இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ‘தல’ மகேந்திர சிங் டோனிக்கு பண்ணை விவசாயம், செல்லப் பிராணிகள் ஆகியவற்றுடன் கார், பைக் உள்ளிட்ட பல்வேறு பழைய மாடல் வாகனங்களின் மீதும் அலாதி ஆசை. இதனால் அவரது வீட்டு கேரேஜில் ஏகப்பட்ட வாகனங்களை வாங்கி குவித்துள்ளார். அவற்றை பராமரித்து, ஓய்வு கிடைக்கும்போது ஓட்டி பார்ப்பதில் அவருக்கு ரொம்ப பிடிக்கும்!
தனது வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு காட்டி, அவர்களை உடன் அமரவைத்து டோனி ஓட்டிச் செல்வார். ‘தல’ டோனியின் கார் கலெக்ஷனில், தற்போது ஒரு ஓல்டு மாடல் லேண்ட் ரோவர் காரும் இணைந்துள்ளது.
கடந்த மாதம் ‘பிக் பாய்ஸ் டாய்ஸ்’ எனும் தனியார் நிறுவனம் நடத்திய ஆன்லைன் ஏலத்தில் ‘தல’ டோனி பங்கேற்றார். ஏல முடிவில், மஞ்சள் நிறத்தில் ஒரு ஓல்டு மாடல் லேண்ட் ரோவர் 3 காரை அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்! அந்த காருக்கு டோனி எவ்வளவு விலை கொடுத்தார் என்ற ரகசியத்தை அந்த தனியார் நிறுவனம் வெளியிடவில்லை.
இதற்கு முன், கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு பழைய விண்டேஜ் காரை ‘தல’ டோனி விலைக்கு வாங்கியிருக்கிறார்.
கடந்த 1971-ல் தயாரிக்கப்பட்ட இந்தக் கார் பிரிட்டனில் உருவாக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. தற்போது ‘தல’ டோனியின் சேகரிப்பில் ஓல்டு மாடல் லேண்ட் ரோவர் 3 காரும் இணைந்திருக்கிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது பல்வேறு சமூக வலதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
Leave a comment
Upload