ஸ்ரீ மகா பெரியவா இந்த உலகில் சரீரத்தோடு உலா வந்த போது, அவரது பல்வேறு காலகட்டங்களில் பயணித்த பலரைப் பற்றியும், பல இடங்களைப் பற்றியும் பார்த்து வருகிறோம். இந்த வாரம்....
மயிலையில் மஹாபெரியவா...

ஸ்ரீ மகா பெரியவாளின் திரு நட்சத்திரமான அனுஷம் நட்சத்திர தினத்தன்று, மாதம் தோறும் உலகம் முழுவதும் பல கோயில்களில், இல்லங்களில் பூஜை நடைபெறுகிறது. அதற்காக உருவாக்கப்பட்டது தான் ஸ்ரீ மகா பெரியவா அனுஷம் டிரஸ்ட். மைலாப்பூரில், ஸ்ரீ மகா பெரியவாளின் வீதி புறப்பாடு செய்து, மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
தற்போது இந்த டிரஸ்ட் மூலம் மைலாப்பூரில் உள்ள பிச்சு பிள்ளை கோயில் தெருவில், ஒரு இடத்தை சுமார் 7 கோடி ரூபாய்க்கு வாங்கி, அதில் 3 முதல் 4 கோடி ரூபாய் செலவில் ஒரு கோயில் கட்ட திட்டமிட்டுள்ளனர்.
ஏற்கனவே மைலாப்பூரில் மகா பெரியவா அவர்களின் பாதுகையோடு, ‘ஸ்ரீ பெரியவா பாதுகை கோயில்’ ஒன்று இருப்பது நாம் எல்லோரும் அறிந்ததே. அதே போல் கபாலீஸ்வரர் கோயில் அருகில் ஒரு கோயில் உருவாகப்போகிறது.
உலகெங்கும் உள்ள ஸ்ரீ மகா பெரியவாளின் பக்தர்கள், அதற்கான நன்கொடையை செய்து வருகின்றனர். மிக விரைவில்... மைலாப்பூரில், கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரரை சந்திக்க வருபவர்கள், சிவனாகவும் - சக்தியாகவும் இருக்கும் ஸ்ரீ மகா பெரியவாளை தரிசிக்கலாம்.
அதுகுறித்த சில காணொளிகள் இதோ...
2018-ல் ஒரு பக்தரால் எடுக்கப்பட்ட திருவீதி புறப்பாடு காட்சிகள்.
நன்கொடை தொடர்பாக திரு எஸ் வீ சேகர் அவர்களின் விண்ணப்பம்
இந்த கோயில் குறித்த புரளிகள் பற்றி ஸ்ரீ கணேச சர்மா அவர்களின் விளக்கங்கள்
Leave a comment
Upload