தை மகளே...வருக...
தரணியெல்லாம் செழிக்க...
கொரோனா, ஃப்ளோரானா எல்லாம் ஒழிக்க...
தை மகளே... வருக...!
உழைப்பு விதையினை விதைத்து...
உயர்வு விளைச்சலைப் பெருக்க...
தை மகளே...வருக...!
இயல்பு நிகழ்வுகளை நிகழ்த்தி...
இனிய விளைவுகளை அமைக்க...
தை மகளே... வருக...!
அவனி அமைதியினை உருவாக்கி...
உன்னத உலகினைச் சுழலச் செய்ய...
தை மகளே... வருக...!
நட்பு மலர்களை மலர வைத்து...
நானிலமெல்லாம் கொழிக்கச் செய்ய...
தை மகளே... வருக...!
அன்புப் பொங்கலை சமைத்து...
அற்புதமாய்...
ஆனந்தப் பொங்கலை உண்போம்...!
தை மகளே... வருக...!
கலைச் செல்வமெல்லாம் பெருகி...
தரணியெல்லாம் செழிக்க...
தை மகளே... வருக...!
Leave a comment
Upload