கடந்த இரண்டு வருடமாக கொரோனா தொற்றால் எந்த சுற்றுலா நிகழ்வுகளும் ஊட்டியில் நடக்கவில்லை . ஊட்டி என்றாலே பொட்டானிக்கல் கார்டன் மலர் கண்காட்சி தான் நினைவில் வரும் .
கடந்த 1995 ஆம் ஆண்டு பொட்டானிக்கல் கார்டன் 100 வருட மலர் கண்காட்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது . முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊட்டி விஜயநகரம் பகுதியில் நூற்றாண்டு வருடத்தை நினைவுகூரும் வகையில் ஒரு ரோஜா பூங்காவை உருவாக்க திட்டம் தீட்டி, லண்டன் கியூ கார்டன் போல இந்த ரோஜா கார்டனை கண்ணும் கருத்துமாக உருவாக்கினார் .
இந்த கார்டனை உருவாக்க அதிகாரிகள் டெல்லி முகல் கார்டனை போய் பார்த்துவிட்டு வந்தனர் . பூங்கா உருவாகுவதை முதல்வர் ஜெயலலிதா நேரடியாக வந்து பார்வையிட்டு சென்றுள்ளார் .அவரே தன் கரத்தால் இந்த ரோஜா பூங்காவை திறந்து வைத்து பெருமிதமடைந்தார் . ஊட்டி வரும் போது இங்கு அமைக்க பட்டுள்ள நிலா மாடத்தில் வந்து அமர திட்டம் தீட்டியது கனவாக போய்விட்டது .
ஊட்டி ரோஜா பூங்காவில் நான்காயிரத்து ஐநூறு வகை ரோஜாக்கள் பூத்து குலுங்குகின்றன . அது இல்லாமல் ரோஜா காட்சிக்காகவும் பலவகை செட்டப் செய்ய மொத்தம் 50 ஆயிரம் ரோஜா மலர்கள் குவிக்கப்பட்டுள்ளது .
சனிக்கிழமை காலை 10 .30 மணிக்கு ரோஜா கண்காட்சி திறந்து வைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க யு ஏ இ ஜனாதிபதி ஷேக் காலிப் பின் சயீத் இறப்பை தொடர்ந்து இந்தியாவில் துக்கம் அனுசரிக்க படுவதால் அனைத்து அரசு விழாக்களும் ரத்து செய்யப்பட்டதால் ரோஜா கண்காட்சி திறப்பு நிகழ்வுகள் எதுவும் இல்லாமல் அமைதியான முறையில் கண்காட்சி நடந்தது .
வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மாவட்ட கலெக்டர் அம்ரித் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலா மெரி ஊட்டி எம் .எல் .ஏ கணேஷ் மற்றும் ரோஜா சங்க பிரதிநிதிகள் புடைசூழ கண்காட்சியை பார்வையிட்டனர் .
அமைச்சரரோடு ஏனோ கழக கண்மணிகள் மிஸிங் !.அமைச்சர் கலெக்டர் மற்றும் அலுவலர்கள் தேனீர் ஸ்னாக்ஸ் சாப்பிட நிருபர்கள் கலெக்டரிடமும் அமைச்சரிடமும் " ஊட்டியில் பார்க்கிங் வசதி இல்லை போக்குவரத்து நெரிசல் வெளியூர் போலீஸ் உள்ளூர் வாசிகளை மிரட்டுகிறார்கள்.. ஒரு கிலோ தக்காளி வாங்க மூன்று கிலோ மீட்டர் சுத்த வேண்டியுள்ளது இது நியாயமா ? உள்ளூர் போலீசை போடுங்க என்று காரசார விவாதம் தொடங்க...
அமைச்சர் ராமச்சந்திரன் " சுற்றுலாக்கள் முக்கியம் கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கள் " என்று கூற கலெக்டர் அம்ரித் , " மலை ட்ராபிக் குறித்து மீட்டிங் உள்ளது இதை பற்றி பேசுகிறேன் " என்று எழுந்து நகர்ந்தார் .
சுற்றுலாக்கள் ஆச்சிரியமாக ரோஜாக்களை பார்வையிட்டனர் ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ட்ரீ அவுஸ் ,
பியோனா, மான் , பனிக்கரடி படச்சுருள் மற்றும் மஞ்ச பை அனைவரும் கவர்ந்தது .
எந்த ஆரவாரம் பாடல்கள் இல்லாமல் அமைதியாக ரோஜா கண்காட்சி நடந்தது . நாமும் கண்காட்சியை சுற்றி பார்த்து சில சுற்றுலாக்களை சந்தித்து பேசினோம் , பம்பாயில் இருந்து வந்துள்ள பாரிஸ் ரீட்டா சதிஷ் குடும்பத்தை சந்தித்தோம் ,
" இப்படி பட்ட ஒரு அருமையான ரோஜா பூங்காவை பார்த்தது இல்லை.. சூப்பர், ஒரே இடத்தில் இத்தனை ரோஜாக்களை பார்க்க கொடுத்து வைத்துள்ளோம் . டெல்லி மொகல் கார்டனை விட இது அருமை . ரோஜாக்களில் அமைக்கப்பட்டுள்ள அலங்காரங்கள் பிரமாதம் " என்று கூறி மெய்சிலிர்த்து போய்விட்டனர் .
கேரளா வடக்கஞ்சேரியை சேர்ந்த ஷாகுல் குடும்பத்துடன் கார்டனில் ஆஜர் , " இப்படி ஒரு ரோஸ் கார்டனை பார்த்தது இல்லை அருமையாக வைத்துள்ளனர்
மிகவும் சுத்தமாக இருக்கிறது . தோட்டக்கலை துறைக்கும் ஊட்டிக்கும் தமிழ்நாட்டிற்கு மிக்க நன்றி " என்று கூறினார் .
சென்னையில் இருந்து வந்திருந்த நண்பர்கள் சத்திய நாராயணன் மற்றும் சப்ரூஸ் , " இது தான் நாங்க ஊட்டிக்கு முதல் முறையா வருகிறோம் ரோஸ் கார்டன் ரொம்ப அழகா இருக்கு எல்லா அரேஞ்சுமென்ட் அருமை பார்க்கவே சூப்பராக இருக்கு .
இரண்டு வருடத்திற்கு பின் இப்படி ஒரு ஷோ நடப்பது நல்லவிஷயம் ஊட்டியும் அழகு இந்த ரோஸ் கார்டன் அதை விட அழகு" .
ரோஸ் கார்டன் முழுவதும் சுற்றுலாக்களின் கூட்டம் மொய்த்து விட்டது இரண்டு வருடம் மக்களை பார்த்து ரோஜாக்கள் புன்னகைத்து கொண்டிருப்பதை ரசிக்க முடிந்தது .
இந்த ரோஜா கார்டனில் லட்சுமி என்ற ஊழியர் கூறும் போது , " நான் 1966 யில் இருந்து ஊட்டி கார்டனில் பணிபுரிந்து வருகிறேன் .
இந்த ரோஜா கார்டனில் ஆரம்பத்தில் இருந்து வேலை செய்கிறேன் முருகன் சார் போன்ற சிறந்த அதிகாரிகள் உருவாக்கின கார்டன் . முதல்வர் அடுத்த வாரம் மலர் காட்சிக்கு வருகிறார் அப்பொழுது எங்களையும் வந்து பார்த்தால் நன்றாக இருக்கும் அவரை நேரில் பார்க்க ஆசை " .
ஊட்டி ரோஜா பூங்காவை வந்து பார்க்கும் சுற்றுலாக்கள் ஆச்சிரியதுடன் பிரமித்து போய் மனம் இல்லாமல் பூங்காவை விட்டு வெளியேறுவதை பார்க்க முடிகிறது .
கடந்த வருடமும் ரோஜா கண்காட்சி எந்த ஆரவாரமும் இல்லமல் அமைதியாக நடந்தது . இந்த வருடமும் அமைதியாக நடந்தது , சுற்றுலாக்களின் பேச்சு ஆரவாரம் தான் ரோஜா மலர்களையும் மகிழவைத்தது .
Leave a comment
Upload