தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை கொள்ளை பாலியல் வன்முறை மோட்டார் பைக்கில் வந்து செல்போன் செயின் பறிப்பு என்ற சம்பவங்கள் தொடர்கதையாக தொடர்கிறது.சில தினங்களுக்கு முன் மோட்டார் பைக்கில் செல்போனை பறித்து சென்ற இரண்டு இளைஞர்கள் தடுமாறி விழுந்து பலியானார்கள்.அதேசமயம் முதல்வர் காவல்துறை அதிகாரிகளுடன் அடிக்கடி ஆலோசனை செய்கிறார்.காவல்துறையும் அடிக்கடி நடவடிக்கை எடுப்பதாக சொல்லி வருகிறது.
கடந்தவாரம் எல்லோராலும் பரபரப்பாக பேசப்பட்ட மயிலாப்பூர் ஆடிட்டர் தம்பதிகள் கொலை சம்பவம்உண்மையில் காவல் துறைக்கு ஒரு பெரும் சவாலாகத்தான் இருந்தது.மறுதினம் காவல்துறை மானியத்தில் எதிர்க்கட்சிகள் மயிலாப்பூர் கொலை வழக்கை சுட்டிக்காட்டி கடும் விமர்சனத்தை ஆளும் தரப்பு எதிர் கொள்ள வேண்டும் என்றஅச்ச உணர்வும் ஒரு காரணம்.
சென்னை மயிலாப்பூர் த்வார்கா காலனி சேர்ந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் இவரது மனைவி அனுராதா.இவர்களுக்கு சுனந்தா என்று ஒரு சஸ்வத் என்று ஒரு மகன்.சுனந்தா திருமணமானவர் கணவருடன் கலிபோர்னியாவில் வசிக்கிறார்.மகன் சஸ்வத் அமெரிக்காவில்தான் வாசம்.சுனந்தாவுக்கு போன ஆண்டு குழந்தை பிறந்தது .விசா பிரச்சினை விமான போக்குவரத்து ரத்து குரானா நோய்த்தொற்று காரணமாக உடனே போய் வேறபேரகுழந்தையை பார்க்க முடியவில்லை.நவம்பர் மாதம் எல்லா தடைகளும் நீங்கியதும் ஸ்ரீகாந்த் தம்பதியர் பேரக் குழந்தையை பார்க்க அமெரிக்கா போனார்கள்.
இதன் நடுவே கிழக்கு கடற்கரை சாலையில் ஸ்ரீகாந்துக்கு சொந்தமான ஒரு இடத்தை விற்பனை சம்பந்தமாக பேச ஜனவரி மாதம் ஸ்ரீகாந்த் மட்டும் சென்னை திரும்பி வந்தார் பிறகு அமெரிக்கா திரும்பிவிட்டார்.
இந்த குடும்பத்தினருக்கு கார் ஓட்டுநராக இருந்தவர் கிருஷ்ணாஇவர் நேபாள நாட்டை சேர்ந்தவர்இவரது தந்தை ஏற்கனவேநெமிலிச்சேரி பண்ணை வீட்டில் காவலராக இருந்திருக்கிறார்.மே 7ஆம் தேதி விடிகாலை மூன்று மணிக்கு ஸ்ரீகாந்த் தம்பதியினர் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பியிருக்கிறார்கள் அவர்களை விமான காரின் ஓட்டுனர் கிருஷ்ணாவீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்.விமான நிலையத்தில் இறங்கியதும் ஸ்ரீகாந்த் தன் மகனிடம் நாங்கள் சென்னை வந்து விட்டோம் வீட்டுக்கு போய் பேசுகிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
.காலை 8 மணிக்கு மீண்டும் சஸ்வத் தொடர்புகொண்டுபேச முற்பட்டபோதுஸ்ரீகாந்த் செல்பேசிசுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.உடனே ஓட்டுனர் கிருஷ்ணாவை தொடர்பு கொண்டு சஸ்வத் இதுபற்றி கேட்டபோது கிருஷ்ணா அவரிடம் நான் காய்கறி வாங்க மார்கெட் வந்திருக்கிறேன்.இருவரும் தூங்குகிறார்கள். நான் எழுந்ததும் பேசஎன்று கிருஷ்ணா.மீண்டும் பத்தரை மணிக்கு சஸ்வத் அப்பா போனுக்கு தொடர்பு கொண்டபோது அப்போதும் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
ஓட்டுனர் கிருஷ்ணாவிடம் கேட்டபோதுஅவர் சொன்ன தகவல் முன்னுக்குப்பின் முரணாக இருந்தது.அடுத்த சில நிமிடங்களில் கிருஷ்ணாவை தொடர்பு கொள்ள சஸ்வத் முயற்சி செய்த போது கிருஷ்ணா போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. அப்போது தான் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது எங்கேயோ ஏதோ தப்பு நடக்கிறது என்று அவரது உள்ளுணர்வு எச்சரித்தது. உடனே அடையார் இந்திரா நகரிலுள்ள உறவினரை தொடர்புக்கொண்டு விஷயத்தைச் சொல்லி நேரில் பார்க்கச் சொல்லியிருக்கிறார்.இந்திராநகர் உறவினர்கள் துவாரகா காலனி ஸ்ரீகாந்த் வீட்டுக்கு வந்தபோது வீடு பூட்டியிருந்தது வாசலில் கார் இல்லை ஓட்டுனர் கிருஷ்ணாவும் அங்கு இல்லை. உடனே நடந்ததை சஸ்வத்திடம்சொல்ல அவர் இன்னும் பயந்து போய் பூட்டை உடைத்து பார்க்க சொல்லி இருக்கிறார். பூட்டை உடைத்து உள்ளே போனபோது டெட்டால் நெடி டெட்டால் மூலம் வீடு கழுவப்பட்டு இருந்தது ஆங்காங்கே சுவரில் இருந்த ரத்த கரைகள் உடைக்கப்பட்ட லாக்கர் பீரோ இறை பட்டு கிடைத்த பொருட்கள் இதையெல்லாம் பார்த்த உறவினர்கள் முதலில் காவல்துறைக்கு தகவல் சொல்லிவிட்டு பிறகு ஸ்ரீகாந்த் மகனிடமும் விஷயத்தைச் சொன்னார்கள். முதலில் கார் காணவில்லை ஸ்ரீகாந்த் தம்பதிகள் கடத்தல் என்றுதான் புகார் தரப்பட்டது.
அதேசமயம் காவல்துறை உயரதிகாரிகள் அமெரிக்காவில் இருந்த மகன் மகளிடம் தொடர்பு கொண்டு பேசியபோது அவர்கள் தெரிந்து கொண்ட விஷயம் சமீபத்தில் ஒரு சொத்து விற்பனை செய்து இருக்கிறார் ஸ்ரீகாந்த்.அவருக்கு சொந்தமாக நெமிலி சேரியில் ஒரு பண்ணை இருக்கிறது.ஓட்டுனர் கிருஷ்ணா நேபாளத்தை சேர்ந்தவர்போன்ற விஷயங்கள்.அதன்பிறகு ஒரு தனிப்படை நெமிலிச்சேரி போனது பண்ணை வீட்டில் புதிதாக தோண்டப்பட்டுமூடப்பட்ட பள்ளம் எரிஞ்சு போயிருந்த செல்பேசி கையுறை இவையெல்லாம் சந்தேகத்தை தீவிரப்படுத்த பள்ளத்தை தோண்டிப் பார்த்ததில் இருவரும்கொன்று அங்கு புதைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.அதன்பிறகு மேலும் சுறுசுறுப்பான காவல்துறை ஸ்ரீகாந்தின் கார் எண் வைத்துசெக்போஸ்ட் உள்ள கண்காணிப்பு கேமராவில் சோதனை செய்ய ஒரு படையை முடுக்கி விட்டார்கள்.இன்னொரு பக்கம் கொலையாளி கிருஷ்ணா நேபாளத்தை சேர்ந்தவர் என்பதால் நேபாள எல்லை வரை உள்ள எல்லா மாநிலங்களிலும் கார் எண்கார் பற்றிய அடையாளம் இவற்றையெல்லாம் சொல்லி உஷார் படுத்தினார் சென்னை மாநகர காவல்துறை ஆணையர்.
இதேபோல் கிருஷ்ணாவின் செல் பேசி ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது இருந்தாலும் அவர் அச்சமயம் எந்த திசையில் பயணிக்கிறார் என்பதில் தொழில்நுட்பம் மூலம் போலீஸ் கண்டுபிடித்து விட்டது ஒரு கட்டத்தில் ஆந்திர எல்லையில் ஓங்கோல் அருகே அவர் வந்து கொண்டிருக்கிறார் என்பதை தெரிந்துகொண்ட காவல்துறை உடனே ஓங்கோல் போலீசிடம் பேசிசெக்போஸ்டில் அந்தக் காரை மடக்கிப் பிடிக்க கேட்டுக்கொண்டார்கள் அதன்படி அந்த கார் வழி மறிக்கப்பட்டு மடக்கிப்பிடித்து பாதுகாத்தது ஓங்கோல் போலீஸ் போலீஸ்.அதே சமயம் ஜிபிஎஸ் மூலம் கிருஷ்ணாவின் காரை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்த உதவி ஆணையர் குமரகுருபரன் தலைமையிலான குழு ஓங்கோல் சென்றது.
ஓங்கோல் காவல்துறை கிருஷ்ணா அவருடன் வந்த இன்னொருவர் மற்றும் கார் கைப்பற்றப்பட்ட பொருட்கள் எல்லாவற்றையும்உதவி ஆணையர் குமரகுருபரனிடம் ஒப்படைத்தார்கள்.அவர்களிடமிருந்து 9.8 கிலோ தங்க நகைகள் 70 கிலோ வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
காலை 5:30 மணிக்கு கொலை நடந்திருக்கிறது 6 மணி நேரத்தில் கிட்டத்தட்ட கொலையாளி இருக்குமிடம் உள்பட எல்லாவற்றையும் உறுதிப்படுத்திக்கொண்டு 12 மணி நேரத்தில் தமிழக காவல்துறை கைது செய்துவிட்டது இது உண்மையில் பாராட்ட வேண்டிய விஷயம்.தொழில்நுட்ப வசதிகள் காரணமாக கொலையாளி கிருஷ்ணாவை காவல்துறைஎளிதில் நெருங்கிவிட்டது என்பதும் உண்மை..
கிருஷ்ணா இந்த கொலையை கிட்டத்தட்ட பதினைந்து தினங்களுக்கு முன்பே திட்டமிட்டு அதற்கான வேலையில் இறங்கி இருந்தார் .இத்திட்டத்தை சொல்லி மேற்கு வங்கம் டார்ஜிலிங் மாவட்டத்தை சேர்ந்த அவரது நண்பர் ரவி ராய் வர சொல்லி இருந்தார்.இருவரும் சேர்ந்து மூன்று தினங்களுக்கு முன்பு நெமிலிச்சேரியில் இறந்தவர்களைப் புதைக்க குழி தோண்டி வைத்திருந்தார்கள்.இருவரும்
ஸ்ரீகாந்த் தம்பதிகளை கடுமையாக தாக்கி இடம் விற்ற பணம் எங்கே என்றுதான் திரும்பத் திரும்ப கேட்டு அவர் சொல்லியதை நம்பாமல் அவர்களை அடித்து மண்வெட்டியால் தாக்கிகத்தியால் கொன்று விட்டு லாக்கரை திறந்து பார்த்தபோதுஅங்கு பணம் இல்லை. ஆனால் நிறைய நகைகள் இருந்தது மூன்று பெட்டி நிறைய வெள்ளி பாத்திரங்கள் இருந்தன எல்லாவற்றையும் காரில் கொண்டுபோய் வைத்துவிட்டு இருவரின் உடல்களையும்போர்வையில் சுற்றிகாரில் எடுத்துக்கொண்டு போய் புதைத்திருக்கிறார்கள்.சந்தேகம் வராமல் இருக்க டெட்டால் போட்டு வீட்டை கழுவி இருக்கிறார்கள் ஆனால் சுவற்றில் தெளித்து இருந்த ரத்தக் கறைகளை அவர்கள் கவனிக்கவில்லை அதுதான் அவர்களை காட்டிக்கொடுத்தது. துரிதமாக செயல்பட்டு கொலையை கண்டுபிடித்த காவல்துறையை சட்டசபையில் முதல்வர் பாராட்டினார்.
Leave a comment
Upload