“நேரில் பார்த்தவன்” - வெ. சுப்பிரமணியன்
ஆசிரியர் பணி என்றுமே சிறப்புதான். அதை நேரில் பார்த்தவர்களுக்கு மட்டுமே அதன் அருமை புரியும் என்பதை சுப்பிமணியன் மிக அழகான கதையாக தந்துள்ளார். பாராட்டுக்கள்!
செல்வராஜ், விஜயராகவன், குரோம்பேட்டை
மனிதனுக்கு, பன்றியின் இதயம் பொருத்தி சாதனை! — ஆர்.ராஜேஷ் கன்னா
அமெரிக்காவில் மனிதனுக்கு பன்றி இதயம் பொருத்தினால்... சாதனை! இந்தியாவில் அதையே செய்தால் சிறைத் தண்டனையா? என்ன கொடுமைடா!
லாஸ்லியா, ராஜு, ஐதராபாத்
கோல விற்பன்னர் ஜெயஸ்ரீயுடன் ஒரு குட்டி நேர்முகம் - அனு
ஜெயஶ்ரீயின் அழியாத கோலங்கள் மிக அருமை. பேட்டி கண்ட அனு, ஏன் கேள்வி கேட்க தடுமாறுகிறார்? ஜெயஶ்ரீயின் கோலங்களைப் போலவே, அவரது பதில்களும் அழகாக இருந்தன.
சியாமளா விஸ்வம், ராயப்பேட்டை
தூக்கம் தொலைந்த இரவுகள் - பா அய்யாசாமி
அய்யாசாமியின் தூக்கம் தொலைந்த இரவுகள் கதை மிக சிறப்பு!
சுபலட்சுமி பார்த்தசாரதி, வேளச்சேரி
இஸ்ரோ அமைப்பின்புதிய தலைவராக சோம்நாத் நியமனம் - மாலாஸ்ரீ
வெரி இன்ட்ரஸ்டிங்! இஸ்ரோ தலைவராக சோம்நாத் நியமனம் குறித்து ஸ்பாட் ரிப்போர்ட்!
பினணவ், ராம்குமார், பெங்களூர்
வாவ் வாட்ஸப்!
வாட்ஸ் அப் படங்கள் அனைத்தும் செம கலக்கல். அதிலும் என்கிட்டேயே வா, கலிகாலம் படங்கள் எக்சைட்டிங்!
கௌஷிக், தீட்சிதா, நிவாசினி, சென்னை
"ஊட்டி ஊரடங்கு… - ஒரு நேரடி ரவுண்டு அப்" - ஸ்வேதா அப்புதாஸ்
ஞாயிறு முழு ஊரடங்கின்போது ஊட்டி மட்டுமல்ல, தமிழகத்தின் சென்னை உள்பட அனைத்து முக்கிய நகரங்களும் பளிச்சென, அமைதியாக இருந்தது ஆச்சரியம்தான்!
ஜமுனா பிரபாகரன், நொளம்பூர்
"பணிகள் முடியாத நீலகிரி மருத்துவ கல்லூரி பிரதமர் திறப்பு?!" - ஸ்வேதா அப்புதாஸ்
என்னது... ஊட்டியில் மருத்துவ கல்லூரி கட்டாமலேயே திறப்புவிழாவா?! இங்க மட்டும்தானா? மத்த 10 இடங்களிலும் இப்படி அரைகுறையா? இவை திமுக ஆட்சியில் முழுமையாக நிறைவேற்றி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமா?!
லாவண்யா கார்த்திக், மும்பை
காணொலியில் பிரதமர் திறந்த 11 மருத்துவ கல்லூரிகள்…! - கண்மணி மைந்தன்
தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் திறப்பு மிகப்பெரிய பொக்கிஷம். இதை பேணி பாதுகாத்து, தமிழக மாணவ-மாணவிகளின் மருத்துவ கனவை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.
சௌம்யா பாலகிருஷ்ணன், வந்தவாசி
சங்க காலத்தில் பொங்கல் பண்டிகை!! - மீனாசேகர்.
சங்க காலத்தில் பொங்கல் பண்டிகை எவ்வளவு சிறப்பாக 4 நாட்கள் கொண்டாடப்பட்டது என மீனா சேகர் அருமையாக விளக்கினார். மிக பயனுள்ள தகவல்!
மாயா குப்புசாமி, ஊத்துக்கோட்டை
பார் டெண்டர் விவகாரம்... - மூத்த அமைச்சர்கள் அதிருப்தி
அடடா... டாஸ்மாக் பார் டெண்டரை வைத்து, இப்பவே திமுக அமைச்சரவையில் உள்குத்து ஆரம்பிச்சாச்சா? திராவிட கட்சிகள்னாலேயே அதிகாரத்துல இருந்தாலும் இல்லேன்னாலும் மக்கள் சேவையை மறந்து பணம் பார்க்கிறாங்க. தமிழகத்துக்கு இனி விடியலே பிறக்காதா?!
கங்காதரன், வேலுச்சாமி, சிறுமுகை, கோவை
தை மகளே...வருக...! - சி. கோவேந்த ராஜா.
கோவேந்தராஜாவின் தை மகளே வருக கவிதை மிக சிறப்பு. அவரது கூற்றுப்படி, இந்தியா எல்லா இயற்கை வளங்களுடன், விவசாயம் செழித்து, நோயற்ற வாழ்வுடன் மக்கள் வீறுநடை போட வேண்டும்.
பவானி ரங்கசாமி, பாண்டிச்சேரி
பிரதமர் பஞ்சாப் பயண குளறுபடிகள் - கண்மணி மைந்தன்
பிரதமரின் பயண பாதுகாப்பில் குளறுபடி ஏற்படுத்தியது யாராக இருந்தாலும், குற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தீவிரமாக விசாரித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராதா வெங்கட், ஆலப்பாக்கம்
பிரதமர் பாதுகாப்பு குளறுபடிகள்..! - உச்ச நீதிமன்றம் நேரடி விசாரணை
பிரதமரின் பாதுகாப்பு விஷயத்தில் மாநில அரசு விளையாட முடியாது. இதற்கு எஸ்பிஜிதான் முழு பொறுப்பேற்க வேண்டும். அதை விட்டு, மற்றவர்கள் மீது குறை கூறுவதை ஏற்க முடியாது. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுப்பிரமணியன், ரகுராமன், திருவெள்ளைவாயல்
விகடகவியின் பொங்கல் வாழ்த்துக்கள்!
வித்தியாசமாக அணுகுவதில் விகடகவிக்கு நிகர் அவரே! புலம்பெயர் தமிழர்களின் கொஞ்சு தமிழில் பொங்கல் வாழ்த்து செம கலக்கல்!
வித்யா ரமணி, அகமதாபாத்
வலையங்கம்
பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் ஏன் தனியார் மருத்துவமனையை நாடியிருக்கக்கூடாது? விவிஐபிக்க்ள் என்றுமே அரசு மருத்துவமனைகளை நம்புவதில்லை. அவர்களின் நலத்தை தனியார் மருத்துவமனையில் ஸ்பெஷல் கேர் எடுப்பார்கள் என்று குடும்பத்தினர் கருதலாம்!
ராஜசுலோசனா, சீர்காழி
பதினெண் சித்தர்கள் - வாழ்வும் வாக்கும் - வேங்கடகிருஷ்ணன்
Short, Informative & Sweet...Looking forward to the series...
கிருஷ்ணகுமார் ஜி, சென்னை
Leave a comment
Upload