தொடர்கள்
ஆன்மீகம்
ஆன்மீக ஆசான் -38 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி 

20210406224851823.jpeg

Dr வீழிநாதன் மாமா

ஸ்ரீ மகா பெரியவாளுக்கு எவ்வளவோ சிஷ்யர்கள், அபிமானிகள், சிப்பந்திகள் என பலர் அவருடன் பயணித்திருந்தாலும்... இப்போது நம் சக காலத்தில் இருக்கும் ஒரு மிக சிறந்த பக்தர், ஸ்ரீ சேலம் ரவி அவர்கள். தற்போது சேலத்தில், ஸ்ரீ மஹாபெரியவாளுக்கு கைங்கரியம் செய்து வருகிறார்.

ஸ்ரீ மகா பெரியவாளோடு குழந்தை பருவம் முதல் வளம் வந்த மிக பெரிய பாக்கியவான். இவருடைய தாத்தா, அப்பா, பின்பு இவர் என தலைமுறையாக காஞ்சி மடத்தின் அபிமானிகள். திரு. வீழிநாதன் மாமாவின் மிகப்பெரிய பொக்கிஷமாக நான் கருதுவது, அவருடைய ஞாபகசக்தி. நான் பார்த்தவரையில், இணையத்தில்,யூடியூபில்... ஸ்ரீ பெரியவாளின் அனுபவம் இவருடையது தான் அதிகம் இருக்கும். எத்தனை எத்தனை சுவராஸ்ய கதைகள், பாடங்கள், நிகழ்வுகள்.

மாமா தன் அனுபவங்களையும், தன் உறவினர்கள் கூறிய அனுபவங்களையும் இத்தனை ஆண்டு காலம் நமக்காக தேக்கிவைத்து, நமக்கு சொற்பொழிவாய் பொழிந்துள்ளார். அவர் அந்த அனுபவங்களை சொல்லும்போதே, நாம் அவர் காலத்தில் இருந்து ஸ்ரீ மகா பெரியவாளை தரிசிக்கவில்லையே என்று ஏங்க தோன்றும்.

20210406224800290.jpeg

மாமா மிகசிறந்த சமஸ்க்ருத விற்பன்னர். அவர் விவரிக்கும்போது, ஆங்காங்கே அவர் பயன்படுத்தும் சில ஸ்லோகங்கள்.. அதற்கான விளக்கங்கள், நமக்கு சமஸ்க்ருதம் கற்றுக்கொள்ள ஆசையை தூண்டும். அவ்வளவு அழகாக அதனை வெளிப்படுத்துவார்.

மீண்டும்... மீண்டும் கேட்கத்தோன்றும் பல சுவாரஸ்ய நிகழ்வுகளை கேட்க.. கேட்க நமக்கு ஸ்ரீ மகா பெரியவாளின் மீது அன்பும், பக்தியும், பரவசமும் பற்றிக்கொள்ளும். ஸ்ரீ பெரியவாளின் சுவாரஸ்ய ஹாஸ்ய நிகழ்வுகளை, அப்படியே சிரிக்க சிரிக்க சொல்லுவார். எப்படிப்பட்ட ஓர் குரு நம்மை காக்கின்றார் என்று தோன்றும்.

பக்தனாக இல்லாமல் ஒரு தோழனை போல், ஸ்ரீ மஹாபெரியவா இவரிடம் பகிர்ந்துகொண்ட பல சுவாரஸ்ய கதைகளை நீங்கள் அனைவரும் கண்டிப்பாக தவிர்க்காமல் கேட்டு மகிழுங்கள். நீங்கள் தேடவேண்டிய பெயர் Dr. Veezhinathan.