நாகர்கோவில், வடசேரி, மேலகலுங்கடி பகுதியை சேர்ந்த பெயின்டர், அம்பிதாஸ் (42). கொரோனா முழு ஊரடங்கினால், இவரது பெயின்டிங் தொழில் பாதிக்கப்பட்டது. வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்த அம்பிதாஸுக்கு, திடிரென்று ‘தீக்குச்சியால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவத்தை அமைக்கலாமா?’ என ‘ஐடியா’ தோன்றியது. இதையடுத்து, அவர் கடந்த ஒன்றரை மாதங்களாக கஷ்டப்பட்டு, தீக்குச்சிகளைக் கொண்டே மு.க.ஸ்டாலினின் படத்தை உருவாக்கி அசத்தியிருக்கிறார்.
‘‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நான் இதுவரை நேரில் பார்த்ததில்லை. டி.வி-யில் தெரிந்த அவரது அழகான உருவத்தை வைத்து, தற்போது 2 ஆயிரம் தீக்குச்சிகளைக் கொண்டு இந்த ஓவியத்தை வரைந்திருக்கிறேன் என்றார் அம்பிதாஸ்.
தீக்குச்சியின் மேல்பாகத்தில் உள்ள கரிமருந்து பகுதியை அகற்றிவிட்டு, அவரது முழு உருவத்தை வரைந்தேன். அவரது தலைப்பாகம், மீசைக்கு கறுப்பான குச்சிகளை உருவாக்க, அவற்றை சட்டியில் வறுத்து கறுப்பாக மாற்றி பயன்படுத்தி உள்ளேன்.
இந்தப் படத்தை ஃப்ரேம் போட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்திக்கும்போது வழங்க முடிவு செய்திருக்கிறேன்!’’ என அம்பிதாஸ் பெருமை பொங்கத் தெரிவித்தார்.
Leave a comment
Upload