நமது வாசகர்கள் அங்குமிங்கும் (ஹி ..ஹி ஒட்டு) கேட்ட உரையாடல்கள்...
காந்தி மார்க்கெட்டில் இருவர்...
“என் சம்சாரம், எங்க வீடு வேலையெல்லாம் பார்ப்பா..”
“பரவாயில்லையே.. நீ நிம்மதியா இருக்கேன்னு சொல்லு...”
“அட நீ வேறயா, வயிற்றிச்சலை கிளப்பதே.... நான் பாத்திரம் தேய்ச்சா பார்ப்பா, நான் சமையல் பண்ணுனா பார்ப்பா...”
“ஓ கதை அப்படி போகுதா.... அப்ப கொஞ்சம் கஷ்டம் தான், நீ வேணா அதை செய்யேன்.... பாத்துக்கிட்டே இரு அவளை...”
“ம்ம் அப்புறம் பூவா...... அதெல்லாம் வேலைக்காகாது..”
“சரி போ.. உன் தலையெழுத்து இப்படி.....”
இருவரும் பேசிக்கொண்டே உள்ளே செல்கின்றனர்.
கேசவன், கும்பகோணம்.
குயின்ஸ்லாந்து கார் டிரைவிங் சென்டரில்...
“எப்படி அந்த இன்ஸ்ட்ருக்டர் உனக்கு தமிழ்ல சொல்லறாரு..”
“அப்படி கரெக்ட் பண்ணி வெச்சிருக்கேன், அவர் கேரளா ஆளு. சண்டே நம்மை வீட்டுல கட்டிங் உண்டுன்னு சொன்னேன். ரெண்டு வாரமா என்சாய்.”
“அடப்பாவி எங்க போனாலும், உனக்குன்னு ஒரு குறுக்கு வழி...”
“மச்சான் இது குறுக்கு வழி இல்ல, சரக்கு வழி..”
இருவரும் சிரிக்கின்றனர்...
ராஜேஷ், ஆஸ்திரேலியா.
தொரப்பாக்கம் ஜெயின் காலேஜ் அருகில்...
“ஏம்ப்பா வண்டியில பழம் கொண்டு வரீங்க, காய்கறி கொண்டு வரீங்க... அப்படியே மீனும், கறியும் கொண்டு வந்தா, நல்லா இருக்குமே..”
“நல்ல இருக்கும் தான், இப்ப தான் புள்ளைக்கு ஓகே சொல்லிருக்காங்க, இனிமே தான் அம்மாக்கு ஓகே சொல்லுவாங்க...”
“அம்மான்னா ஜெயலலிதாவா?”
“அட நீங்க வேற ஏன்மா? முட்டைக்கு ஓகே சொல்லியிருக்காங்க, இனமே சிக்கனுக்கு ஓகே சொல்லு வாங்க..”
“ஓஓ..புரியுது.....”
சுபா, துரைப்பாக்கம்.
Leave a comment
Upload