தொடர்கள்
கவிதை
மஞ்சள் பட்டில் உனைக்கண்டு...!! - பாலா

20210630213308520.jpeg

இன்று.‌...

மாலை வெயில் மயங்கியதோ
மஞ்சள் பட்டில் உனைக்கண்டு...!
நாளை வருமோ கதிரவனும்
நாணம் விடுத்து மதிதெளிந்து...!

கட்டிச் சொருகிய முந்தானையில்
ஒட்டி வந்த சாம்பல் நிறமாய்...
தொட்டு வந்ததோ உன் மனதில்
விட்டு விலகா என்னுருவம்...!

அணியும் சேலை நிறமெலாம்
அக்கறை யோடு காண்கிறாய்...!
இக்கரை ஓரம் வாடுகிறேன்
அக்கறை காட்டாயோ இனியவளே...!

கண்டதும் கண்கள் கலந்ததோ..
கொண்டதும் நிலம் பணிந்ததோ..
மனங்கள் ஜாலம் புரிந்ததோ..
சூழலும் ஞாலம் நின்றதோ...!

கவிதை பிறந்தது ஏனென்று
மனதில் கேள்வி வந்ததின்று..
மாயம் செய்தது நீயென்று
மறுத்துச் சொல்ல வழியேது...?

சித்திர வழிகள் கதைசொல்ல
நித்திரை கொண்ட இரவாகி..
சொப்பனத்தில் உனை அருகில்
கண்டதும் பிறந்த கவிதையிது...!