அறிவாளியின் தன்மைகள்:
“உலக போக்கை அறிந்து கொள்வது, செயல்பாட்டிற்கான உபாயத்தை வகுப்பது, மனதில் பட்டதை ஒளிவுமறைவின்றி பேசுவது, வரப்போவதை முன்கூட்டியே யூகிப்பது ஆகியவை...”
உத்தியும், யூகமும்:
ஒரு அறிவாளிக்கு சொல்லப்பட்ட இந்த எல்லா இலக்கணங்களும், ஒரு நிறுவன நிர்வாகிக்கும் பொருந்தும், ஒன்றைத்தவிர. அதுதான் ஒளிவுமறைவின்றி பேசுதல். அது நல்ல குணம் என்றாலும், நிர்வாகி அப்படி பேசுவது நிறுவனத்திற்கு நன்மை பயக்காது. சிலரிடம், வெளிப்படையாக பேசலாம், சிலரிடம் பேசக்கூடாது.
யாரிடம் எப்படி பேசவேண்டும் என்பதை அறிந்து கொள்வது, ஒரு நிர்வாகியின் முக்கிய பண்பாகும். மற்றபடி, விதுரர் ஒரு அறிவாளிக்கு வகுத்த அணைத்து இலக்கணங்களும், நிறுவன நிர்வாகிக்கு பொருந்தும். தந்நிறுவனத்தைப்பற்றியும், பிற நிறுவனங்களை பற்றியும் தெளிவான அறிவு ஒரு நிர்வாகிக்கு தேவை. இதைத்தான் உலகப்போக்குகள் பற்றி அறிவு என்கிறார் விதுரர். உபாயம் என்பதை ஆங்கிலத்தில் strategy என்பார்கள். சரியான உத்தி இல்லாவிட்டால், இலக்கை எட்ட முடியாது. ஆகவே ஒரு நிர்வாகி இலக்கை எட்டுவதில், உத்தியை கையாள வேண்டும். அதுபோலவே முக்கியமானது... எதையும் ஊகித்து உணரும் ஆற்றல், சரியான யூகம் வெற்றிக்கு வழி வகுக்கும்.
விதுரர் மேலும் சொல்வார்...
எங்கு தர்மம் இருக்கின்றதோ, அங்கு வெற்றியும் இருக்கும்.
Leave a comment
Upload