“தைரியமாக தடங்கலின்றி பேசக்கூடியவர், பலதரப்பட்ட விஷயங்கள் குறித்தும் சுவைபட பேசுபவர், எந்த விஷயம் பற்றியும் நல்லது கெட்டதை எல்லாம் அறிந்து இருப்பவர் அறிஞர்.”
மணம் வீசா மலர்
விஷயம் தெரிந்தவர்கள் அறிஞர்கள். அப்படி விஷயம் தெரிந்து இருந்தால் மட்டுமே போதாது, தெரிந்த விஷயத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். தெளிவாக சொல்லவேண்டும், தைரியமாகச் சொல்ல வேண்டும். அறிவு என்பது உண்மை சார்ந்தது என்பதால், அதை துணிச்சலுடன் எடுத்துச் சொல்லலாம். தைரியமாக எதையும் எடுத்து சொல்லாதவன், அறிவாளியாக இருந்தும் பயனில்லை. தனக்குத் தெரிந்த பலதரப்பட்ட விஷயங்களை பற்றி தடங்கலின்றி பேசவேண்டும். முதிர்ந்த அறிவு, பழத்தின் சாறு போல வெளிப்படும். அறிஞர்கள் “கேட்டார் பிணிக்கும் தகையவாய்” பேசக்கூடியவர்கள், பேசத் தயங்கினால் பெற்ற அறிவினால் பயன் இல்லை. இந்த மாதிரி நிலைமை இருப்பதைவிட இல்லாமையே மேல் என்று சொல்கிறார் குமரகுருபர சுவாமிகள்.
எல்லா விஷயங்களைப் பற்றியும் முழுமையாக அறிந்து இருப்பதனால் அறிஞர் சுவையாக பேசுவார். அப்படிப் பேச முடியாதவர்கள், அதாவது கேட்பவர் உணர்ந்து கொள்ளும்படி பேச முடியாதவர்கள் மணம் வீசாத மலர் என்கிறார் திருவள்ளுவர்.
இணர் ஊழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார். குறள்: 650
Leave a comment
Upload