தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20210503200116324.jpeg


மாண்புமிகு மனிதர்கள்...! - ஜாசன்

மாண்புமிகு மனிதர்கள் தொடரில், தங்களை வளர்த்து ஆளாக்கிய பத்திரிகையாளர்களை ஞாபகம் வைத்து, இன்றைக்கு அவர்களுக்கு பெருமை சேர்த்து வருகிறீர்கள். உங்களின் எழுத்து பணியும் குரு பக்தியும் மெச்சத்தகுந்தது.

பார்த்திபன், குமாரசாமி, திருவண்ணாமலை


நா காக்க... - கி. ரமணி

டிவியில நாள்தோறும் சொல்லப்படும் நட்சத்திர பலனை வைத்து, நா காக்க எனும் கதையாக்கி கலக்கிவிட்டார் ரமணி. கோபத்தை கட்டுப்படுத்துவது அவசியம்தான். ஆனால், கோபத்தை காட்ட வேண்டிய இடத்தில் அமைதியாக இருந்தால் கோமாளி ஆகிவிடுவோம்.

மங்கையர்க்கரசி, சின்னசேலம்


சினிமா... சினிமா... சினிமா... - லைட் பாய்

சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் புதுப் படங்களின் நிலையைப் பற்றி மிக அழகாகவும் சொல்லியிருக்கிறார் லைட்மேன். ஒரு கிசுகிசு கூட போடாம, ரொம்ப நல்லவரா இருக்காரே லைட்மேன்?!

ஹேமா மணி, வியாசர்பாடி


ராங் லைன் ராஜகோபால்... - ஸ்ரீநிவாஸ் பார்த்த்சாரதி

நான் படிக்கிற காலத்துல பத்மா சேஷாத்ரி பள்ளினு சொன்னாலே மதிப்பும் மரியாதையும் கெடைச்சது. இப்ப என் பேரப் பசங்ககிட்ட அந்த ஸ்கூல்ல படிக்கிறியானு கேட்டா... ஐயையோனு அலர்றாங்க! அதுபற்றிய சீனிவாசின் கட்டுரை நெஞ்சை கனக்க வைத்தது.

ரோகிணி சீனிவாசன், நெசப்பாக்கம்


தீண்டா திருமேனி பெருமாள்…! - ஆர் .ராஜேஷ் கன்னா.

சிறுவாபுரி அருச தீண்டா திருமேனி பெருமாள் கோயில் வரலாறு படித்ததும் சிலிர்ப்பு ஏற்பட்டது. கொரோனா ஊரடங்கு முடிஞ்சதும்... கோ பேக் சிறுவாபுரிதான்!

ரேணுகா ஹரி, சாலிகிராமம்


‘குடுகுடுப்பை’… - வெ. சுப்பிரமணியன்

குடுகுடுப்பைக்காரனை வெச்சு ஓப்பனிங்கே அமர்க்களம்... கடைசியில் அவனை வெச்சே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திட்டீங்க சுப்பிரமணியன். கலக்கல்!

ஜமுனா பிரபாகரன், சின்மயா நகர்


யூடியூப்.... - கி. கல்யாணராமன்

அடடே... யூரின் டியூப்பை ஷார்ட்டா யூடியூப்னு சொல்லலாமா?! இது தெரியாம, இத்தனை நாளா 'மூத்திர குழாய்ல அடைப்பு'னு சொன்னோமே... கல்யாணராமன் பாணியே தனி!

கார்த்திக், சவுந்தரராஜன், வடபழனி


கைதி எண் – 202… - பா.அய்யாசாமி

கைதி எண் 202 சிறுகதையை படித்தபோது, செய்யாத கொலைக்காக தண்டனை பெற்று உள்ளே வந்தவன், தனது நிலத்துக்காகத்தான் மனைவி கொலை என அறிந்து, அந்த டாக்டரை கொல்ல நிலத்தை விற்க முனைவது மனதை நெருடுகிறது.

மாயா குப்புசாமி, ஊத்துக்கோட்டை


பத்மஸ்ரீ விருது வென்ற வில்லிசை கலைஞரின் நினைவலைகள்... - 18 - கலைமாமணி பாரதி திருமகன்

அடடா... என்னவொரு நட்பு, சிநேகம், குரு பக்தி! தனது மாமன் மகளைத்தான் திருமணம் செய்ய போகிறேன் என சிஷ்யர் சுப்பு சொன்னதும், 'அப்படியா சங்கதி' என வாய்விட்டு சிரித்தாரே... அதுதான் என்.எஸ்.கே!

சுபஶ்ரீ ரகோத்தமன், ஶ்ரீபெரும்புதூர்


வாசகர் விஷுவல்ஸ்

எருமை மாட்டின் க்ளோசப் படம் நெசமாவே எங்களை பயமுறுத்திடுச்சு. யப்பா... அதன் ஒளி வீசும் கண்களோ... மிரள வைத்தது. சூப்பரா இருக்கு!

தீக்ஷிதா, அட்சயா, பவித்ரா, சைதாப்பேட்டை


வாவ் வாட்ஸப்!

வாட்ஸ் அப் படங்களில் தந்தை வழி, பசி பெல், கொடை சாயுறாப் போல செம சூப்பர்! மற்றவை ஓகே...

சூர்யா, கௌஷிக், சாய்கிருஷ்ணா, சென்னை


கொரோனா இறப்பு... தனியார் மருத்துவமனைகள் காரணமா?! - ஆர்.ராஜேஷ் கன்னா, தில்லையர்கரசி சம்பத்

கொரோனா நோயாளிகளின் மரணங்களுக்கு தனியார் மருத்துவமனைகள் காரணமா கட்டுரையில் தாங்கள் குறிப்பிட்ட ஒவ்வொரு சம்பவமும் உண்மையே. எனக்கு தெரிந்த உறவினர்கள் பலர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்து பல லட்சங்களை இழந்துள்ளனர். அவர்களில் ஒருசிலர் பலியாகிவிட்டனர் என்பது வேதனை. பூனைக்கு மணி கட்டவேண்டியதுதான்.

ராதா வெங்கட், அச்சிறுப்பாக்கம்


கண்ணீர் அஞ்சலி...

தன்னிடம் ஒருமுறை அறிமுகமான நபர், பிறிதொரு பார்க்க நேரும்போது பலர் கண்டுகொள்ளாமல் சென்றுவிடுவர். ஆனால், நம்ம வெங்கட் சுபா 'ஹாய் ஃப்ரெண்ட்... எப்படி இருக்கீங்?' என குசலம் விசாரிக்காமல் செல்ல மாட்டார். அவரது இழப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது.

ராஜீவன், அடையாறு


வலையங்கம்

லட்சத்தீவுகளின் நிர்வாக அதிகாரி பிரபுல் கோடா பட்டேல், தனது சர்வாதிகார போக்கினால், அப்பகுதியை கோடாரியாக மாற்றிவிட்டார். ஏதேனும் ஆக்கிரமிப்பு நிகழ்வதற்கு முன் ஜனாதிபதி தன்னிச்சையாக முடிவெடுத்து, உரிய தீர்வு காண வேண்டும்.

லட்சுமி ராமகிருஷ்ணன், வேலூர்