தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக எனக்கு பழக்கம். அவர் அப்பா ஐயா மூப்பனார் எனக்கு நல்ல பழக்கம் அவர் ஒரு கிங் மேக்கர் அவர் என்றும் தனக்கு பதவி வேண்டும் என்று இந்திராகாந்தி ராஜீவ்காந்தி இருவரிடமும் கேட்டது கிடையாது.ராஜீவ்காந்தி இறந்த போது அவர் திருமதி.சோனியா காந்திக்கு நான் என்ன பதில் சொல்வேன் என்று அழுததை நான் நேரில் பார்த்தேன். ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்த ஒரே மூத்த தலைவர் அவர்தான்.
எல்லோரும் ஓடி விட்டார்கள் அதற்கு என்ன காரணம் என்று இன்று வரை தெரியவில்லை சரி அதை விடுங்கள். பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியில் ஏற்படும் உட்கட்சிப் பூசல் காங்கிரஸ் முதல்வர் மாற்றம் இவற்றிற்கெல்லாம் இந்திராகாந்தி ராஜீவ்காந்தி இருவரும் ஐயா முப்பனாரை தான் அனுப்புவார்கள். அவர் தான் பிரச்சனையை சுமுகமாக தீர்ப்பார் என்ற அது உண்மையும் கூட.
மூப்பனார் அரசியல் இருந்த காலத்தில் ஜி.கே.வாசன் மூப்பனார் இருந்த அறைக்கு பின் பக்க அறையில் இருப்பார் பெரும்பாலும் வெளியே வரமாட்டார். சில முக்கிய தலைவர்கள் உள்ளே சென்று தம்பி என்று அவரை அழைத்து நலம் விசாரிப்பார்கள் அவரும் எழுந்து நின்று மரியாதையாக பதில் சொல்வார் அவரும் அவர்கள் குடும்ப நலன் பற்றி விசாரிப்பார். அப்போது அவர் தீவிர அரசியலில் எல்லாம் இல்லை. ஒரு கட்டத்தில் மூப்பனார் இருக்கும் போதே மேடையில் சில தலைவர்கள் தம்பி ஜி.கே.வாசனுக்கு கட்சியில் பதவி தரவேண்டும் என்று பேசுவார்கள். அப்படிப் பேசியவர்களை கோபமாக மூப்பனார் முறைத்துப் பார்ப்பார் .
இதை நானே நேரில் பார்த்திருக்கிறேன். மூப்பனார் உயிருடன் இருக்கும் வரை நான் ஜி.கே.வாசனுடன் பேசியது கூட கிடையாது. மூப்பனார் இறந்த சில தினங்களுக்கு மூப்பனார் குடும்பத்திற்கு விசுவாசமாக அப்போதிருந்த வெற்றிவேல் என்னை ஜி.கே.வாசனுக்கு அறிமுகப்படுத்தினார்.
அப்போது ஜி.கே.வாசன் இவர் பெயர் ஜாசன் ஜூனியர் விகடன் நிருபர் நிறைய அரசியல் கட்டுரைகள் எல்லாம் எழுதி இருக்கார் படித்திருக்கிறேன். இவரை எனக்கு தெரியும் இவருக்கு என்னைத் தெரியாது என்று சொன்னார். நான் அப்போது ஆச்சரியப்பட்டு விட்டேன்.
மூப்பனாரை போல ஜி.கே.வாசன் சுறுசுறுப்பான ஒரு அரசியல் தலைவர் தான்.எல்லோரையும் சந்திப்பார் எல்லோரிடமும் பேசுவார்.இதில் நிர்வாகி தொண்டர் என்ற பாரபட்சம் எல்லாம் கிடையாது. எல்லோர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் முடிந்தவரை. ஆனால் இவரே ராகுல்காந்திக்கு ஆரம்பத்திலிருந்தே பிடிக்காது.காரணம் ஜி.கே.வாசன் முகஸ்துதிக்காக பேசமாட்டார் .ஜால்ரா அடிக்க ராகுல்காந்தி சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளமாட்டார். ஒரு முறை கட்சி நிர்வாகிகள் நியமனம் பற்றி ராகுல் காந்தியுடன் ஜி.கே.வாசன் பேசும் போது கட்சியின் பெரும்பாலான தொண்டர்கள் எனது ஆதரவாளர்கள் எனவே நிர்வாகிகள் பட்டியலில் நான் தரும் நிர்வாகிகள் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அப்படி அதற்கு விருப்பம் இல்லைகட்சி தேர்தலை நடத்துங்கள் 100% எங்கள் ஆதரவாளர் வெற்றி பெறுவார்கள் துணிச்சலுடன். கூடவே இதில் என் சுயநலம் எதுவும் இல்லை நான் சொல்கிறவர்கள் எல்லோரும் இன்று வரை கட்சிக்கு விசுவாசமாக உழைக்கிறார்கள். அவர்களுக்காக தான் பேசுகிறேன் என்பதையும் தெளிவு படுத்தினார். ஆனால் ராகுல்காந்தி அதை ஏற்கவில்லை என்பது வேறு விஷயம்.
கப்பல் போக்குவரத்து அமைச்சராக இருந்த போது கூட ஜி.கே.வாசன் எந்த சர்ச்சையிலும் சிக்கவில்லை ஊழல் கறை படாமல் உஷாராக தான் அமைச்சர் பதவியில் இருந்தார் அப்போதே அவருக்கு மிஸ்டர் கிளீன் என்ற இமேஜ் இருந்தது.
` ஒரு கட்டத்தில் ராகுல்காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். ஜி.கே வாசன்.இவரால் பதவி பெற்ற பலர் இப்போது இவருடன் இல்லை காங்கிரசார் அதிமுக, திமுக என்று நழுவி விட்டார்கள். ஆனால் அதுபற்றி எல்லாம் ஒரு பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஜெயலலிதா சட்டசபை தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட அவர் கட்சி வேட்பாளர்களை வற்புறுத்தினார்.
ஆனால் ஜி.கே.வாசன் அதை ஏற்கவில்லை. அதே சமயம் எடப்பாடி கேட்டுக் கொண்டபோது வேறுவழியின்றி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட சம்மதித்தார் காரணம் தன்னை நம்பி இருப்பவர்களுக்கு ஏதாவது பதவி கிடைக்குமா என்ற ஒரு ஆதங்கம் தான்.ஆனால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்கள் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை.
ராஜ்ய சபா எம்.பி ஆன ஜி.கே.வாசனை போன மாதம் விமான நிலையத்தில் பார்த்த பிரதமர் மோடி என்னை வந்து நீங்கள் பார்க்க மாட்டீர்களா நானாக அழைத்தால் தான் வருவீர்களா என்று கேட்டார் அதன்பிறகு போய் பிரதமரை பார்த்தார் .ஜி.கே.வாசன் இன்றைக்கும் தொண்டர்களின் நம்பிக்கையுள்ள ஒரு தலைவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.அதேசமயம் மாவட்ட ரீதியாக கட்சி அமைப்பை வலுப்படுத்தி பல ஊர்களுக்கு சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை அடிக்கடி சந்தித்து கட்சி வலுப்படுத்தினால் இவருக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு என்பது நிச்சயம்.
இதுதான் ஒருமுறை அவருக்கு எழுதியயே கொடுத்திருக்கிறேன். அதைப் படித்துவிட்டு என்னை தொடர்பு கொண்டு நீங்கள் எனக்கு சொல்லியுள்ள எல்லா யோசனைகளும் பயனுள்ளவை அவற்றை விரைவில் செயல்படுத்துவேன் என்றார். நான் அந்த கடிதம் எழுதி கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அவர் அப்படி எல்லாம் செய்வதாக எனக்கு தெரியவில்லை. ஒருவேளை என் யூகம் தவறாக கூட இருக்கலாம். அதேசமயம் எல்லா பிரச்சனைகளுக்கும் உங்கள் கருத்துக்களை தெளிவாக உடனுக்குடன் சொல்லுங்கள் தயங்க வேண்டாம் என்று யோசனை சொல்லி இருந்தேன். இன்றுவரை அவர் எல்லா பிரச்சனைகளுக்கும் அறிக்கை மூலமாக நிருபர்கள் சந்திப்பில் தங்கள் கருத்தை சொல்லி வருகிறார்.
ஜி.கே.வாசனுக்கு சிறப்பான நிச்சயம் எதிர்காலம் உண்டு என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்கான அனுபவம் வயது தகுதி எல்லாமே அவருக்கு இருக்கிறதுதொண்டர்களின் எதிர்பார்ப்புகூட இதுதான்.
Leave a comment
Upload