தொடர்கள்
புத்தக விமரிசனம்
மிளிர் கல் இரா. முருகவேள். புத்தக விமர்சனம். இந்துமதி கணேஷ்.

20220601193817972.jpg

பொதுவாக நடுத்தரமான வருமானம் உள்ள ஒரு குடும்பம் தங்க நகை வாங்கும்போது எப்படி யோசித்து வாங்குவார்கள்..? கற்கள் பதித்த நகைகளை வாங்கவேண்டாம், ஒரு வேளை நாம் வாங்கும் நகைகளை விற்க நேர்ந்தால்நகையில் பதிக்க பட்ட கற்களுக்கு எந்த மதிப்பும் இருக்காது என்பது தான்நான் சின்ன வயதில் இருந்து பார்த்து வளர்ந்த விதம். வைரம் மற்றும் ரூபிபதித்த நகைகள் எல்லாம் பணக்காரர்கள் மட்டுமே வாங்க முடிந்த ஒன்றுஎன்பது தான் என் புரிதல். அப்பா போட்டிருந்த நவரத்ன மோதிரத்தில் தான்எல்லா வகையான கற்களையும் பார்த்திருக்கிறேன், ரூபி என்று நாம்அழைக்கும் மாணிக்க கற்களும் வைரத்திற்கு இணையானவை என்றும் அதைசுற்றி நிகழும் அரசியலும் மக்களிடையே அதிகம் விவாதிக்க பட்டதாய் எனக்குதெரியவில்லை. செமி ப்ரெஷியஸ் ஸ்டோன்ஸ் என்று அழைக்க படும் இரத்தினகற்களை சுற்றி தான் இந்த கதை பின்னப்பட்டிருக்கிறது. இந்த புத்தகம்பேசும் களங்கள் எனக்கு மிகவும் புதுமையானவை, அதிகம்ஆர்வமில்லாமல்தான் தொடங்கினேன் ஆனால் கதையும் அதை ஆசிரியர் கொண்டு சென்றவிதமும் ஒரு திரைக்கதையின் ஸ்வாரஸ்யத்துடன் என்னை கட்டிப்போட்டுவிட்டது.

கதையின் முக்கிய கதாபாத்திரங்களாக நவீன், முல்லை மற்றும் ஸ்ரீகுமார்ஆகிய மூவரும் தான் நம்முடன் பயணிக்கிறார்கள். பத்திரையாளராகடெல்லியில் வேலை பார்க்கும் பெண் முல்லை, கண்ணகி கோவலனுடனும்கவிந்தியடிகளுடனும் பயணித்த பாதையில் பயணப்பட்டு ஒரு ஆவண படம்எடுக்க தன் கல்லூரி நண்பனும், கம்யூனிஸ்டும், புகைப்பட கலைஞனுமானநவீனுடன் தன் பயணத்தை தொடங்குகிறாள். பூம்புகாரை பற்றிசிலப்பதிகாரம் ஏற்படுத்திய பிம்பத்திற்கும் தற்போதுள்ள பூம்புகாருக்கும்மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசத்தை கண்டு திகைத்து விடுகிறார்கள்இருவரும், இவர்களுக்கு சற்றே ஆறுதலாக அறிமுகமாகிறார் ஸ்ரீகுமார். ஆய்வாளரான ஸ்ரீகுமாரிடமிருந்து நிறைய விஷயங்களை அறிந்துகொள்கின்றனர். திடீரென்று ஸ்ரீகுமார் கடத்த படுவதும் பின்பு விடுவிக்கபடுவதும் அதற்கு பிறகு நவீன்- முல்லையுடன் சேர்ந்து பயணம் செய்வது என்றுதிருப்பங்களும் தகவல்களும் நிறைய உண்டு. கதையில் வரும் நவீனின்மனநிலை தான் முதலில் எனக்கும் இருந்தது, அன்றாடம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஆயிரம் இருக்கும் போது எதற்காக கண்ணகிபோன பாதையை பின் தொடர வேண்டும். சிலப்பதிகாரத்தில் எழுதபட்டிருக்கும் விஷயங்களில் எவ்வளவு உண்மை ? எவ்வளவு புனைவு ?முழுவதும் கற்பனையாக இருக்கும் பட்சத்தில் இந்த பயணமே வீண் தானேஎன்ற எண்ணத்தை முழுவதுமாக முறியடிக்கிறது மிளிர் கல். கண்ணகியின்கால்தடங்களை தேடி கிளம்பும் இருவரும் இறுதியில் எதை கண்டுஅடைகிறார்கள்? அவர்களின் தேடல் எதில் முடிவடைகிறது என்பதும், வெவ்வேறு இலட்சியங்களை கொண்ட அவர்களை எது இணைக்கிறதுஎன்பதும் மிளிர் கல்லின் மிச்ச பக்கங்களை படித்து அறிந்து கொள்ளலாம்.

இந்த புத்தகம் மானுடவியல் சார்ந்த நிறைய தகவலைகளை எனக்குபோதித்தது என்று கூறலாம். எயினர்கள், களப்பிரர்கள், இடையர்கள், சமணர்கள் என்று பல குழுக்களை பற்றி போகிற போக்கில் தகவல்களை தூவிசெல்கிறது நாவல். நரபலி குறித்த தகவல்கள் சிலப்பதிகாரத்திலேயேஎழுதப்பட்டிருப்பதாக சான்றுகளுடன் விளக்குகிறார் ஸ்ரீகுமார். கோவையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் பாதையில் காங்கேயம் அருகில்நிறைய விலை உயர்ந்த இரத்தின கற்கள் கிடைக்கிறது என்று கூறுகிறார்கள். இந்த வழி எல்லாம் இடையர்கள் வாழ்த்து பயணித்ததற்கு நிறைய சான்றுகள்உள்ளன. இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டு பழமையான கல்லறைகளைவட்டங்கல் புதைகுழிகள் என்று அழைக்கிறார்கள். அந்த நாட்களில்மனிதர்களை புதைக்கும் போது நிறைய விலையுயர்ந்த கற்களை கூடவேபோட்டு புதைத்திருக்கிறார்கள் என்பதால் தற்போது இந்த கற்களை தேடும்படலத்தில் நிறைய வட்டங்கல் புதைகுழிகள் அழிக்க பட்டுவிட்டதாகவருத்தத்துடன் பகிர்கிறார் ஆசிரியர். வட்டக்கல் புதைகுழிகள் எல்லாம்வரலாற்று சிறப்பு மிகுந்த பாதுகாக்க படவேண்டிய விஷயங்கள் என்பதைஎல்லாம் மிளிர் கல்லின் வழி தான் நாம் அறிந்து கொள்ள முடிகிறது, இதைபற்றிய எந்த தகவலையும் இதற்கு முன் நான் அறிந்ததில்லை.

என்னுடைய பன்னிரெண்டாம் வகுப்பில் சிலப்பதிகாரத்தில் கண்ணகிகோவலனுடனும் கவுந்தியடிகளுடனும் பயணிக்கும் பகுதிகளைபடித்திருக்கிறேன், மனப்பாட பகுதியாக வரும் பாடல், "ஆரெயில்நெடுங்கொடி வாரல் என்பன போல் மறித்து கைகாட்ட" இப்படி தொடங்கும்ஆனால் நான் ஆர்வ கோளாரில் சிலப்பதிகாரத்தத்தில் கொடுத்திருந்தஅனைத்து பாடல்களையும் மனப்பாடம் செய்ததுண்டு. அந்த நினைவுகளைஎல்லாம் மிளிர் கல் மீட்டெடுக்கிறது. அதே போல கவுந்தியடிகள் என்பவர் கே. பி சுந்தராம்பாள் போல வயதானவர் என்கிற பிம்பத்தையும் உடைகிறது இந்தபுத்தகம், அவருக்கு வயது முப்பத்திற்குள் தான் இருக்கும் என்ற அனுமானம்கூடுதல் அதிர்ச்சி. மென்மையான அறிவாளியாகவும் புரட்சிகர இயந்திரமாகவும்வரும் கண்ணனை முல்லைக்கு பிடிப்பதை போல நமக்கும் பிடித்து விடுகிறது.

சில ஸ்வாரஸ்யமான கேள்விகளை நான் பட்டியலிடுகிறேன் அதற்கானபதில்கள் புத்தகத்தில் இருக்கிறது, சில பதில்கள் நேரடியாகதரப்பட்டிருக்கின்றன. பல கேள்விகளுக்கு நேரடியான பதில்கள் இல்லாமல்இருக்கலாம் ஆனால் அற்புதமான ஆய்வுகளால் கண்டெடுக்கப்பட்டஉண்மைகள் புத்தகத்தில் விலாவாரியாக விளக்கப்பட்டிருக்கிறதுஎன்பதாலேயே இந்த கேள்விகள் கூடுதல் முக்கியதுவம் பெறுகின்றன.

கோவலன், கண்ணகி மற்றும் கவுந்தியடிகள் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் ?

எதற்காக சிலப்பதிகாரம் எழுத பட்டிருக்கலாம் ?

கோவலனும் கண்ணகியும் பூம்புகாரில் இருந்து புறப்பட்ட பிறகு ஏன்கண்ணகியின் பெற்றோர் அவளை தேடி வரவில்லை ?

கண்ணகி மதுரையை எரித்ததற்கு ஏதும் சான்றுகள் உள்ளதா ?

அசோகன் ஏன் கலிங்க போருக்கு பின் போர் புரியவில்லை ?

ஊழ்வினை என்ற வார்த்தை சமணர்கள் உருவாக்கியதா ? அதற்கும்பித்தாகோரஸ் தியரத்தை இயற்றிய பித்தாகோரஸுக்கும் என்ன தொடர்புஇருக்க முடியும் ?

கோவலன் கொல்லபடும் விஷயத்தில் மன்னன் மேல் இருந்த குற்றம் மறைக்கபட்டு ஏன் பழி பொற்கொல்லன் மேல் விழுகிறது ?

கோவலனுக்கு இழைக்க பட்ட அநீதிக்காக கோபப்பட்டு நகரை எரிக்கும்கண்ணகி ஏன் அவளுக்கு துரோகம் செய்த கோவலனை விட்டுவிட்டாள் ?

கோவலன் இறந்த பின் ஏன் கண்ணகி தீக்குளிக்கவில்லை ?

இப்படி எண்ணற்ற கேள்விகள் முல்லை -நவீனை போல நமக்குள்ளும்முளைக்கின்றன, இவற்றுக்கெல்லாம் அவர்களுக்கு பதில் கிடைக்கிறதோஇல்லையோ நமக்கு பதில் கிடைத்து விடுகிறது.

நவீனும் முல்லையும் கண்ணகி கோவிலுக்கு பிறகு கேரளாவில் உள்ளகொடுங்கலூரில் நடக்கும் காவு தீண்டல் என்னும் வைபவத்திற்குபோகிறார்கள். இது தலித்துகளுக்கு மட்டுமே நடக்கும் வித்யாசமானவைபவம். இதில் கலந்து கொள்ளும் பக்தர்களை வெளிச்சப்பாடுகள் என்றுகூறுவார்களாம். அந்த விழாவை ஆச்சாரமான கேரள வாசிகள் தடை செய்யநினைக்கிறார்கள் என்பது முற்றிலும் அதிர்ச்சியளிக்க கூடிய புது தகவல். வெளிச்சப்பாடுகள் கெட்ட வார்த்தைகளை பயன் படுத்தி பாடல்களைபாடுவதையும் அந்த விழாவின் நடப்புகளையும் அற்புதமாக விளக்கிஇருக்கிறார் ஆசிரியர். இது ஒரு பண்பாட்டு பதிவாகவும் மானுடவியல் சார்ந்தபல தகவல்களை அளிக்கும் விதமாகவும் அமைந்திருக்கிறது என்பது கூடுதல்சிறப்பு.

பெரிய பாறை போல் இருக்கும் கற்கள் சிறிதாக வெட்டப்பட்டு பட்டைதீட்டப்பட்டு வழவழப்பாக ஆக்கப்பட்டால் அவற்றை மணிகள் என்றுஅழைக்கிறார்கள். இன்று பட்டை தீட்டப்பட்டு பல லட்சம் கோடிகளுக்குவிற்க படும் இரத்தின கற்களுக்காய் எத்தனை ஏழைகளை தங்கள் உயிரைபணயம் வைத்து கூலிக்கு உழைக்கிறார்கள் என்பதை அறிய நேரும் போதுநம் ரத்தம் கொதிக்கிறது. அவர்களுக்கு வரும் சிலிகாசிஸ் வகை கேன்சரும்அதனால் அவர்கள் படும் பாடுகளும் வார்த்தைகளில் விளக்க முடியாத துயரம்நிறைந்தவை. கடைசியில் முல்லை என்ன செய்தாள், அவளின் ஆவணப்படம்என்ன ஆனது? அவளது தேடல் அவளை எங்கு கொண்டு நிறுத்தியது போன்றமுடிச்சுகளை அவிழ்க்க மிளிர் கல்லின் பக்கங்களை புரட்டவும். நவீனும்முல்லையும் ஒத்த வயதுடைய ஆண் பெண் என்ற போதும் அவர்கள் போகும்பயணத்தில் அவர்களின் சொந்த உணர்வுகளை பற்றி அதிகம் எழுதாமல்வாசகர்களின் யூகத்திற்கு விட்டு விடுகிறார் ஆசிரியர். சிறியதோ பெரியதோஎல்லா விஷயங்களிலும் ஒருஅரசியல் இருக்கிறது அதை கவனமாக கையாளவேண்டும் என்பதையும் சொன்ன விதத்தில் மிளிர்கல் மிளிர்கிறது.