தொடர்கள்
ஆன்மீகம்
ஆன்மீக ஆசான் - 41 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20210426212407973.jpeg

ஸ்ரீ மகா பெரியவா இந்த உலகில் சரீரத்தோடு உலா வந்த பொது அவரோடு பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு மனிதர்கள், பல மாநிலத்தில் இருந்து பல வித ஜாதி, மதம் பாகுபாடின்றி அவருடைய ஆசிகள் பெற்று, அவரோடு பயணித்துள்ளனர். அவர்கள் அனைவரின் அனுபவங்களும் மிக சுவாரஸ்யமானவை. அப்படி அவரோடு பயணித்த பலரை பற்றியும் அவர்களின் அனுபவங்கள் பற்றியும் வரு வாரங்களில் காணலாம்.

26-05-2021 அன்று ஸ்ரீ மகா பெரியவாளின் திருநட்சத்திரம். அனுஷம். போனவாரம் அவருடைய ஆங்கில பிறந்த தேதியில் வணங்கிய நாம், இந்த வாரம் அவருடைய திரு நட்சத்திர திருநாளில் வணங்கி அவரின் அனுகிரஹத்தை வேண்டுவோம்.

20210426212245661.jpeg

ஸ்ரீ விக்கு விநாயகராம்...

நாம் சந்திக்கும் கேள்விப்படும், படிக்கும் அனைவருமே ஸ்ரீ மகா பெரியவா மீது இவ்வளவு பக்தி வைத்துள்ளனர் என்று என்ன தோன்றுகிறது அல்லவா. ஸ்ரீ விக்கு விநாயக்ராம் அவர்களை பார்த்தாலும் அப்படித்தான் தோன்றும். தனது கழுத்து சங்கிலியில், சட்டையில் என எப்போதும் சார் பெரியவாளின் படத்தை வைத்திருப்பர். அதுமட்டுமல்ல தான் கச்சேரி செய்யும்போதும், ஸ்ரீ பேருயவாளின் போட்டோவை எப்போதும் வைத்திருப்பார். ஒவ்வொரு பாடல் முடிந்தவுடன், ஸ்ரீ பெரியவாளின் படத்தை கைகூப்பி வணங்கி பின் அடுத்த பாடலை தொடங்குவர்.

ஒரு முறை இவர் வெளிநாட்டில் கச்சேரிக்கு சென்றபோது, கடத்தை அவர் தவர விட்டுவிட்டார். பின்பு ஸ்ரீ பெரியவாளின் அனுகிரஹத்தால், ஜாகீர் ஹுசைன் மூலம் அவருடைய கடம் கிடைத்தது. அது போல் பல சுவாரஸ்ய அனுபவங்களை கொண்டுள்ளார். இவர் மட்டுமல்லாது... இவரது மகன்கள் மற்றும் பேரனும் ஸ்ரீ மகா பெரியவா மீது மிகுந்த பக்தி கொண்டவர்கள். இவர்களின் இரண்டு பாடல்களை நாம் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

அதே போல் ஸ்ரீ பெரியவாளின் நாட்கள் எப்படி இருந்தது என்பதை

அவருடைய அனுதின அனுஷ்டானங்களை அருமையாக பதிவு செய்திருக்கின்றனர். அந்தப் பாடல் நாம் ஸ்ரீ பெரியவாளோடு வாழ்வதை போன்றே என்ன தோன்றும். அதுவும் ஸ்ரீ விக்கு விநாயக்ராம் அவர்களின் மகன் ஸ்ரீ மகேஷ் விநாயக்ராம் குரலில் மிகவும் அருமையாக இருக்கும்.

மேலும் திரு விக்கு விநாயக்ராம் அவர்களின் அனுபவ பேட்டிகள் பல யூடியூபில் உள்ளது. அனுக்கிரஹம் வேண்டுபவர்கள் சென்று தேடி பாத்து கேட்டு மகிழவும்.

ஸ்ரீ பெரியவாளின் அனுஷ திரு நட்சத்திர சிறப்பு தினத்தில், ஸ்ரீ மகா பெரியவாளின் 108 அந்தாதி பாடல் வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் உருவாகுவதற்கு ஸ்ரீ விக்கு விநாயக்ராம் அவர்களின் பங்கு உள்ளது.

இந்நாளின் சிறப்பாக இதனை கேட்டு அனுக்கிரஹம் பெறுவோம்