தொடர்கள்
பொது
பிரதமர் பஞ்சாப் பயண குளறுபடிகள் - கண்மணி மைந்தன்

20220011190538615.jpeg

பஞ்சாப் சென்ற நமது பிரதமரின் வாகன அணிவகுப்பு, ஆர்பாட்டகார்களை கிளியர் செய்ய முடியததால்... நட்ட நடு பாலத்தில் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து எஸ் பி ஜி பாதுகாப்பு படை பிரதமர் வாகனத்தை துப்பாக்கியுடன் சூழ, 15 முதல் 20 நிமிடங்கள் ஒரு பரபரப்பான சூழல் அங்கு நிலவியது.

பாலத்தின் மறு முனையில் ஆர்ப்பட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால், உண்மையில் இந்தத் திடீர் ஆர்ப்பாட்டம் யார் மூலம் நடத்தப்பட்டது என்ற குழப்பம் இப்போது வரை நிலவி வருகிறது. மத்திய மற்றும் மாநில உளவு பிரிவினர் இதனை கண்டுபிடிக்க தவறியதால் நேர்ந்த பாதுகாப்பு குறைபாடுகளால், பிரதமரின் வாகனம் நட்ட நடு பாலத்தில் நிறுத்தப்பட்டு, அவர் கலந்து கொள்ள இருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

பிரதமரின் பாதுகாப்பிற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் என்ன என்று பார்ப்போம்:

Special Protection Group (SPG) என்னும் சிறப்பு பாதுகாப்பு குழு என்பது பிரதமரை மட்டும் பாதுகாக்கும், ஒரு தனி தன்னாட்சி அமைப்பு. பிரதமருக்கு நெருக்கமான பாதுகாப்பை வழங்கும் பொறுப்பு, உயரடுக்கு (SPG) கமாண்டோ படைக்குதான் உள்ளது.

Advance Security Liaison (ASL) அல்லது மேம்பட்ட பாதுகாப்பு இணைப்பு, பிரதமரின் பாதுகாப்புடன் சம்மந்தப்பட்ட SPG officials, மத்திய மாநில உளவுத்துறை, Intelligence Bureau (IB) officials, மாநில காவல்துறை state police officials, ஆகியோரை ஒருங்கிணைக்கும் அமைப்பாகும். பிரதமரின் பயணத்திட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் மத்திய (ASL) நிறுவன அதிகாரிகளால் ஆவணப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

திடீரென்று ஒரு மாநில உளவுத்துறையும், காவல்துறையும், அம்மாநிலத்திற்கு வரும் பிரதமரின் வருகையின் போது, ஒத்துழைக்காமல் போகும் பட்சத்தில், மத்திய அரசின் இண்டலிஜென்ஸ் பீரோ பிரதமர் பாதை குறித்து முன்னெச்சரிக்கை செய்யாமல் போனால் என்ன ஆகும் என்பதற்கான மோசமான உதாரணமாக பிரதமரின் பயணதிட்டம் நிகழ்ந்துள்ளது.

நாட்டின் பிரதமரின் பயணத்தில், சாலைப் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, போராட்டம், ஆர்ப்பாட்டம், சதித்திட்டம், உளவு, ஆகிய முக்கியமான பொறுப்புக்கள் மாநிலக்காவல் துறையின் வசம் உள்ளது.

பிரதமரின் தனிப்பட்ட பாதுகாப்பை எஸ்பிஜி படைத்தான் உறுதி செய்ய வேண்டும். அதில் மாற்று கருத்து இல்லை. அதே சமயம் சாலை போக்குவரத்தின் போது, அந்தப் பாதையின் பாதுகாப்பை மாநில போலீஸ்தான் உறுதி செய்ய வேண்டும்.

பிரதமர் செல்லத் திட்டமிடப்பட்டுள்ள பாதையில், பாதுகாப்புகளை பலப்படுத்தி, எந்த தடையும் இல்லாமல், பாதுகாப்பாக இருக்கிறதா என்று பார்த்து, அதை SPG உடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். அதாவது பிரதமரின் பயணத்தில், அவர் கடந்து செல்லும் பாதைகளை பாதுகாப்பாக வைத்திருப்பது மாநில காவல்துறையின் பொறுப்பாகும். இதனை கண்காணிப்பது மத்திய அரசின் கீழ் செயல்படும் இண்டலிஜென்ஸ் பீரோவுக்கு முக்கிய பங்குண்டு.

மாநில காவல்துறை என்பது அவசர நேரத்தில், எதிர்பாராவிதமாக திடீரென மாற்றப்படும் பயண வழியைத் தயார்படுத்துவது மட்டுமல்லாமல், டிஜிபி அல்லது அப்பொறுப்பிற்கு இணையான ஒரு அதிகாரி பிரதமரின் வாகனத்தொகுப்பில் பயணிக்க வேண்டும். இது நடக்கவில்லை. மாநில காவல்துறை அதிகாரியை ஏன் பிரதமர் பாதுகாப்பு படையினர் உடன் அழைத்து வரவில்லை என்பது கேள்வியை எழப்பி உள்ளது.

ஹெலிகாப்டரில் செல்ல முடியாது, பிரதமர் மோடி சாலை வழியாக வருகிறார் என்றதும், உடனே பஞ்சாப் போலீஸ் மற்றும் பஞ்சாப் அரசு மாற்று திட்டப்படி கூடுதல் போலீஸ் படைகளை குவிக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை.

ஹெலிகாப்டரில் செல்ல பிரதமர் திட்டமிடப்பட்டிருந்தாலும், குறைந்தபட்சம் ஒரு மாற்று சாலை வழி தயாராக வைக்கப்பட்டு, அந்தப் பாதையில் போலீசாரை நிறுத்தி வரிசைப்படுத்துவது, பிரதமரின் வருகைக்கு குறைந்தது 24 மணிநேரத்திற்கு முன்னதாகவே, விமான நிலையத்தில் இருந்து சென்றடையும் இடம் வரை முழு ஒத்திகை நடத்தப்பட வேண்டும். இதுவும் நடந்ததா என்பதற்கு தகவல் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக பிரதமர் மோடி இந்தப் பாதையை பயன்படுத்த போவது மாநில அரசுக்கு மட்டுமே தெரியும், அது எப்படி போராட்டக்கார்களுக்கு தெரிந்தது.

மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலில் முடிந்த நம் பிரதமரின் பயணத் திட்டத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மத்திய மாநில அமைப்புகள் எல்லாம் விசாரிக்கப்பட வேண்டும்.