தொடர்கள்
பொது
சொத்து வேணுமா ?? - அம்பானி குடும்பத்தில் பிறக்கணும் - மாலா ஶ்ரீ

2022060120025621.jpg

இந்தியாவின் அன்றைய பம்பாயின் புலேஷ்வர் பகுதியில் கடந்த 1958-ம் ஆண்டு திருபாய் அம்பானி-கோகிலா பென் தம்பதி, தங்களின் 4 குழந்தைகளுடன் குறைந்த வாடகை கட்டிடத்தில் குடியேறினர். அந்த 4 குழந்தைகளில் முகேஷ் அம்பானியும் ஒருவர். பின்னர் உறவினர் ஒருவருடன் இணைந்து திருபாய் அம்பானி ரிலையன்ஸ் கமர்ஷியல் கார்ப்பரேஷனை துவக்கினார், நாளடைவில் இது ஆர்.ஐ.எல் (RIL) நிறுவனமாக வளர்ந்து, இந்திய எரிசக்தி மற்றும் பொருட்களின் முன்னணி நிறுவனமாக திகழ்ந்தது.

அன்றைய பம்பாய் பல்கலையில் முகேஷ் அம்பானி ரசாயன பொறியியலில் பட்டம் பெற்று, ஸ்டான்போர்டு பல்கலையில் வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் 1981-ல் அவர் தகவல் தொடர்பு, உள்கட்டமைப்பு, பெட்ரோ கெமிக்கல்ஸ், பெட்ரோலியம் சுத்திகரிப்பு, பாலியஸ்டர் இழைகள் மற்றும் எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு வணிகத் துறைகளில் ஈடுபட்டார். 2004-ல், தொழில்முறை சேவை நிறுவனமான பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் மூலம் உலகின் மிகவும் மதிக்கப்படும் வணிகத் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

இதற்கிடையே கடந்த 2002-ம் ஆண்டு திருபாய் அம்பானி மரணமடைந்ததைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் கூட்டு தலைமையை சகோதரர்களான முகேஷ், அனில் அம்பானிகள் ஏற்றனர். இருப்பினும், சகோதரர்களின் கட்டுப்பாட்டின் மீதான சண்டைகள், ரிலையன்ஸின் சொத்துக்களை ஒரு போட்டியற்ற ஒப்பந்தத்தின் மூலம் (2006-10ல்) தாய் கோகிலா பென் பிரிக்க நேர்ந்தது.

இதன்படி ரிலையன்ஸ் நிறுவனத்தின் எரிவாயு, எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் அலகுகளை, ரிலையன்ஸ் குழும (RIL) நிறுவனத்தின்கீழ் முகேஷ் அம்பானி கட்டுப்படுத்தினார். உலகின் மிகப்பெரிய ஸ்டார்ட்-அப் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலையை உருவாக்கியும், RIL-ன் உற்பத்தி திறன்களை பெருமளவில் அதிகரிக்க, பல்வேறு அதிநவீன உற்பத்தி வசதிகளை உருவாக்குவதில் முகேஷ் அம்பானி முக்கிய பங்கு வகித்தார். கடந்த 2010-ல் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், தொலைதொடர்பு மற்றும் இ-காமர்ஸுக்கு அர்ப்பணிக்கப்பட்ட RILன் துணை நிறுவனமாகும். 2016-ம் ஆண்டில் இந்தியா முழுவதும் ஜியோ பிராண்ட் 4ஜி பிராட்பேண்ட் சேவைக்கான நெட்வொர்க்கை ரிலையன்ஸ் வழங்கியது.

தற்போது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) சந்தை மதிப்பு ₹10 லட்சம் கோடிகளை தாண்டியுள்ளது. இந்திய பங்கு சந்தையில் இதுவரை எந்த கம்பெனியும் அடையாத பெருமையை ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ளது. முதலில் பாலியஸ்டர் (polyester) கம்பெனியாக உருவெடுத்த ரிலையன்ஸ், பின்பு ஆயில் அண்ட் காஸ் (OIL&GAS), ரீடைல் (Retail) மற்றும் டெலிசர்வீசஸ் (Telecom ) துறைகளிலும் கால் பதித்து, தனது சர்வ வல்லமையை நிரூபித்தது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத் தலைவராக, இந்தியாவின் டாப் பணக்காரர்களின் ஒருவராக முகேஷ் அம்பானி திகழ்கிறார். ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்கார குடும்பங்களில் ஒன்றாக முகேஷ் அம்பானியின் குடும்பம் திகழ்கிறது. அவருக்கு நீட்டா அம்பானி என்ற மனைவி, ஆகாஷ், ஆனந்த் என்ற 2 மகன்கள், இஷா என்ற மகள் உள்ளனர்.

20220601200326312.jpg

இந்நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின்கீழ் ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் வென்ச்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவராக மூத்த மகன் ஆகாஷ் கடந்த 28ம் தேதி நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, இன்னும் ஓரிரு நாட்களில் ரிலையன்ஸ் ரீட்டெய்ல் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் இயக்குநராகப் பணிபுரியும் மகள் இஷா அம்பானி விரைவில் அந்நிறுவன தலைவராக நியமிக்கப்படுகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரிலையன்ஸின் 2 நிறுவனங்களின் தலைவர்களாக பொறுப்பேற்கும் முகேஷ் அம்பானியின் அடுத்த தலைமுறை வாரிசுகளான ஆகாஷ், இஷா அம்பானி ஆகியோர் இரட்டையர்கள் எனக் குறிப்பிடத்தக்கது.