“அறிவாளி திட்டமிட்டு செயல்படுபவன், சிந்திக்க நேரம் எடுத்துக்கொள்பவன், நேரத்தை வீணாக்காதவன், மனத்தைக் கட்டுப்படுத்துபவன், புகழில் மயங்காதவன்.”
கவிழ்க்கும் புகழ்ச்சி
திருதுராஷ்டிரனுக்கு விதுரர் கூறும் பொதுப்படையான இந்த அறிவுரை நிர்வாக காலத்துக்கு மிகவும் பொருத்தமானது. அது அரசு நிர்வாகமோ அல்லது தனிப்பட்ட நிறுவன நிர்வாகமோ... ஒரு நிர்வாகிக்கு இருக்கவேண்டிய பொதுப்படையான பண்புகள் எவை என்பதை இங்கே விதுரர் மூலம் தெரிந்து கொள்கிறோம். திட்டமிடுதல், நிறுவன நிர்வாகத்தின் முக்கிய அம்சமாகும். எதையும் ஆராய்ந்து பார்க்காமல் அவசரப்பட்டு செயல்படும் நிர்வாகி, தனக்கும் தன் நிறுவனத்திற்கும் நஷ்டத்தையே ஏற்படுத்துவார். ஆக திட்டமிடல் முதல் கட்டம்.
அவசரப்படாமல் சிந்தித்து செயல் படுபவரே சிறந்த நிர்வாகி. ஒரு நல்ல நிர்வாகி நொடிப்பொழுதையும் வீணாக்கமாட்டார். எந்த நேரமும் அவருக்கு வேலை இருக்கும். அந்த வேளையிலேயே அவர் கவனமாக இருப்பார். இப்படிப்பட்ட நிர்வாகி, தன் மனதை சென்ற இடமெல்லாம் செல்ல விடாது ஒருமுகப்படுத்துவார். காரியம் சாதித்துக் கொள்ளப் புகழ்ச்சியை ஒரு வழியாகப் பயன்படுத்துபவரிடமிருந்து, தன்னைக் காத்துக் கொள்வார். ஒவ்வொரு நிறுவன நிர்வாகியும் இதைத் தெரிந்துகொள்வது நல்லது.
Leave a comment
Upload