தொடர்கள்
கவிதை
ஐந்தாம் அகவை....! - சி. கோவேந்த ராஜா.

20211026211245925.jpeg

நிலங்கள் ஐந்து...!
புலன்கள் ஐந்து...!

பூதங்கள் ஐந்து...!
லோகங்கள் ஐந்து...!

இன்று -
நம் “விகடகவி”'யின்
அகவையும் ஐந்து...!

ஆம் -
ஐந்தாம் அகவை ஆரம்பம்...!

வாரந்தோறும்....
அறுசுவை விருந்தும் அமோகம்...!

சனிக்கிழமை வந்தாலே...
தனி சுகம் தான்...!
தனி சுவை தான்...!

இணைய இதழ் உலகில்...
“விகடகவி” பொலிவுடன்....
இணையும் நாள்...
இனிய நாள்...!

பரபரப்பான அரசியல் கட்டுரைகள்...
பக்திமயமான ஆன்மீகத் தகவல்கள்....

இனிமையான இலக்கியப் பகுதிகள்...
அருமையான அறிவியல்...
தொழில் நுட்பச் செய்திகள்...

வலுவான வரலாற்றுச் செய்திகள்...
கணணிமயமான கணிதத் தகவல்கள்...

உன்னதமான உலக நடப்புகள்....
விருப்பமான வண்ணப் படங்கள்...

அனைத்தும் அடங்கிய...
அறிவுக் களஞ்சியம்...!
ஆக்கப் பெட்டகம்....!

ஆதாரங்களுடன்....
அனைத்தையும்....
அள்ளித் தரும்....
ஆற்றல்மிகு....
ஆசிரியர் குழுவினருக்கும்....

ஆதரவு நல்கி....
அனைத்தையும்....
அள்ளிப் பருகிடும்....
அன்புமிகு....
வாசகப் பெருமக்களுக்கும்....

சீர்மிகு வாழ்த்துக்கள்...!

இணைய இதழ் உலகின் முன்னோடி...
இளைய “விகடகவி” -
ஈடு இணையில்லாப் புகழுடன்....

பல்லாண்டு... பல நூறாண்டு... காலம்
தொடர்ந்து.... மலர்ந்திட....
மலர்ந்து....தொடர்ந்திட....

ஒளிர்ந்து... மிளிர்ந்திட....
மிளிர்ந்து... ஒளிர்ந்திட....

சிறப்பான வாழ்த்துக்கள்...!