தொடர்கள்
நொறுக்ஸ்
கருத்து கதிர்வேலன்

20220021175909321.jpeg

ஒமைக்கிறான் தொற்றிலிருந்து பாதுகாக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி - அமைச்சர் சுப்பிரமணியம்

இதைத்தான் எடப்பாடி சொன்னார். ஆனால் அப்போது நீங்கள் அதை நம்பவில்லை


ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் 2 கோடி தொண்டர்களை உருவாக்கியுள்ளார்கள் - முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்

அப்புறம் ஏன் ஆளுங்கட்சியில் இருந்து எதிர்க்கட்சியாக பதவி இறக்கம் இந்த விளக்கத்தையும் அண்ணன் தான் சொல்லணும்


பொங்கல் தொகுப்பு ஊழல் விரைவில் வெளியாகும் - அண்ணாமலை

தொல்லைத் தாங்காமல் இலவசம் என்ற பேச்சே கிடையாது என்று முதல்வர் அறிக்கை வெளியிட்டால் ஆச்சரியமில்லை.


எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் அதியமான் பொற்கால ஆட்சியை விரைவில் நிலைநாட்டுவோம் - ஓபிஎஸ், இபிஎஸ்

பொற்கால ஆட்சிங்கறிங்க ஆனால் வாக்காளர்கள் உங்களை எதிர்க்கட்சியாக இல்ல பதவியிறக்கம் செய்திருக்கிறார்கள்


பழைய சாலைகளில் சுரண்டாமல் சாலை அமைத்தால் நடவடிக்கை - முதல்வர் ஸ்டாலின்

சுரண்டினால் கமிஷன் கிடைக்காது பரவாயில்லையா


பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

எப்படி இருக்கும். கொஞ்ச நாள் இப்படித்தான் இருக்கும். 5 மாநிலத்தில் தேர்தல் நடக்கப் போகுது இல்ல...


திருப்பூரை சிங்கப்பூர் ஆக்குவதே பிரதமரின் திட்டம் - அண்ணாமலை

சிங்கப்பூரில் எல்லாம் வேண்டாங்க அப்புறம் குப்பை போட கூடாதுன்னு சொல்லுவீங்க எச்சில் துப்பக்கூடாது சொல்லுவீங்க நமக்கு அதெல்லாம் சரிப்படாது


வட மாநிலத்தவர் ஆக இருந்தாலும் பிரதமர் தமிழர் போல் நடந்து கொள்கிறார் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

ஆமாம். திருக்குறள் எல்லாம் சொல்கிறாரே


கொரனோ தொற்று அதிகரிப்பால் பயப்படத் தேவையில்லை - அமைச்சர் சுப்பிரமணியம்

அதெல்லாம் எங்களுக்கு எந்த பயமும் இல்லை நீங்கதான் ரொம்ப பயப்படுற மாதிரி தெரியுது


முலாயம் சிங்யாதவின் மருமகள் பாரதிய ஜனதாவில் இணைந்தார்

ஒருவேளை அகிலேஷ் யாதவ் அனுப்பிவைத்த ஸ்லீப்பர் செல் ஆக இருக்குமோ...