தொடர்கள்
பொது
விடாது நடக்கும் போர் ! –ஆர்.ராஜேஷ் கன்னா

உக்கிரைன் ..

20220412120627856.jpg

நன்றி : தினமணி

உக்கிரைன் போர் தொடங்கி 77 நாட்கள் முடிந்த நிலையில் ரஷ்யா தனது தாக்குதலை தொடர்ந்து நடத்தி கொண்டிருக்கிறது. கிழக்கு உக்கிரைன் கிட்டதட்ட ரஷ்யா ராணுவ தாக்குதலில் முற்றிலும் தரைமட்டமாகி விட்டது என்ற தகவல் வருகிறது.

ரஷ்யாவினை சாமதானம் செய்ய உலக நாடுகள் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்திய பிரதமர் எப்படியாவது ரஷ்ய அதிபருடன் பேசி சமாதானம் கொண்டு வந்து விட வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளனர். நமது பிரதமர் மோடியும் ரஷ்யாவின் முக்கிய தூதர்களை சந்தித்து உக்கிரைன் போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகின்றார்.

ரஷ்ய மற்றும் உக்கிரைன் இரண்டு நாடுகளும் போர் புரிவதை தவிர்த்து சாமதான பேச்சு நடத்தவேண்டும் என்று நமது பிரதமர் தனது வெளிநாட்டு சுற்றுபயணத்தில் தெரிவித்துள்ளார்.

20220412121036298.jpg

ரஷ்யா போர் வீரர்கள் உக்கிரைன் போரில் சிறந்த முறையில் சண்டையிட்டு வருவதை ஊக்கப்படுத்த ரஷ்ய அதிபர் விளாடிமுர் புடின் விழா நடத்தினர். அப்போது ரஷ்யா அதிபர் புடின் கையில் ஒரு ஊன்றுக்கோலை கொண்டு மெதுவாக நடந்து வந்து ஒரு போர்வை போர்த்தி கொண்டு அமர்ந்திருந்தை அங்கிருந்தவர்கள் பார்த்தனர். விளாடிமிர் புடினுக்கு கேன்சர் நோய் தாக்கி இரண்டாண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை நடந்தது என்றும் அவருக்கு பார்கின்சன் என்ற நரம்பு பாதிப்பு நோயும் இருப்பதால் அவர் மிகுந்த சோர்வாகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டு அடிமேல் அடி எடுத்து வைத்து நடக்க சிரமபடுகிறார் என்று விழாவில் பங்கேற்ற ரஷ்ய ராணுவ அதிகாரி பேசிகொண்டனர் என்ற தகவல் வெளியானது.

20220412121303915.jpg

கிழக்கு உக்கிரைனில் ரஷ்ய படைகள் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. போர்முனையில் மருத்துவ உதவி செய்யும் குழவினர் கூட ரஷ்ய தாக்குதலில் தங்களின் முதுகில் சுமந்து செல்லும் மெடிக்கல் கிட் பைகளில் குண்டு வெடிப்பு துகள்கள் பட்டு பைகள் கிழிந்து,மருந்துக்கள் வீணாக போகிறது. இதனால் உக்கிரைன் மருத்துவர்கள் அண்டைநாடுகளிடம் தங்கள் நாட்டிற்கு மருத்துவ உபகரணம் சுமக்கும் பைகள் மற்றும் உயிர்காக்கும் மருந்துக்கள் வழங்க வேண்டும் என உதவி கேட்டும் வேண்டுகோளை சமுக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

20220412121328442.png

அமெரிக்க உட்பட பல நாடுகள் உக்கிரைன் நாட்டிற்கு ஆயுதங்கள் பெருமளவில் வந்து சேரும் பெரிய துறைமுகம் அமைந்திருக்கும் ஒடிசே நகரத்தில் ரஷ்யா அதிகளவு குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. அதுவும் உலக நாடுகள் நடுக்கத்தில் இருக்கும் அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் ஏழு அதிநவீன ஹைப்பர்சோனிக் பேலாஸ்டிக் ஏவுகணைகள் ஒடிசே துறைமுகம் அருகே ரஷ்ய படைகள் செலுத்தி பெரும் சேதத்தினை விளைவித்தது.

கின்சால் அல்லது Dagger ஹப்பர்சானிக் ஏவுகணைகள் ரஷ்ய போர்விமானங்கள் பொருத்தி இலக்கை நோக்கி செலுத்தினால் அதன் பின் ஏவுகணையை நிறுத்தவோ அல்லது அழிக்கவோ முடியாது. கின்சால் ஏவுகணையில் வழக்கமான குண்டுகள் அல்லது அணு ஆயுதங்களை வைத்து இலக்குகளை குறி தவறாமல் தாக்கலாம்.கின்சால் ஏவுகணையை ரஷ்யாவின் மிக் 31 விமானத்தில் 59000 அடி உயரத்தில் பறந்து வானத்தில் இருந்து ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் 480 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு அல்லது அணு குண்டினை சுமந்து வந்து இலக்கினை மணிக்கு 12350 கிமீ வேகத்தில் வந்து தாக்கும்.

உக்கிரைன் ஆயுத கிடங்குகள் பூமிக்கு அடியில் இருப்பதால் கின்சால் ஏவுகணை முலம் பூமிக்கு அடியில் சென்று தாக்குதல் நடத்தி ஆயுத்ங்களை ரஷ்ய விமான படையினர் அழித்து வருகின்றனர்.

20220412121902402.jpg

ஓடிசே நகர் மற்றும் துறைமுகங்கள் கின்சால் போன்ற அதி நவீன ஹைப்பர்சானிக் குண்டு மழையால் பல இடங்கள் தரை மட்டமாகிவிட்டது. ஓடிசே துறைமுகம் முற்றிலும் தகர்க்கப்பட்டால் உக்கிரைன் நாட்டிற்கு கடல் வழியாக வரும் அனைத்து ஆயுதங்களும் தடுக்க ரஷ்ய தீவிர வான் வழி , தரைவழி தாக்குதலை தீவிர படுத்தியுள்ளது.இதில் பல பொதுமக்கள் வசிக்கும் வீடுகள் ,பள்ளிகள் ,அப்பார்மெண்டுகள் அனைத்தும் ஏவுகணை மற்றும் பீரங்கி தாக்குதலால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

2022041212200001.jpg

ரஷ்யாவின் தாக்குதலால் பல லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்துகொண்டு உயிர் பிழைத்தால் போதும் என்று உக்கிரைன் அரசு சொல்லும் இடங்களில் தஞ்சம் புகுந்து உள்ளனர். உக்கிரைன் போர் நடக்கும் பகுதியில் மருத்துவ வசதிகள் எதுவுமில்லை.இதே நிலை நீடித்தால் வரும் டிசம்பர் மாதத்திற்குள் உக்கிரைன் நாட்டிலுள்ள மரியுபோல் நகரிலுள்ள மக்கள் 10000 பேர் மருத்துவ வசதி கிடைக்காமல் இறப்பார்கள் என்று ஆய்வு வெளியாகியுள்ளது.

20220412122036945.jpg

ரஷ்யா கிட்டதட்ட உக்கிரைன் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகள் தங்கள் வசப்படுத்தியுள்ளது. இங்கு தான் உக்கிரைன் பொருளாதார வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் எண்ணெய் வயல்கள், கோதுமை உற்பத்தி நிலங்கள் மற்றும் பெரிய துறைமுகங்கள் உள்ளது. உக்கிரைன் தற்போது நடக்கும் போரில் 50 சதவீதம் பொருளாதார வீழ்ச்சி அடைந்துள்ளது.

ரஷ்யாவின் தாக்குதலால் உக்கிரைன் இருந்து 10 சதவீத மக்கள் வெளிநாட்டிற்கு சென்று விட்டனர். 15 சதவீதனத்தினர் அரசாங்கம் நடத்தும் தஞ்சம் புகும் அடைக்கல முகாமில் அகதிகளாகிவிட்டனர்.

20220412122115968.jpg

ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் உக்கிரைன் மீது தீவிரமடைந்திருக்கும் நிலையில் இந்த போர் நீண்ட நாள் போராக நடத்த ரஷிய அதிபர் விளாடிமீர் புடின் திட்டமிட்டுள்ளார் என்று அமெரிக்க செனடர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

ரஷ்யாவில் இருந்து சமையல் எரிவாயு பைப் லைன் முலம் ஐரோப்பிய யூனியனில் இருக்கும் சில நாடுகளுக்கு செல்கிறது. அதனை ரஷ்ய தற்போது தனது நாட்டிலிருந்து பைப் லைனில் செல்லும் சமையல் எரிவாயு செல்வதை தடை செய்துவிட்டது. இதனால் வரும் நாட்களில் பல ஐரோப்பிய யூனியன் நாடுகள் சமையல் எரிவாயு தட்டுபாடு ஏற்படும் நிலை ஏற்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

20220412122149997.jpg

ரஷ்யாவின் தாக்குதலில் உக்கிரைன் பள்ளிகூடங்கள் கூட ஏவுகணை தாக்குதலில் உருக்குலைந்து போய்விட்டது. உக்கிரைன் இதுவரை ரஷ்ய நாட்டு தாக்குதலுக்கு உள்ளான பகுதிகளை சீரமைக்க 600 பில்லியன் யூரோ தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

20220412122227101.jpg

போர் என்று வந்தால் மக்கள் நடமாடும் பகுதி, மக்கள் வசிக்கும் பகுதி, மருத்துவமனைகள், பள்ளிகூடங்கள் , யுனோஸ்கோ அறிவித்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை தாக்க கூடாது என்பது போர் விதியாக உள்ளது. ஆனால் தற்போதைய ரஷ்ய்-உக்கிரைன் போரில் இந்த விதிமுறைகள் எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. பின் நாளில் இது எல்லாம் போர்குற்றம் என சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் என்பது வேதனையான நிகழ்வு.

20220412122254665.jpg

என்ன தான் போர் நடந்து பெரும் சேதம் விளைந்தாலும் , அடாது குண்டு மழையில் திருமணம் செய்து கொண்ட உக்கிரைன் நாட்டை சேர்ந்த தாரஸ் மற்றும் விக்டோரியோ ஜோடிகள் தங்களின் ஒரு நாள் தேனிலவை கொண்டாடிவிட்டு, அடுத்த நாள் உக்கிரைன் ராணுவ உடையில் தனது தாய் நாட்டை ரஷ்யாவிடம் இருந்து காப்பாற்ற கையில் துப்பாக்கியுடன் உக்கிரைன் எல்லையில் காவல் காத்து வருவது தான் உக்கிரைன் போரின் 77 ம் நாளின் ஹைலைட்.