தொடர்கள்
கவர் ஸ்டோரி
பிரதமர் பாதுகாப்பு குளறுபடிகள்..! - உச்ச நீதிமன்றம் நேரடி விசாரணை

20220011174850216.jpg

பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஃபெராஸ்பூரில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் ஹொலிகாப்டர் முலம் சென்று பிரதமர் மோடி பங்கேற்று, ருபாய் 42,750 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது.

பஞ்சாப் வந்தடைந்ததும், பிரதமர் செல்லும் பகுதியில் வானிலை மிக மோசமாக இருந்ததால், 111 கிமீ தூரம் தரை வழியாக சென்று நிகழ்ச்சியில் பங்கேற்க தீர்மானிக்கப்பட்டு, அவரது பாதுகாவலர் குழுவுடன் கிட்டத்தட்ட 90 கிமீ தரை வழியாக பயணம் மேற்கொண்டனர்.

பஞ்சாப் விவசாய அமைப்பு சில, பிரதமர் வரும் பாதையில் பதிண்டா என்ற இடத்தின் அருகில் போராட்டம் நடத்தி வருவதால், பிரதமரின் கார் மேலும் செல்ல முடியாமல் பாலத்தின் மீது அப்படியே நின்று விட்டது.

20220011175003460.jpg

பிரதமர் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு செல்ல இன்னும் 20 கிமீ தூரம் தான் இருந்த நிலையில், அங்கிருந்த மேம்பாலம் மீது பிரதமர் பயணித்த கார் மேலும் செல்ல முடியாமல் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் அப்படியே பாதுகாவலர்கள் சூழ நிறுத்தப்பட்டது.

பிரதமர் பங்கேற்க செல்லும் வழியில் ஏற்பட்ட பெரும் பாதுகாப்பு குளறுபடி காரணமாக தனது நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு பிரதமர் மோடி, பதிண்டா அருகே இருக்கும் விமான நிலையத்திற்கு சென்று விமானத்தில் பறந்து திரும்ப, அவரது பாதுகாவலர் குழ முடிவு செய்தபடி விமானத்தில் பிரதமர் டெல்லி சென்றடைந்தார்.

டெல்லி விமான நிலையத்தில் இறங்கியதும், பஞ்சாபில் இருந்து உயிருடன் அனுப்பி வைத்தார்களே என்று தன்னுடன் வந்த சக பாதுகாப்பு அதிகாரிகளிடம் பிரதமர் வருத்தப்பட்ட விஷயம், சமுக வலைதளங்களில் பரவியது.

பிரதமர் பாதுகாப்பு பணியில் ஏற்பட்ட குளறுபடியே, அவரின் பயணம் ரத்து ஆனாது என்ற கோணத்தில் ஆய்வுகள் தொடங்கி உள்ளது.

20220011175037307.jpg

மறுபுறம் பிரதமரின் பாதுகாப்பிற்காக மட்டுமே செயல்படும் SPG (special protection Group) பிரிவில் கிட்டதட்ட 3000 சிறப்பு பயிற்சி பெற்ற சிறப்பு காமண்டோக்கள் உள்ளனர். ஆண்டிற்கு 540 கோடி செலவழித்து செயல்பட்டு வருகிறது. பிரதமர் பாதுகாப்பிற்கு மட்டும் நாளொன்றிற்கு ருபாய்1.62 கோடி SPG (special protection Group) செலவிடப்படுகிறது. சென்ற ஆண்டு இந்த பாதுகாப்பிற்கு ஆண்டிற்கு ருபாய் 600 கோடி என நிதி மந்திரி உயர்த்தினார்.

பிரதமர் செல்லும் விழாக்கள், நிகழ்ச்சிகள் முதல் அனைத்து தரை மார்க்கம், வான் வழி, நிலவழி மற்றும் நடந்து போகுதல் வரைக்கும் அனைத்திற்கும் SPG முழு பொறுப்பேற்றுகொண்டு, வழி நடத்தி அழைத்து செல்வது தான் இவர்களுக்கு பிராத்யேகமாக வழங்கப்பட்ட பணி ஆகும். இவர்கள் பிரதமருடன் எப்போதும் பின் தொடர்வார்கள்.

பிரதமர் பயணம் செய்யும் தரை, வான்மார்க்கம் மற்றும் நீர் பகுதிகளை சில நாட்களுக்கு முன்பே SPG (Special Protection Group) சம்மந்தப்பட்ட மாநில அரசின் டிஜிபி, உள்துறை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு சம்மந்தப்பட்ட இடத்தினை ஆராய்ந்து, பிரதமர் செல்லும் பாதையில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் எப்படி பத்திரமாக அவரை மாற்று பாதையில் அழைத்து செல்வது போன்ற பாதைகளையும், மாற்று வழிகளையும் வரைபடமாக தயாரித்தும், நேரில் சென்று ஆய்வு செய்தும், அது குறித்து அறிக்கைகளை அவர்கள் வைத்திருக்கும் பாதுகாப்பு பற்றிய குறிப்புகள் அடங்கிய ‘ப்ளு புக்’ எழதி வைத்து நடைமுறைக்கு கொண்டு வருவார்கள்.

தற்போது, வான் மார்க்கமாக செல்ல வேண்டிய பிரதமர், வானிலை சரியில்லாத காரணத்தால் தரைமார்க்கமாக செல்ல... அவரை தற்போது பிரச்சனைக்கு உரிய சாலை மார்க்கத்தில் செல்ல உத்திரவு பிறப்பித்தது யார் என்று கேள்வி பாதுகாப்பு ஆலோசகர்கள் கேட்க தொடங்கி உள்ளனர்.

சாலை மார்க்கத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று பஞ்சாப் மாநில காவல்துறையினர், SPG (Special Protection Group) வயர்லெஸ் முலம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்ற செய்தி கசிந்து வருகிறது.

20220011175227561.jpg

பிரதமர் SPG (Special Protection Group) பாதுகாப்பு வளையத்தில் தரைமார்க்கமாக வந்தாலும் அவர் தான் செல்லும் பாதையை மூழுவதுமாக முன்று நாட்களுக்கு முன்பே சானிடைஸ் செய்து சீல் வைத்து இருக்க வேண்டும். ஆனால் பிரதமரின் வாகனம் கடைசி நிமிடத்தில் தந்து பயண் திட்டத்தினை மாற்றி கொண்டதால் தான் பிரதமர் வாகனம் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு செல்ல முடியாமல் இது போன்ற சூழ்நிலை உருவானது என பஞ்சாப் முதலமைச்சர் சரண்சிங் சாணி தெரிவிக்கிறார்.

பிரதமர் செல்லும் வான்வழி பாதையில் ஏற்பட போகும் வானிலை எச்சரிக்கைகளை SPG (Special Protection Group) புறகணித்ததா என்றும் அதன்பின் பிரதமர் தனது பயணத்தினை சாலை மார்க்கமாக செல்ல முடிவெடுத்த பின், அவருக்கு என்று குண்டு துளைக்காத மற்றும் எல்ஈடி வெடிப்பொருட்களால் பாதிப்பு ஏற்படுத்தாத லேட்டஸ்ட் கனரக வாகனங்களான மேபக், ரேஞ்ச் ரோவர் அல்லது லேண்ட் குருஸர் போன்ற பாதுகாப்பான வாகனத்தினை பயன்படுத்தாமல், எந்தவித பாதுகாப்பு வசதியின்றி இருக்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர் வாகனத்தில் பிரதமரை ஏற்றி செல்ல யார் அழுத்தம் கொடுத்தது என்று தற்போது டெல்லி பாதுகாப்பு வட்டாரத்தில் கேள்வி எழும்பியுள்ளது.

பிரதமரின் வாகனம் செல்வதற்கு முன்பு SPG (Special Protection Group) வாகனங்கள் ருட் கிளியரன்ஸ் செய்து சென்றது. பிரதமர் வாகனம் பதிண்டா மேம்பாலம் மீது 20 நிமிடமாக நின்றிருந்தபோது, முன்னால் சென்ற இந்த பாதுகாப்பு வாகனங்கள் திரும்பவில்லை என்றும் அந்த பாதுகாப்பு வாகனங்கள் எங்கே சென்றது. இதனால் எப்படி மேம்பாலம் மீது நின்ற பிரதமர் பயணம் செய்த வாகனத்தை எளிதாக அடையாளம் காண முடிந்தது என்ற பெருத்த கேள்வியும் எழந்துள்ளது.

பிரதமரின் வாகனத்தின் அருகே SPG (Special Protection Group) பாதுகாப்பினையும் மீறி, மேம்பாலம் அருகே பிரதமர் அமர்ந்திருந்த காரின் அருகே பொதுமக்கள் எப்படி சர்வ சாதாரணமாக சென்றனர். பிரதமர் அமர்ந்திருந்த காரின் அருகில் பொதுமக்களை செல்ல அனுமத்தித்தது யார் என்ற கேள்வி எழுகிறது. அத்துடன் காரில் இருந்த பிரதமரை சாதாரண நபர்கள் கைப்பேசியில் போட்டோ எடுத்து கொண்டது அச்சத்தினை வரவழைத்துள்ளது. பிரதமருக்கு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை இருந்தும், பாதுகாப்பு பிரிவினர் இதை பற்றி கவலைபடாமல் எப்படி அவர் அருகே மக்களை அவரது பாதுகாப்பு படையினர் அனுமதித்தனர். பிரதமர் தன் பயணத்தினை மேலும் தொடர முடியாத நிலையில் உடனடியாக திரும்புவதற்கு பதிலாக, கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் அவரை பாலத்தின் மீதுள்ள காரில் அமரவைத்து காத்திருந்தது ஏன் என்ற பில்லியன் டாலர் கேள்வியை பாதுகாப்பு ஆலோசகர்கள் கேள்வியாக எழுப்புகின்றனர்.

மாநிலத்தில் எந்த ஒரு போராட்டம் நடந்தாலும், உடனடியாக உளவுதுறை மாநில அரசுக்கு தகவல் கொடுத்துவிடும். அதுவும் பிரதமர் பயணம் செய்யும் பாதையில் இதுபோன்று விவசாயிகள் போராட்டம் நடத்த போகிறார்கள் என்று மாநில அரசு, மத்திய உளவு துறையான ஐ.பி, உள்துறை அமைச்சகம் மற்றும் SPG (Special Protection Group) ஏன் தகவல் அளிக்கவில்லை என்ற கேள்வியும் எழும்புகிறது.

பிரதமரின் பயண திட்டம் அவரது SPG (Special Protection Group) பாதுகாப்பு பிரிவினரால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ப்ளுபுத்தகம் எங்கே என்று பெருத்த சர்ச்சை கிளம்பியுள்ளது. இதற்கிடையே பிரதமரின் பயணத்தில் பாதுகாப்பு குளறுபடிகள் ஏற்பட்டிருந்தால் SPG (Special Protection Group) சட்டப்படி, பஞ்சாப் மாநில அரசின் போலீஸ் டிஜிபியும், பஞ்சாப் மாநில தலைமை செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சகமும், இண்டலிஜென்ஸ் பீரோவும் (IB) தான் பொறுப்பேற்க வேண்டும். பிரதமரின் பயணம் தடைபட்டதற்கு இதுவரை யார் மீதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது.

20220011175718615.jpg

ஏற்கனவே, 1984-ம் ஆண்டு ஜுன் மாதம் 1 முதல் 8 ந்தேதி… சீக்கியர்களின் பொற்கோயிலுக்கு ராணுவத்தினை அனுப்பி அங்கிருந்த சீக்கிய போராளிகளை ஆபரேஷன் ‘ப்ளு ஸ்டார்’ என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை எடுக்க அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உத்திரவிட்டார்.

இதன் முலம் பொற்கோயில் வளாகத்தில் நடைபெற்ற ராணுவ நடவடிக்கை காரணமாக... ராணுவத்தை சேர்ந்த 83 பேரும், பொதுமக்கள் 492 பேரும் இறந்ததாக அப்போதைய செய்தி வெளியானது.

இதன்பின், சீக்கியர்கள் தங்கள் புனிதாமாக கருதும் பொற்கோவிலுக்குள், ராணுவ நடவடிக்கை எடுத்தற்காக பிரதமர் இந்திரா காந்தி மீது கோபமாக உள்ளனர். இனி தங்கள் பாதுகாப்பு பணியில் சீக்கியர்கள் இடம் பெற வேண்டாம் என்று உளவு துறை ஒரு நோட் போட்டு இந்திரா காந்திக்கு அனுப்பியது.

அதனை பார்த்த அப்போதைய பிரதமர், தனது பாதுகாப்பு பற்றி கவலையில்லை... இந்தியா ஒரு ஜனநாயக நாடு, தனது மெய்காவலர்களை மதம் மற்றும் மொழியால் பிரித்து பார்க்கக் கூடாது எனவும், தனக்கு பாதுகாவலர்களாக இருக்கும் சீக்கிய பாதுகாவலர்கள் பணியில் தொடரட்டும் என்று உளவு பிரிவுக்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தெரிவித்து இருந்தார்.

அடுத்த நான்கு மாதங்களில் இந்திரா காந்தியை, அவரது இரண்டு சீக்கிய பாதுகாவலர்களே அவரது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர்.

பிரதமர் இந்திராகாந்தி தான் இறந்த போது, எப்போதும் தான் அணியும் புல்லட் புருப் ஜாக்கெட் அணியாமல் இருந்துள்ளார் என்ற செய்தியும் வெளியானது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, பாதுகாப்பு குளறுபடியால் உயிர் துறந்தார்.

20220011175756484.jpg

அதன்பின் 1991-ம் ஆண்டு, ராஜீவ் காந்தி - ஜெயலலிதாவுடன் கிருஷ்ணகிரியில் நடைபெறும் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்ள முடிவாகி சென்னை வந்தார்.

அதற்குள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மரகதம் சந்திரசேகர் தனது எம்.பி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ள எந்தவித முன் நிகழ்ச்சி நிரலுமின்றி ஸ்ரீபெரும்புதூர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ராஜீவ் காந்தியை விமான நிலையத்திலிருந்து அழைத்து சென்றார்.

ராஜீவ் காந்தி தனது பாதுகாப்பு அரணை மீறி மக்களிடம் அன்பாக நெருங்கிய போது, மனித வெடிக்குண்டால் ஸ்ரீபெரும்புதூர் நிகழ்ச்சி மேடை அருகே செல்வதற்கு முன்பே உயிரிழந்தார். அதன்பின் இந்த வழக்கு விசாரணை, ஜெயின் கமிஷன் முலம் விடுதலை புலிகள் தான் ராஜீவ் மரணத்திற்கு காரணம் என்ற கோணத்தில் சென்று முடிந்தது என்ற சர்ச்சை, அந்த வழக்கை கையாண்ட காவல் துறையினருக்கு அதிருப்தியாக இருந்தது. ராஜீவ் காந்தி கலந்து கொண்ட ஸ்ரீபெரும்புதூர் நிகழ்ச்சியில் மக்களை வரிசைப்படுத்த ஒழங்கான தடுப்புக்கள் கூட அமைக்கபடவில்லை. ராஜீவ் காந்தி, தனது பாதுகாப்பு குளறுபடியால் உயிரிழந்தார்.

தற்போது பிரதமர் மோடி அதிகளவில் எல்லை தாண்டிய பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள நபர் என்பதை மறந்து SPG (Special Protection Group) மற்றும் இண்டலிஜென்ஸ் பீரோ (IB) அவரது பாதுகாப்பில் குறைபாடு ஏற்படுத்தி விளையாடியதா என்ற கேள்வி டெல்லியில் ஒங்கி ஒலிக்கிறது.

20220011180211187.jpg

பயணத்தில் ஏற்பட்ட குறைபாடுகளை பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

பஞ்சாபில்... பிரதமர் செல்லும் பாதுகாப்பு ஏற்பாடுகள், அவர் செல்லும் பாதை குறித்து தீர்மானிக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் பஞ்சாப் - அரியானா உயர்நீதிமன்ற பதிவாளர் மாநில அரசிடம் இருந்து பெற்று, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

பிரதமரின் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டிற்காக, முதல் தகவல் அறிக்கையினை பஞ்சாப் போலீசார் பதிவு செய்துள்ளனர்.

பிரதமரின் பஞ்சாப் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகளை விசாரிக்க பொதுநல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பஞ்சாப் உயர்நீதிமன்றம் மற்றும் பஞ்சாப் அரசு, பிரதமரின் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகளை விசாரிக்க தடைவிதித்து ஒய்வு பெற்ற உச்சநீதிமன்ற பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையிலான குழு இதுபற்றி விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் உத்திரவிட்டுள்ளனர்.

20220012212943627.jpg

உச்சநீதிமன்ற ஒய்வு பெற்ற நீதிபதி இந்து மல்ஹோத்ராவுடன் இணைந்து தேசிய புலனாய்வு முகமையில் இருக்கும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ், டிஜிபி சண்டிக்கர் யூனியன் பகுதி, கூடுதல் டிஜிபி பாதுகாப்பு பஞ்சாப் மற்றும் அரியானா நீதிமன்றத்தின் ரிஜிஸ்தர் ஜெனரல், இவர் மெம்பராகவும் இந்த குழவிற்கான கோ ஆர்டினேட்டராகவும் பணிபுரிய உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்து உள்ளது.

பிரதமரின் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு யாரால் ஏற்படுத்தப்பட்டது என்ற கோணத்திலும், அதோடு பிரதமருக்கு அவருடன் பணியாற்றும் பாதுகாப்பு துறையினருக்கும் வரும் காலத்தில் எப்படி பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது என்றும் இந்தக் குழ வியாழன் மாலை முதல் காணொலி முலம் தனது விசாரணையை துவக்கி உள்ளது.

உச்சநீதிமன்ற ஒய்வு பெற்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா மூத்த பெண் வழக்கறிஞராக இருந்தவர். நேரடியாக அவரை உச்சநீதிமன்ற பொருப்பினை வகித்தார். அவர் நீதிபதியாக பணியாற்றிய காலத்தில், பல வழக்குகளில் வேகமாக தீர்ப்புகளை வழங்கியவர் என்பதோடு சபரிமலை கோயிலில் பெண்கள் நுழையலாமா மற்றும் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மீது குற்றஞ்சாட்டப்பட்ட பெண் ஊழியர் வழக்கினையும் கையாண்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் அரசாங்கம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், பிரதமரின் பஞ்சாப் பயணத்தில் எந்தவித பாதுகாப்பு குறைபாடும் இல்லை என்றும் முழு விசாரணை நடந்து, அப்போது பஞ்சாப் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மீது குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிருபிக்கப்பட்டால், எந்த உச்சபட்ச தண்டைனையையும் ஏற்க தயார் என்று நீதிபதிகளிடம் முறையிட்டார்.

பிரதமர் பயணத்தினை தீர்மானித்த SPG (Special Protection Group), உள்துறை அமைச்சகம், இண்டலிஜென்ஸ் பீரோ, பஞ்சாப் காவல்துறை ஆகியவை தான் பொறுப்பேற்க வேண்டும் என முன்னாள் உள்துறை செயலாளர் கோபால கிருஷ்ண பிள்ளை தெரிவிக்கிறார்.

பிரதமரின் பாதுகாப்பு என்பது நமது நாட்டின் அஸ்திவாரம்… இது குறித்து பிஜேபி மற்றும் காங்கிரஸ் பரஸ்பர அரசியல் குற்றசாட்டு, இருதரப்பு வாதங்களையும் இங்கே நிராகரிக்கப்படுவது அவசியமாகிறது.

ஆக, நமது நாட்டின் பிரதமரின் உயிர் விலைமதிப்பற்றது. இந்தியா முன்னேறி கொண்டிருக்கும் நேரத்தில், பிரதமரின் பயணத்தில் பாதுகாப்பு குளறுபடிகள் என்பது அயல் நாட்டு சதியா அல்லது உள்குத்து வேலையா அல்லது பாதுகாப்பு குறைபாடு தான் காரணமா என்பது முழு விசாரணைக்கு பின்பு தான் வெளிவரும் என்பது டெல்லி முழவதும் பேச்சாக உள்ளது.

- டெல்லி வாலா