வணக்கம் விகடகவி வாசகர்களே!!
Corona அத்தியாயம் முடியக் காத்திருக்கோம்.... நம் கதைக்கு வருவோம்.
Corona காலத்தில் எல்லாமே நேர்மாறுதான்.... positive என்றாலே பயமாகி விட்டது... அதுமாதிரி.. இப்போ இந்திய ஷேர் மார்க்கெட் ராஜாவான சென்செக்ஸ், வரும் காலங்களில் புள்ளிகள் தாறுமாறாக ஏறுமாம்..... எனவே முதலீடு செய்தவர் யாராக இருந்தாலும் தங்கள் பங்குகள் மீது கவனம் செலுத்துமாறு RBI எச்சரித்துள்ளது!
“பஜார்ல உஜாரா இல்லேன்னா நிஜாரை உருவிடுவானுங்கோ... மக்களே கவனம் கீட்டம்.”
நபர் 1 (மாஸ்குடன்!!): “நம்ம மம்மூட்டி பையன் இருக்காருல, அவரு ஏதோ clubhouseல இல்லனு சொல்லுராரு.... என்ன விஷயம்?”
நபர் 2: “அட... நீ நினைக்கிற மாறிலாம் இல்ல!!
Clubhouse என்கிற ‘app’ல அவரு இல்லையாம். அதுல இருக்கறது எல்லாம் dulquer து இல்ல... எல்லாம் fake ID பா!!!”
அறிவாளி 1: “அட இது என்னப்பா chinaவுக்கு வந்த சோதனை!!
இப்போ எதோ புது பறவை காய்ச்சல் வந்திருக்காமே... பாவம் பா china!!!
அது H10N3 வைரஸ்னு சொல்லுறாங்க!!!”
அனுபவசாலி: “எல்லாம் பழகிருச்சு டா!”
“Power rangers சீன அரசு, நாங்க உலகத்த (வெச்சி) செய்வோம்!!”
மாணவ இளைஞர்களே இளைஞிகளே!!! குறிப்பாக 12 ஆம் வகுப்பு CBSE..... என்ன சந்தோசம்?!!
வேற என்ன? மோடிஜியின் வேண்டுகோளுக்கு இணங்க 12 th தேர்வு நிறுத்தப்பட்டுள்ளது... அது சரி! மோடி ஜி சொல்லிட்டாருனா சரியா தான் இருக்கும்.
இசைஞானி இசையில் தற்போது வெளியான Happy Birthday பாடல்... பேரனுடன் கொஞ்சி வாசிக்கும் ‘இளைய’ராஜா....
வாழ்த்துக்கள் “ஏ ராசா”!!!
தமிழ்மொழி எப்போதும் trend இல் இருக்கும் மொழி.... அதை கன்னடம் இவ்வாரம் போட்டி போட்டுக்கொண்டது... யாரோ ஒரு “அறிவாளி” இந்திய நாட்டின் அழகில்லா மொழி என்று கூறி sensation ஆனது. அதற்கு பதில் போட்ட கன்னட சகோக்கள், அந்த பதிவுத்தளத்தை முடக்கி trending ஆகிகொண்டு இருக்கின்றனர்....
“விஷ்வ லிப்பிகல்ல ராணி” ஆக்கும்!
மாற்றம் ஒன்றே மாறாதது; வேண்டும் மாற்றம்.. நாமே கொணர்வோம் என்று சூளுரைத்தார் “அவன் இவன்”, “தெகிடி” பிரபலம் ஜனனி ‘Higher’!!!
உயர்ந்த எண்ணம் என்று சொல்ல வந்தேன் :)
“எல்லாம் இன்பமயம்”, “மீண்டும் கோகிலா” புகழ் இயக்குனர் GN ரங்கராஜன் ஐயா அவர்கள் காலமானார்!
“மாமன் வூடு
மச்சி வூடு
பரிசம் போட்டது குச்சி வூடு”!!!
Lover girl: உனக்கு எப்பிடி கண்ணு போச்சு???
Bestie பரதேசி: Coronaவால தான் போச்சு!!
Lover girl: அது எப்படி?
Bestie பரதேசி: Coronaவால லாக்டவுன்... லாக்டவுன்-னால phone நோண்டி கண்ணு போய்டுச்சு!!
Lover பையன் திருமணத்திற்கு பிறகு:
லவ் பன்றப்ப சிகரெட் புடிகர்து style ஆ இருக்குனு சொன்ன... இப்ப என்னடானா திட்டுற?
Girlfriend திருமணத்திற்கு பிறகு: உன்ன கல்யாணம் பண்ணுவேன்னு கனவா கண்டேன்?
#WorldNoTobaccoDay வாம் மக்களே!!
நைனா to மவன்: எப்போடா வேலைக்கு போகப்போற?
மவன்: டியூ டு Corona லாக்டவுன், ஐ கான்ட் கோ டாடி!!
நைனா: ஐயோ... இத சொல்லியே இவன் தப்பிக்குறான் டா!!!
என்ன விகடகவி ரசிகர்களே, வரட்டுமா...
Leave a comment
Upload