தொடர்கள்
கவிதை
விசித்திரம் -லாவண்யா மணிமுத்து

20220405203546902.jpg

விசித்திரம் ??!!


பாஞ்சாலி துகிலுரியப்பட்ட
ராஜசபையில்
பீஷ்மர்
துரோணர்
விதுரர்
திருதராஷ்டிரர்
எதற்காக இருந்தனர் மௌனமாய்?
என ஒவ்வொரு முறை நினைக்கும் போதும்
நம் கோபத்திற்கு அளவில்லை...

நித்தமும் நம்மை சுற்றி
எத்தனை அவலங்கள்
அவமானங்கள், அராஜகங்கள்
மனிதம் துகில் உரிய பட்டு..
கோபம் போனதெங்கே ?
மௌனமாக நின்ற மனிதர்களுக்கும்
நமக்கும் என்ன வித்தியாசம்

கேள்வி கேட்கும் போதும்
கருத்து கூறும் போதும் நாம் நீதிபதி
அதையே நாம் செய்யும் போது
வக்கீலாகவும்
இது என்ன
விசித்திரம்!!??