
ஸ்ரீ மகா பெரியவா இந்த உலகில் சரீரத்தோடு உலா வந்த போது, அவரது பல்வேறு காலகட்டங்களில் பயணித்த பலரைப் பற்றியும், பல இடங்களைப் பற்றியும் பார்த்து வருகிறோம். இந்த வாரம்....
ஸ்ரீமதி ஷ்யாமளா & ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பொக்கிஷம் நமக்கு கிடைக்கிறது. இந்த வாரம் நாம் கேட்கப்போகும் அனுபவம், பல அறிய தகவல்களை அளித்துள்ளது. அத்தனை தகவல்களும் நமக்கு அனுகிரகங்கள் தான்.
ஸ்ரீ மகா பெரியவா சொப்பனத்தில் வந்து சொன்ன ஒரே காரணத்துக்காக தன் வாழ்நாள் முழுவதும், எங்கும் சாப்பிடாமல் தானே சமைத்து சாப்பிடுவது என்பது அவ்வளவு சாதாரணம் இல்லை. அதுவும் ஒரு சமயம் 7 நாட்கள் வெளியில் சாப்பிடாமல் இருப்பது எல்லாம் மிக பெரிய சவால். ஸ்ரீ பெரியவாளின் அனுக்கிரஹம் இருந்தால் அனைத்தும் சாத்தியம்.
ஸ்ரீ தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்கள் தனக்கு கிடைத்த மிக பெரிய அனுகிரஹமாக கருதுவது ஸ்ரீ மஹாபெரியவளின் கருணை பார்வை தான். அதனை ஒரே வரியில் “IAM HIS BLESSINGS” என்று ஆத்மார்த்தமாக கூறுகிறார்.
ஸ்ரீ மஹாபெரியாவாள் 1907-ல் மடத்துக்கு வந்த புதிதில் அவர் மேல் ஒரு மேனேஜர் திருட்டு பழி சுமத்துகிறார், அவரை கூட கருணையோடு மன்னிக்கும் குணம் 13 வயதிலேயே அந்த கருணாமூர்த்திக்கு இருந்திருக்கிறது.
இந்த வார காணொளி பல ஆச்சரிய அனுபவங்கள், அனுகிரஹங்கள்...
Leave a comment
Upload