தொடர்கள்
தொடர்கள்
விதுரன் சொல் - 23 - சுபஸ்ரீ

20210629230754266.jpg

நடத்தையில் தவறு....

“நண்பனை இழப்பவனும், எதிரியை நண்பனாக்கிக் கொள்பவனும், நண்பனைத் துன்புறுத்துபவனும் மூடனே.”

வாழ்க்கையின் வெற்றிக்கும், தோல்விக்கும் காரண காரியமாக அமைவது நண்பர் யார், பகைவர் யார் என்று பகுத்தறிவது. இந்த அறிவு இல்லாததால், நண்பனாக துடிக்கும் பகைவனிடம் ஏமாந்து போய், இறுதியில் அதை உணர்ந்து கொண்டாலும், துன்பத்தில் இருந்து மீள முடியாமல் பலர் தவிக்கிறார்கள். நல்ல நண்பர்களை இழப்பவர்கள், பின்னர் சேர்க்கை சரியில்லாமல் துன்பப்படுகிறார்கள். சந்தர்ப்ப சூழ்நிலையில், எதிரிக்கு எதிரி நண்பன் என்று ஒரு உத்தியாக, எதிரியை நண்பனாக்கி கொள்பவனும் பெருமளவு கஷ்டப்படுகிறான். நண்பனை நண்பனாகவும், எதிரியை எதிரியாகவும் பாவிப்பது வாழ்க்கையிலும், வியாபாரத்திலும் முக்கியமான செயல்பாடாக இருக்க வேண்டும். இது மாறினால் அவதிதான்.

பல சமயங்களில் துன்புறுத்தப்படும் நண்பன், எதிரணிக்குச் சென்று விடலாம். அதன் இழப்பைத் தாமதமாக உணர்ந்து கொள்ளக்கூடும். அப்படி உணர்ந்து கொள்ளக்கூடியதால் மட்டுமே இழந்ததைப் பெற்று விட முடியாது. ஆக வாழ்க்கையை விட வியாபாரத்தில் நண்பன் யார்? பகைவர் யார்? என்று புரிந்து கொள்ளும் தன்மை மிகவும் முக்கியமானது.

விதுரர் மேலும் சொல்வார்...

எங்கு தர்மம் இருக்கிறதோ அங்கு வெற்றி இருக்கும்.