங்க...”

“கொரோனா பயம்லாம் போயிடுச்சா?”

“பயமெல்லாம் போகல, இருக்கவரைக்கும் என்ஜாய் பண்ணலாம் அப்படின்னு டிசைட் பண்ணிட்டாங்க போல...”

“சரி, நீ ஏன் வந்தியாம்?”

“எனக்கு வீட்டுல கோரோனோவா விட பெரிய வைரஸ் இருக்கே, அது தொல்லை தாங்க முடியாம வந்தேன். நீ சொன்ன... கேக்காம கல்யாணம் பண்ணேன், இப்போ அனுபவிக்கறேன்.”

“சரி விடு, என்ன வேணும்னு சொல்லு.. நான் வாங்கினு வரேன். எனக்கு என்ன புள்ளையா, குட்டியா. முரட்டு சிங்கிள்.”

முகத்தில் பெருமிதம் தவழ செல்கிறார்....

ரமணி. ராயபுரம்.


ஒப்பிலியப்பன் கோவில் வாசலில்...

“கொஞ்சம் கதவ திறந்து வெச்சாதான் என்ன? நாமளும் தீபாராதனை சேவிக்கலாமே?”

“இப்படி ஒவ்வொருத்தருக்கா திறந்தா.. அப்புறம் கூட்டம் சேர்ந்துடும், ஆபிசர் அவர் சீட்டை கிழிச்சிடுவா..”

“என்ன பண்ண... கலிகாலம், நா போனப்புறம் உனக்கு தெரியும்னு எங்கப்பா சொன்னார். அவர் போயி மூணு வருஷமாச்சு, இப்பவே இப்படி இருக்கே, இன்னும் என்னென்ன பாக்கணுமோ?”

“கடவுள் மேல பாரத்தைப்போட்டுட்டு இங்கிருந்தே சேவிச்சுட்டு கிளம்பும்...”

“நாராயணா, எல்லாரையும் காப்பாத்துப்பா...” கன்னத்தில் போட்டுகொண்டு நகர்கிறார்.

ரவி, கும்பகோணம்.


ரெட்டைப்பாலம் - திருநெல்வேலி...

“தடுப்பூசி ரெண்டாவது டோஸ் போட்டாச்சா?”

“அட, நீ வேற... மொத டோஸ் போட்டு, எட்டு வாரம் ஆகணுமாமே, இன்னும் ஒரு வாரம் இருக்கு.”

“ஒரு வாரம் இருக்கும், தடுப்பூசி இருக்குமா? தெரியல...”

“ஆமா.. அதுல ஏதோ தட்டுப்பாடுன்னு சொன்னாங்களே...”

“இருக்கிறதையெல்லாம் இந்த மகராஜன் மோடி, நான் ரிடைர் அகறதுக்கு முன்னாடி தூக்கி கொடுத்த மாறி கொடுத்துட்டார். இப்ப என்ன மாறியே அவஸ்தைப்படறார்..”

“உன் சோகத்துக்கு ஏன் மோடியை இழுக்கறீரு, போயி ஊசியை போட்டுக்க வழியைப்பாரும். கொரோனா வந்தா செலவு பண்ணவோ, கவனிச்சுக்கவோ நாதியில்லை.”

“அதுவும் சரிதான்...”

நடையை எட்டி போடுகிறார்கள்...

பிரேமா. திருநெல்வேலி


சிங்காரத்தோப்பு - திருச்சி...

“என்னய்யா நேத்திக்கு வீட்டுக்கு வந்திருந்தேன் , நீர் எங்கேயோ ஊருக்கு போயிருக்கேன்னா உம்ம வொய்ப்...”

“ஆமாய்யா, சென்னைக்கு போயிருந்தேன்... - பிராவிடண்ட் பண்ட் பணம் வரணும் அதான் போய் பாத்துட்டு வந்தேன்.”

“ஏன்யா அதான் நீயும் நானும் அப்பவே எடுத்துட்டோமே, இன்னும் என்ன இருக்குன்னு போய் பாக்க போன...”

தாழ்ந்த குரலில் சொல்கிறார்...

“அட மெதுவா பேசுய்யா, ஏன் அத்தை பொண்ணுக்கும், எனக்கும்.... ம்ஹும் விட்ட குறை தொட்ட குறை... அதான் போய் பாத்துட்டு வரேன், வேற என்ன காரணம் சொல்றது, அவ வீடும் ராயபேட்டைல தான் இருக்கு. அவ தனியா இருக்கா, அதான்....”

“இதுல்ல நெஜமாவே பெனிபிட் பண்ட்” சிரிக்கிறார்...

நண்பரும் சேர்ந்து சிரிக்கிறார்....

கணேஷ், திருச்சி.