தொடர்கள்
சோகம்
கண்ணீர் அஞ்சலி...

விகடகவி துணை ஆசிரியர் திருமதி சுபா அவர்களிடம் இருந்து அவரது கணவர் திரு. வெங்கட் அவர்களை கொரோனா எமன் அபகரித்து சென்று விட்டார் என்பதை விகடகவி ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறது.

திரு வெங்கட், சுபாவின் காதலர், கணவர், நண்பர், ஆலோசகர், ஆசான் என்று அவரின் துணையாக அவரின் நிழலாக இருந்தார். வெங்கட் பெண்களை மதிப்பவர், திருமணம் ஆனவுடன் பெண்கள், கணவர் பெயரை தன் பெயருடன் சேர்த்துக் கொள்வார்கள். இது நடைமுறையிலுள்ள ஒரு விஷயம். ஆனால் வெங்கட், தன் மனைவியின் பெயரை, தன் பெயருடன் இணைத்து ‘வெங்கட் சுபா’ என்று தன் மனைவிக்கு கௌரவம் அளித்த ஒரு உத்தம புருஷர். வெங்கட் சுலபத்தில் எல்லோரிடம் நட்பாகி விடுவார். நமக்கும் அவரைப் பார்த்தவுடன் பிடித்துவிடும், நம்மை எளிதில் அவர் கவர்ந்து விடுவார், எளிமையானவர். அவர் சிறந்த சினிமா விமர்சகரும், நடிகரும் கூட. சினிமா துறையில், அவர் சிலருக்கு ஏணியாகவும், பலரின் புகழுக்கு காரணமாகவும் இருந்தவர். ஆனால், அதைப்பற்றியெல்லாம் பெருமை பேசும் பழக்கம் அவருக்கு என்றும் இருந்ததில்லை.

பத்திரிகை உலகில் சுபாவுக்கு இன்னொரு பெயர் இரும்பு மனுஷி என்பதுதான். இப்போதுதான் அவர் மிகுந்த மன தைரியத்துடன், எப்போதும் போல் வாழ்க்கை சவால்களை சந்திக்க வேண்டும். முடியாதது என்பது சுபாவின் அகராதியில் என்றுமே இல்லை. அதுதான் உண்மையும் கூட.