ஸ்ரீ மகா பெரியவா இந்த உலகில் சரீரத்தோடு உலா வந்த போது, அவரது பல்வேறு காலகட்டங்களில் பயணித்த பலரைப் பற்றியும், பல இடங்களைப் பற்றியும் பார்த்து வருகிறோம். இந்த வாரம்...
மாயவரம் ஸ்ரீ வைத்தியநாதன் குடும்பத்தினரை, ஸ்ரீ கணேச சர்மா அவர்கள் தேடி கண்டுபிடித்து அருமையான அற்புத அனுபவத்தை நமக்கு கொடுத்திருக்கிறார். ஸ்ரீ வைத்தியநாதன் அவர்களின் குடும்பம் மாயவரம் பகுதியில் வசித்ததனால், ஸ்ரீ மஹா பெரியவா 1960-களில் மாயவரம் பக்கம் இருந்த போது ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் மற்ற ஊர்களில் ஏற்பட்ட அனுபவத்தை நம்மோடு பக்தி பெருக பகிர்ந்து கொண்டுள்ளார்.
இத்தனை வயதிலும் ஸ்ரீ பெரியவாளை பற்றியும், அவர் சார்ந்த அனுபவத்தை நினைவுகூர்ந்து சொல்லும்போது, எப்படி ஒரு உற்சாகம் வெளிப்படுகிறது இந்த பக்தரிடம். ஸ்ரீ மஹா பெரியவாளுக்கு சங்கீதத்தின் மீது இருந்த ஞானத்தையும் அதனை ரசிக்கும் விதத்தையும் நம்மோடு பகிர்ந்துகொண்டுள்ளார்.
என்னைப் பொறுத்தவரையில் ஒவ்வொருவரின் அனுபவமும் நமக்கு ஸ்ரீ மஹா பெரியவா கொடுக்கும் அனுகிரக தரிசனமே .
Leave a comment
Upload