தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20210428121705826.jpeg


வாசகர் மெயில்

மாமா டீம் அற்புத படைப்பு. என் போன்ற முதிர் காளைகளின் இளமை நினைவுகளை கண் முன் நிறுத்தியது. பிரமாதம் சார்.

சுந்தரராஜன், கோவை.


“மாமா டீம்”... - கி. ரமணி

மிக பிரமாதமான நடை சார். வாரா வாரம். உங்கள் படப்பை எதிர் பார்க்கத் தோன்றுகிறது. just superb.


விகடகவியார்

விகடகவியாரின் அனைத்து தகவல்களும் பேஷ், பேஷ்... பலே பலே ரகமாக இருந்தது! 30 ஆண்டுகளுக்கு பிறகு ராஜீவ் காந்தி உயிருடன் இருந்த படத்தை பார்த்தது சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

சுந்தரம் ராமசாமி, பண்ருட்டி


நம்பிக்கை இழக்க வைக்கும் ஊடகங்கள்... - தங்கர்பச்சான் வேதனை

தங்கர்பச்சானின் அருமையான பதிவு. தேர்தல் முடியும்வரை கொரோனா பரவல் மற்றும் பாதிப்புகளை வெளிக்காட்டாமல், தேர்தல் முடிந்து வெற்றி பெற்றதும் விழித்திருங்கள், தனித்திருங்கள், உங்களை காத்துக் கொள்ளுங்கள் எனக் கூறுவது நியாயமா?!

ஹரிஹரன், கார்த்திக், சென்னை


“ஆத்ம-சினேகம்...” - வெ.சுப்பிரமணியன்

மிக மிக அற்புதமான கதை - ஆத்ம சினேகம். வெல்டன் சுப்பிரமணியன் சார்! கலக்குங்க.

சியாமளா விஸ்வம், ராயப்பேட்டை


வாசகர் விஷுவல்ஸ்

சூப்பர்ப் படங்கள்.

கார்த்திக், அண்ணாநகர்


இ - பாசம்... - பா.அய்யாசாமி

இ-பாஸ் மையமாக வைத்து முதன்முதலாக ஒரு சிறுகதையை உருவாக்கியது மிக்க மகிழ்ச்சி. தந்தையை தன்னுடன் வைத்துக் கொள்ள நடத்தும் போராட்டம் நெகிழ வைத்தது, அய்யாசாமியின் எழுத்து நடை!

ஜமுனா பிரபு, வடபழனி


வாவ் வாட்ஸப்!

வாட்ஸ் அப் படங்கள் அனைத்தும் சிம்ப்ளி சூப்பர்ப்!

தீட்சிதா, கௌஷிக், மயிலை


பத்மஸ்ரீ விருது வென்ற வில்லிசை கலைஞரின் நினைவலைகள்... - 17 - கலைமாமணி பாரதி திருமகன்

கவியரசு கண்ணதாசனுடன் கவிஞர் சுப்பு ஆறுமுகத்தின் ஆரம்ப கால நட்பு மிக அருமை.

மாயா குப்புசாமி, ஊத்துக்கோட்டை


பிரதமர் மோடி செய்வது சரியா.. தவறா? - அலசல் பார்வை.. - நமது நிருபர்

மோடி செய்வது சரியா, தவறா என்று அவருக்கே தெரியாது. இதுல அவரும் டீம்மேட் அமித்ஷா செய்தவற்றை டிடெய்லா விளக்கி, எங்களை கேட்டா... எப்படி தெரியும்? என்னமோ சொல்றீர்... கட்டுரை நல்லாயிருக்கு!

ராதா வெங்கட், ஆவடி


கவித் தலைப்பு....! - சி. கோவேந்த ராஜா.

கண்களுக்கு புலப்படாதது என்பதை அழகாக ஆழமாக கவித்தலைப்பிலேயே சொல்லிவிட்டீர்கள்...

பாலகிருஷ்ணன்


“ஆத்ம-சினேகம்...” - வெ.சுப்பிரமணியன்

கிராமப்புற சூழலும் , பண்ணையாரின் மகளுக்கும் அந்த ஜல்லிக்கட்டு காளைக்குமான ஆத்ம சினேகம் அருமை. சாண்டோ சின்னப்பா தேவரோ அல்லது ராமநாராயணனுக்கோ இப்படி ஒரு கதை கிடைத்தால் வெற்றிகரமாக பல மொழிகளில் சினிமாவாக்கியிருப்பார்கள். கதை சொன்ன நடை சூப்பர்.

சரஸ்வதி, தஞ்சாவூர்.


ஓடிடி... - ஒரு பார்வை... - சுஜாதா நடராஜன்

Nicely written

முத்துக்குமார், சென்னை.


வலையங்கம்

விகடகவியின் 'வேண்டாம் ஆல்பாஸ்' வலையங்கத்தில், சென்ற ஆண்டு கொரோனாவை காரணமாக வைத்து ஆல்பாஸ் போட்டதை போல் இந்தாண்டு செய்ய வேண்டாம். மாணவர்களின் படிப்பு திறனை, அவர் பெற்ற மதிப்பெண்ணே எடுத்துக் காட்டும். வெறும் சான்றிதழ் வேலைக்கு உதவாது என்று 'நச்'சென கூறியுள்ளீர்கள். தமிழக அரசு செவிசாய்க்கும் என நம்புவோம்.

ஜானகிராமன், வந்தவாசி


நேசித்த புத்தகங்கள் - 15 - வேங்கடகிருஷ்ணன்

உங்களது ஒவ்வொரு புத்தக விமர்சனமும் அந்த புத்தகத்தை படி படி என்று ஆவலை தூண்டுகிறது. ஆனால் நேரம் தான் இல்லை. அத்தனையையும் வாசிக்க. ஒவ்வொரு புத்தக விமர்சனமும் ஒரு தீராத ஏக்கத்தை ஏற்படுத்தி விடுவது மட்டும் உண்மை.

ஷங்கர், சென்னை.


“மாமா டீம்”... - கி. ரமணி

ரொமஂப பஂரமாதமஂ சாரஂ. உஙஂக கதைகளஂ இனஂனமுமஂ நிறைய publish ஆகணுமஂ.

வினாதா ஐயங்கார், பெங்களூரு.


பிரதமர் மோடி செய்வது சரியா.. தவறா? - அலசல் பார்வை.. - நமது நிருபர்

தலைப்பே சரியாயில்லை. கட்டுரையாசிரியர் கவனிக்க வேண்டியதிது. பாஜக வின் சமீபத்திய தேர்தலில் அடைந்த perceived சறுக்கல்களை வைத்து ஏதோ பாஜக கட்சிதான் நாட்டின் கரோனா நோயிற்கெதிரான போராட்டத்தின் தற்போதைய கட்டுக்கடங்காத நிலைக்கு காரணம் என்று தனது கட்டுரைக்கு அஸ்திவாரம் போட்டுள்ளார். வீக் தான். சிரிப்புதான் மிஞ்சுகிறது. தேர்தலில் வெற்றி தோல்வி கட்சியின் அரசியலைப் பொறுத்தது. அது அந்த கட்சியை சார்ந்தது. சில கட்சிகள் தனது ஆக்கபூர்வ திட்டங்களை முன்வைத்து ஓட்டு கேட்டு தோல்வியும் பெறலாம். கட்டுரையாளர் சமீபத்திய தேர்தலில் பீஜேபி பின்னடைவு என்ற perceived காரணம் காட்டினார். அவர் சொந்தமாக அலசியியிருந்தால் தன் தவற்றை உணர்ந்திருப்பார். ஏனெனில், அஸ்ஸாமின் ஆளுகையை தக்கவைத்தது, வங்காளத்தில் வெறும் நான்கு எம்எல்ஏக்களிலிருந்து எழுபத்தியேழு எம்எல்ஏக்கள் பெற்றது, பாண்டிச்சேரியில் தனது கட்சியின் ஸ்கோரை ஆறாக ஆரம்பித்தது, 4 தாமரை மலர்கள் மலர்ந்த பெரியவர்களின் தமிழ் மண் என்ற கணிதம் ஏனோ கட்டுரையாளருக்கு தெரியவில்லை. ஒருவேளை செய்தி சேகரிக்கப்பட்ட கட்டுரைகளில் இதனை இந்த கோணலில் காண்பித்திருக்க மாட்டார்களோ, என்னவோ? ஆனால் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் அனைத்து பாரதமும் எதிர்கொள்ள வேண்டிய சவால். இதில் எங்கிருந்து அரசியல் கண்ணாடி கொண்டு பார்க்கும் நோக்கமிருக்முடியும். தேர்தலும் அரசியலும் இணை பிரியாது. ஆனால் அரசாங்கம் என்று வரும்போது அரசியல் கண்ணாடி கொண்டு நோக்குவதிலிருந்தே கட்டுரை எந்த திசையில் செல்லும் என்று அரசியலே தெரியாதவரும் பளிச்சென்று சொல்லிடலாம். கொரோனா உலகத்து சவாலாய் நின்றபோது அதை வாய்ப்பென கருதி மாஸ்க் உற்பத்தி, சானிடைஸர் உற்பத்தி, டேஸ்ட் கிட் உற்பத்தி, PPE kit உற்பத்தி, வென்டிலேட்டர் உற்பத்தி, யென தன்னிறைவு நாடாய் மாறியது நமது பாரதம். கூடவே ஏற்றுமதியும் செய்தது பொருளாதாரமும் பெறுகியது. உலக அரங்கில் மனிதாபிமானமும் பெறுகியது. முதல் அலையை வெற்றி கொண்டோம். இப்படி hits சொல்லிக்கொண்டே போகலாம். அதே சமயம் இன்னும் நன்றாக செய்திருக்கலாம் தான் என்ற உணர்வும் வயாமலில்லை. முன்பு சொன்னது போல இந்த முயற்ச்சி கட்சிகளுக்கிடையிலானதல்ல ஒட்டு மொத்த பாரதீயர்களுக்கு என்று அணுகினால் இன்றைய நிலவரம் கட்டுக்கடங்கியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒருவேளை கட்டுரையாளருக்கு misses மட்டும் எழுதுமாறு பணிக்கப்பட்டிருப்பாரோ எனத் தோன்றுகிறது.. இது ஒன்றும் புதிதல்ல. operations manager Vs auditor உத்யோகம் எப்படியென்று காட்டுகிறது கட்டுரை. முன்னவர் live situationல வேலை செய்யணும். பின்னவர் ஏசியில் கூல்ட்ரிக்ஸ் குடித்துவிட்டு சாவகாசமாக அலசுவது போன்றது.


கி.ரா..! - கரிசல் காட்டு இலக்கிய அரசன்! - ராம்.

கரிசல் எழுத்தின் முன்னத்தி ஏர் கி.ரா. இன்றும் வெற்றிலை போடும் போது அவர் சொன்ன வெற்றிலை எப்படி பூமிக்கு வந்தது என்ற கதை நினைவுக்கு வருகிறது. அருமையான பதிவு ராம்


“மாமா டீம்”... - கி. ரமணி

Took me back to school cricket days. I laughed out loud at many points in the story. So creative!! Loved it!!

கிரிஷ் கல்யாணராமன், மும்பை.