# மகளதிகாரம் - 7 #
# நீண்டதொரு தொடர்வண்டிப்பயணம் #
மகளை சுளீரென சுட்டுவிட்ட
டீக்குவளை மீதும்
விற்பவனின் மீதும் உதிர்கின்றன
அப்பாவின் வசைமொழிகள்
முதன்முறையாய்
நள்ளிரவில் அயர்ந்து தூங்கிப்போனாள்
இரவிற்கு பேரழகை நவிழும்
தன் உயிரின் அழகை
வாரிக் குடித்துக்கொண்டிருந்தார்
விடியும் வரை
எதற்கும் இருக்கட்டும் என
வாங்கி வைத்திருந்தார்
மகளுக்கென
சில குறுதியுறுஞ்சு அட்டைகளை
அவளுக்கே தெரியாமல்
ஜீன்ஸ் டி-சர்ட்
அவிழ்க்கப்பட்ட சிகை
மிக லாவகமாய் பயன்படுத்தப்படும் அலைபேசி
தனையொத்த வயதினனைக் கண்டு
உயரும் விழிகள்
கட்டற்ற பகிர்வுகள் என
எல்லாமும் கலந்து
புதிய பரிமாணத்தில்
தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தது
மகளை அப்பாவிற்கு....
Leave a comment
Upload