சகோதரிகளே!
குழந்தைக்கும் தாய்க்கும் இடையே உள்ள பிணைப்பினைப் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் இனி பார்க்கலாம்.
“குழந்தை என்று தனியாக எதுவும் இல்லை. குழந்தையும் இன்னொருவரும் என்பதே சாத்தியம்” டொனால்ட் வின்னிகாட் (1964)
குழந்தையின் மூளையை ஒரு வெற்றுத்தாள் புத்தகமாக நாம் எடுத்துக்கொண்டால், அவர்களின் அனுபவங்கள் ஒவ்வொன்றும் அதன் பக்கங்களில் எழுதப்படுகின்றன. குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளரோடு இருக்கும் உறவே இந்தப் புத்தகத்தின் ஆசிரியர். வருடங்கள் நகர, குழந்தை வளர, வளர அவர்களின் அனுபவங்களே புத்தகத்தின் அத்தியாயங்களை நிரப்புகின்றன. அதுவே அவர்களை சமுதாயம் மற்றும் மனம் சார்ந்த வளர்ச்சி பெற்றவர்களாக உருவாக்குகிறது. (அயர் & கிருஷ்ணமூர்த்தி 2020 )
இது தான் நமக்கும் நடந்திருக்கிறது. நமது அம்மா உடனான (அல்லது நமது பாதுகாப்பாளரோடு) குழந்தைப்பருவ பந்தம், நமது குடும்ப சூழல் ஆகியவையே நமது மூளை வளர்ச்சி மற்றும் வளர்ந்த பின்பு நமது மனதின் தாங்கு திறனையும் நிர்ணயிக்கின்றன.
இணைப்புக் கோட்பாடு (Attachment Theory) என்றால் என்ன?
“நமது முதன்மை பாதுகாப்பாளரோடு ஆரம்பத்தில் ஏற்படும் பிணைப்பானது நிலையானதும், சவுகர்யமானதுமாக இருந்தால், அடித்தளம் மிகவும் பாதுகாப்பாகவும் , பலமாகவும் இருக்கும்”. இதுவே இணைப்பு கோட்பாடு சுருக்கமாக.
இந்த முதன்மைப் பாதுகாப்பாளரோடு ஏற்படும் பந்தத்திற்குள் தான் குழந்தை இந்த உலகத்தைப் பற்றியும், அதில் தனது இடத்தைப் பற்றியும் தெரிந்து கொள்கிறது. (பெர்ரி 2009) இங்குதான் அவர்கள் தங்களின் சுய-மதிப்பு, மற்றவர்கள் மேல் நம்பிக்கை, உணர்வுகளை கையாளும் திறன் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் வழிகளை வளர்த்தெடுக்கிறார்கள். இதன் மூலம் தாங்கும் திறன் கொண்ட, நம்பிக்கையான வயதான பருவத்திற்கு அடிப்படையாய் அமையும்.
இந்த பந்தம், பயம் மற்றும் வன்கொடுமையாய் இருந்தால், அந்தக் குழந்தை பொதுவாகவே குறைவான சுய-மதிப்பு, களங்கமான எண்ணங்கள் மற்றும் யாரும் விரும்பாத நிலையிருத்தல் போன்றவற்றை வளர்த்துக்கொள்ளும். (டோபின், 2016) பின்னாளில், மிகவும் குறைந்த தாங்கும் திறன் மற்றும் மீண்டும் பிரச்சனைகளுக்கு ஆளாக்கப்படுத்தல் போன்றவை அடிக்கடி நிகழும் சாத்தியக்கூறுகள் இதில் உண்டு.
கோட்பாட்டின் அடிப்படைகள்...
ஜான் பௌல்பி (1958) தான் இணைப்புக் கோட்பாட்டினை உருவாக்கியவர். அவரின் சக ஊழியரான ஐன்ஸ்வொர்த் இதனை மேலும் விரிவாக்கி கீழ்கண்ட இணைப்பு வகைகளை உருவாக்கினார். இது குழந்தை மற்றும் பாதுகாப்பாளரிடையே உருவாகும் பந்தத்தைக் குறிப்பதாகும்.
# பாதுகாப்பாக உணர்பவர்
# பாதுகாப்பில்லாமல் தவிர்ப்பவர்
# பாதுகாப்பில்லாமல் தெளிவற்று இருப்பவர்
# ஒழுங்கில்லாமல் இருப்பவர்
தாயும் சேயும் இணைப்பில் மன நலம் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை தொடர்ந்து காணலாம். மேலும் விவரங்கள் அறிய www.thunai.org இணைய தளத்தை பாருங்கள்.
பேணுவோம்....
Leave a comment
Upload