தொடர்கள்
Daily Articles
"ஜனாதிபதி விசிட், பளிச்சாகும் ஊட்டி!" - ஸ்வேதா அப்புதாஸ்.

தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வர இருக்கும் இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், மூன்றாம் தேதி ஊட்டி வந்து ஓய்வு எடுக்கிறார்.

20210701200310488.jpg
ஜனாதிபதியின் ஊட்டி விசிட்... நான்காம் தேதி, வெலிங்டன் ராணுவ கல்லுரியில் நடைபெறும் ராணுவ அதிகாரிகளின் கலந்துரையாடலில் கலந்து கொள்கிறார். பின்னர்.. ஊட்டி ராஜ் பவனில் தங்கி ஊட்டியை சுற்றி பார்க்கிறார்.

2021070120054614.jpg
ஜனாதிபதியின் ஊட்டி வருகையை முன்னிட்டு, ஊட்டி நகர் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. ஜனாதிபதி சென்னையிலிருந்து கோவை சூலூர் விமானப்படை விமான தளத்தில் வந்திறங்கி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி தீட்டுக்கள் ஹெலிபேடில் ஊட்டி வந்தடைகிறார். பொட்டானிக்கல் கார்டனிலுள்ள ராஜ்பவனுக்கு செல்கிறார்.

20210701200826393.jpg
ஜனாதிபதியின் கான்வாய் செல்லும் வழிநெடுகிலுமுள்ள சாலைகள் முழுவதும் தார் பூசப்பட்டு வருகின்றது. நகராட்சி பொறியாளர் தலைமையில், தீட்டுக்களில் இருந்து ராஜ்பவன் வரை சாலைகள் புதிப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த சாலைகளில் உள்ள அனைத்து ஸ்பீட் பிரேக்கர்களும் அப்புறப்படுத்தப்பட்டு விட்டன. ஜனாதிபதிக்கு எந்த ஜெர்க்கும் இருக்கக்கூடாது, மேலும் கான்வாய் ஸ்பீட் குறைய கூடாது என்பதும் ஒரு காரணம்... என்று கூறுகிறார்கள்.

2021070120130194.jpg
ஊட்டி நகரில் பல சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறது. செயின்ட் மேரிஸ் ஹீலில் உள்ள பியோலி நடைபாதை, குடிநீர் வடிகால் வாரியத்தால் சின்னாபின்னமாக்கப்பட்டு நான்கு வருடமாகியும், இது நாள் வரை நகராட்சி கண்டுகொள்ளவில்லை. அதே சமயம் ஜனாதிபதி கான்வாய் செல்லும் சாலைகள் நன்றாக இருந்தும் அதன் மேல் தார் பூசப்பட்டு வருகின்றது.

20210701201908246.jpg
சாலையின் ஓரத்திலுள்ள செடிகளும் புல்களும் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டு, சாலைகள் சுத்தம் செய்த வண்ணம் இருக்கிறது.

20210701205358728.jpg

ராஜ்பவன் உள்ள பொட்டானிக்கல் கார்டனின் உள்ளே உள்ள சாலை கண்ணும் கருத்துமாக தார் போடப்பட்டு பளிச் என்று காட்சி அளிக்கிறது.

20210701202126727.jpg

கார்டனில் உள்ள பீரங்கியில் துரு அகற்றப்பட்டு, பெயிண்ட் அடிக்கப்பட்டு வருகிறது.

20210701205127620.jpg

கர்டெனில் உள்ள நுழைவாயில் மற்றும் தூண்களுக்கு வர்ணம் பூசப்பட்டுள்ளது. ராஜபவன் முழுவதும் புதுப்பிக்க பட்டுள்ளது.

2021070120244982.jpg
கார்டன் சாலையின் ஓரத்தில் உள்ள சிறிய கடைகள் அனைத்தும் அவசரமாக அப்புறப்படுத்த பட்டுவிட்டது. அவை ஜனாதிபதியின் பார்வைக்கு அசிங்கமாக இருக்குமாம்.... இந்தச் சாலையில் உள்ள அனைத்து மின் விளக்குகளும் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டுள்ளது.

20210701202828124.jpg

கடந்த இரண்டு நாளாக... தீட்டுக்கள் ஹெலிபேட் தளத்தில் கோவை சூலூர் விமானநிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் இறக்கப்பட்டு ஒத்திகை நடந்து வருகிறது. ஞாயிற்று கிழமை காலை நீலகிரி மாவட்ட நிர்வாக அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள்,

2021070120301506.jpg

நகராட்சி அதிகாரிகள் என்று அனைவரும் ஹெலிகாப்டரின் வருகைக்காக பலத்த காற்றை கூட பொருட்படுத்தாமல்... உணவு உண்ணாமல் பசியுடன் காத்து கிடந்தனர். ஆனால், ஹெலிகாப்டர் மாலை நான்கு மணிக்கு தான் வந்தது. பாவம் அதிகாரிகள்... வருவது நாட்டின் முதல் குடிமகன் அல்லவா.....

20210701203221733.jpg
ஊட்டியில் உள்ள பிரபல அரசு திரை அரங்கம் அசெம்பிளி ரூம்ஸ். இந்த திரை அரங்கிற்கு ஜனாதிபதி விசிட் செய்கிறார். அதை முன்னிட்டு திரை அரங்கின் வாயிலில் இருந்த பழமைவாய்ந்த பாரம்பரிய இரண்டு கல் படிக்கட்டுகள் அகற்றப்பட்டு, ரேம்ப் நடை தளம் பொறுத்தப்பட்டுள்ளது. ஜனதிபதியின் வருகையை முன்னிட்டு, 1200 போலீசார் பாதுகாப்பு ஏற்பாட்டுக்கு தயார்... மூன்று நாள் ஊட்டி விசிட்டில், ஜனாதிபதி எங்கு செல்கிறார் என்பதை இதுவரை வெளியிடவில்லை... காரணம்... ஜனாதிபதி ஓய்வு எடுக்க தான் வருகிறாராம். அதே சமயம்... ஊட்டி பைக்காரா படகு இல்லத்தில் போட்டிங் செல்கிறார். பின் ஷூட்டிங் மந்து சென்று இயற்கை அழகிய ரசிக்கிறார். தோடர் இன பழங்குடியினர்களின் நடனத்தை பார்க்கிறார் என்று கூறப்படுகிறது.

2021070120491308.jpg

ஊட்டியில் ஜனாதிபதியின் விசிட்டின் போது மழை இருந்தால்... கோவையிலிருந்து சாலை மார்க்கமாக கோத்தகிரி சாலையில் ஜனதிபதி ஊட்டி வருவார் என்ற தகவல். அதனால் அந்தச் சாலையும் பள பள என்று காட்சி அளிக்கிறது. தன் விசிட்டை முடித்து கொண்டு ஆறாம் தேதி டெல்லி செல்கிறார், நம் ஜனாதிபதி...

ஜனாதிபதி.. அடிக்கடி ஊட்டியிலுள்ள எல்லா இடத்துக்கும் வந்தால், ஊட்டி சூப்பராக மாறிவிடும் என்று முணுமுணுக்கிறார்கள் ஊட்டி வாசிகள்...

ஜனாதிபதியின் விசிட்டால் ஊட்டி நகரே பளிச் என்று காட்சி அளிக்கிறது...