தொடர்கள்
பொது
ப்ராக்டிகல் சீரீஸ்  - 11 ஓரம் போ…ஓரம் போ…. -   மாலா ரமேஷ்

20220413222125655.jpg

என்னப்பூ…ஓரம் போ…ஓரம் போ…ருக்குமணி வண்டி வருது….ன்னு பாட்டு காதுல கேக்குதா…..ம்… ரொம்ப கரெக்ட்டு…… ஓரமாத்தான் போகணும் ..எந்த ஓரம் …? லெஃப்டா…..? ரைட்டா ? ன்னு கேக்கறீங்களா…? இது அந்த ஓரம் இல்ல…வேற ஓரம்… .வாங்க…எதுன்னு பாப்போம்….

சின்ன வயசுல சைக்கிள் பழகும்போது “ரோட்டுல ஓரமா லெஃப்ட் சைட் போ…போ…”ன்னு நல்லா மண்டையில அடிச்சுச் சொல்லி இருப்பாங்க….ஆமாந்தானே…? அது ஒரு ஓரம்…..

இது போக, ஔவையார் ஆத்திச்சூடில “ஓரம் சொல்லேல் “ னு சொல்லிருக்காங்க….அதாவது ஒரு பக்கமா, பாரபட்சமா பேசக்கூடாது…நடுநிலையோட பேசணுன்னு….இது வேற ஒரு ஓரம்….

ஆனா, இப்ப சொல்லப்போற ஓரம்….சாதாரணமா நம்ம பேச்சுவழக்குல சொல்றதுதான்….ஒதுங்கி ஒரு பக்கமா…ஓரு ஓரமா இருக்கறதுன்னு சொல்லுவோமில்ல…அதான்…. இன்னைக்கு நடைமுறைல …வாழ்க்கையில கடைபிடிக்கவேண்டியது….

சம்பந்தமே இல்லாத விஷயத்தைக் காதைத் தீட்டிக் கேக்கறது….அதுக்குப் பிறகு, அதைச் சம்பந்தப்பட்டவங்க கிட்ட வேற விதமா கொளுத்திப் போடறது….அந்தத் தீ கொழுந்து விட்டு எரியும்போது அதுல குளிர் காயறது….

சே …சே….இதெல்லாம் ஒரு பொழப்பா….அப்டீன்னு நீங்க கேக்கலாம்….

விஷயம் என்னன்னா…இந்தப் போட்டுக்குடுக்கிற கலாசாரம்….போட்டு வாங்கற கலாசாரம்….விளைவுகள் தெரியாம வாயக்குடுக்கிற கலாசாரம்….பிறகு, ஆப்படிச்ச குரங்கா அசையாம இருக்கிறதுன்னு பலதரப்பட்ட விஷயங்கள்ள சிக்காம, ஒதுங்கி ஓரமா போக வேண்டியது வாழ்கையில ரொம்ப ரொம்ப அவசியம்….

எதிர் தெருவில் இருந்த அம்மா, அவங்க பக்கத்து வீட்டம்மாவோட ரொம்ப சினேகிதமாத்தான் இருந்தாங்க….பக்கத்து வீட்டம்மா பையனுக்கு கல்யாணம் ஆகி மருமக வந்ததும், இவங்களுக்கு கொண்டாட்டமா ஆயிடுச்சு….நேரா அந்த மருமகளோட அம்மா கிட்ட சில விஷயங்கள போட்டு வாங்கி, அதை தன்னோட பக்கத்து வீட்டம்மாக்கு டெலிவரி செய்யறது….பிறகு, அந்த மருமகளும், அவ புருஷனும் வாழற விஷயங்கள , மருமகளோட அம்மாக்கு டெலிவரி செய்யறதுன்னு, சந்தோஷமா ஃப்ரீ சர்வீஸ் செஞ்சுட்டு இருந்தாங்க….

விஷயம் தெரியாமயே, எல்லாரும் இந்தம்மாவை நம்பி அவங்கவங்க மனசுல இருந்ததைக் கொட்ட, இவங்க அதை செல்போன்ல பதிவு செஞ்சு வச்சிக்கிட்டாங்க…..

அடப்பாவி…இதைப் போட்டு காட்டினாங்களா…? ன்னு தானே அதிர்ச்சியாயிட்டீங்க…? அதெல்லாம் இல்ல….போட்டெல்லாம் காட்டல…..சப்ஜெக்ட் மறக்கக்கூடாதுன்னு அதை அப்பப்ப தானே போட்டுக் கேட்டு பாயிண்ட்ஸ் எடுத்துக்கிட்டு…. போட்டுக்குடுக்கிற வேலையை செவ்வனே செஞ்சுட்டு இருந்தாங்க….அதுல அவங்களுக்கு ஒரு அலாதி இன்பம்.….பேசும்போது பேச்சோட பேச்சா போட்டு விடறது…

ஒரு நாள்….அவங்க குடும்பத்துல, சம்பந்திங்க ரெண்டு பேரும்,பையனையும் மருமகளையும் ஒண்ணா வச்சிக்கிட்டு பேசப்போக….இந்த எதிர்தெரு அம்மாவின் வண்டவாளம் தண்டவாளத்துல ஏறிச்சு…

இது அந்தம்மாவுக்குத் தேவையே இல்லாத விஷயம்தானே….!!!

தான் உண்டு…தன் வேலை உண்டுன்னு போகாம, அவங்க குடும்ப விஷயத்தை இவங்க என்டர்டெயின்மென்டா நினச்சதோட விளைவு…

கடைசில கையும் களவுமா மாட்டி…..திரு திருன்னு முழிச்சு….ஆப்படிச்ச கொரங்கா அசையாம இருந்து….ஷப்பா…..இதுக்கு மேலயும் சொல்லணுமா….மானம் போறமாதிரி பேச்சு கேட்டாங்கன்னு…?

உலை வாயத்தான் மூட முடியும்…ஊர் வாய மூடமுடியாது….இன்னைக்குத் தேதியில, சுத்தி வர வம்பு பேசும்போது , சம்பந்தம் இல்லாத விஷயங்கள் உள்ளே போகாம, காதை ஏர் டைட்டா மூடிடணும்….அப்படியும் வலிய வந்து காதுக்குள்ள சொன்னா…, அது மனசுக்குள்ள போகாம ரொம்ப பத்திரமா ஓரமா ஒதுங்கிப் போயிடணும்….இல்லன்னா விளைவுகள் விபரீதமா இருக்கும்…

அடுத்தவங்களோட விஷயங்கள் விளையாட்டுப் பொருள் இல்லை….… என்ன சொல்றீங்க….? சரிதானேப்பூ….

அடுத்த வாரம் பாக்கலாம்…